குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சகோதரர்கள் திரு. சச்சின் (Mr.Sachin) திரு. விஷால் சோப்ரா குறைந்த விலையிலான மின் மிதிவண்டியினை கண்டுபிடித்து வடிவமைத்து "அல்ஃபா வெக்டார்" (Alpha Vector) என்ற நிறுவனத்தின் மூலம் 2015 - ஆண்டுமுதல் வணிகப் படுத்தியுள்ளனர்.
நூல் மற்றும் துணிகள் வணிகத்தில் சாதனை படைத்துள்ள பொறியாளர்கள் நிறைந்த குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்ட சச்சின் சகோதரர்கள் அமெரிக்காவின் புர்டு பல்கலைக்கழகத்தில் (Purdue University USA) கணினி துறையில் பொறியாளர் பட்டம் பெற்று வார்ட்டன் (Wharton University) பல்கலையில் வணிகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சிறிது காலம்பன்னாட்டு நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்ற பின்னர்
2015 ஆண்டு “ஆல்ஃபா வெக்டர்” நிறுவனத்தைத் துவங்கி உள்ளனர்.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு மின்வாகனங்கள் அளவில் 20 மில்லியன் வணிகம் நடைபெறுகின்றது என்ற ஒரு புள்ளி விவரத்தின் படியும் உலகெங்கிலும் பல கோடி மிதிவண்டிகள் தேவையுள்ளது என்ற யதார்த்த நிலை கருதியும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின் மிதிவண்டிகளின் வணிகத்தைத் தெரிவு செய்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் பல மிதிவண்டிகள், ஸ்கூட்டர்கள் பைக்குகள் மற்றும் இலகுரக கார்கள் இருந்தாலும் "மெ ராக்கி மின் மிதிவண்டிகள்" அதன் சிறப்பான வடிவமைப்பு மற்றும் குறைந்த விலையின் காரணமாக தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.
"மெராக்கி" மிதிவண்டியின் சிறப்புகள்:
1. வடிவமைப்பும் தோற்றமும் கவரும் வகையில் உள்ளது.
2. பெரும்பாலான மிதி வண்டியின் பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.
3. சக்திவாய்ந்த லித்தியம் அயான் பேட்டரிகள் அனைத்தும் மிதிவண்டியின் சட்டகத்தின் (Frame) உள்ளேயே பொருத்தப்பட்டுள்ளது.
4. முழுமையான பேட்டரிகள் மின்னேற்றம் பெற குறைந்த நேரமே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
5. ISO MTB வகை தரச்சான்று பெற்றுள்ளது.
6. சுமார் 2000 முறைகள் மின்னேற்றம் செய்ய இயலும்.
7. 250- வாட் IP 65 நீரால் பாதிக்கப்படாத (Water Proof) BLDC மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது.
8. 6.36 AH சக்தி கொண்ட லித்தியம் அயான் பாட்டரிகள் ஒரு ஆண்டு உத்திரவாதத்துடன் (1 Year warranty) வழங்கப்படுகிறது.
9. களவு போவதை தவிர்க்க எச்சரிக்கை ஒலியுடன் கூடிய பூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது.
10. தானியக்க மின் மிதிவண்டி யாகவும் சாதாரண மிதிவண்டி யாகவும் இயக்க முடியும்.
11. ஓட்டுனர் உரிமம் தேவையில்லை.
12. பேட்டரியின் மின் அளவை காட்டும் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
13. மிதிவண்டி 22 கிலோ இலக்கு எடை கொண்டது.
14. "மெராக்கி" மிதி வண்டியின் விலை ரூ 29,999/- மட்டுமே. சந்தையிலுள்ள இதைப் போன்ற மற்ற வாகனங்களை விட விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
2022 - ஆண்டில் சுமார் ரூ 600/- கோடி வணிகத்தை இலக்காக கொண்டு செயலாற்றி வரும் "அல்ஃபா வெக்டர்" நிறுவனம் வெற்றி பெறும் என்பது நிதர்சனம்.
Website: https://www.outdoors91.com/
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.