November 09, 2020

துல்லியமான விவசாய தானியங்கி தொழில்நுட்பம். (Fully Automatic Precision Farming)

விவசாயம் என்பது புவியியல் (Geography), ரசாயனம் (Chemistry), தட்பவெப்ப வியல் (Weather). சரியான நேரம் (Timing) உள்ளடங்கியது. இவற்றில் எது வேறுபட்டாலும் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும். இவை அனைத்தும் துல்லியமாக பராமரிக்கப்பட்டால் விவசாய உற்பத்தி இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.பென்ஜமின் ராஜா 2012 - ஆம் ஆண்டில் தனது நிறுவனத்தினைத் துவக்கி துல்லியமான விவசாய தானியங்கி தொழில்நுட்பத்தினை விவசாயிகளின் பயன்பாட்டில் நிர்மாணித்து வருகிறார்



தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சம்:

1. புவி அமைப்பு, தட்பவெட்பம், விவசாய நிலத்தின் ராசாயன நிலை மற்றும் செயல்படுத்தப்படும் நேரம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் எப்போதெல்லாம் நிகழ்கிறது என்பதை அறிதல் (Assessing Variation).

2. இவை அனைத்தும் எந்த அளவிற்கு வேறுபடுகின்றன என்று கண்டறிதல் (Assessing Variability)

3. இவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதை வகைப்படுத்தல் (Managing Variation). மற்றும் வேலாண்மை

திரு.பென்ஜமின் ராஜா ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார் தானியங்கி உனர்விகள் (Automatic Sensors)  மேல் கூறியுள்ள அனைத்திற்கு மான சரியான தீர்வினை தானாகவே செயலாற்றுகிறது.

- மண்ணின் ஈரத்தன்மையை உணர்ந்து தேவையான அளவிற்கு மட்டுமே நீர் பாய்ச்சுதல் செயலை நடத்துகிறது.

- மண்ணின் வளம் உணர்ந்து தேவையான அளவிற்கு செயலிகள் உறமிடுகின்றன.

- ஒரு செயலி 1/2 ஏக்கர் விவசாய நிலம் முதல் 30 கி.மி பரப்பளநிலம் வரையில் செயல்படுகிறது.

- வெளி நாடுகளில் இத்தகைய செயலிகள் அமைக்க சுமார் 25 லட்சம் ரூபாய் வரையில் ஆகும் நிலையில் திரு.பென்ஜமின் அறிமுகப்படுத்தியுள்ள செயலி ரூ.2.5 லட்சம் மட்டுமே. மேலும் இச்செயலிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நேரடி மின்சாரமும், சூரிய ஒளி மின்சாரமும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் நன்மை.

திரு.பென்ஜமின் அறிமுகப்படுத்தியுள்ள தொழில் நுட்பத்தினை நபார்டு வங்கி (National Bank For Agriculture and Rural Development) அங்கீகரித்துள்ளது. இதுவரையில் சுமார் 3500 விவசாயிகள் 4000 ஏக்கர் விவசாய நிலத்தின் மூலம் பெருமளவில் பயனடைந்துள்ளனர்.

அவர்களில் சிலர்:

1. துங்கவி கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜரத்தினம் கனகராஜன் தனது 14 ஏக்கர் நிலத்தில் இரண்டு மடங்கு உற்பத்தி அதிகரித்துள்ளது கூறுகிறார் மேலும் 99% பிரச்சனைகள் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மூற்றிலும் நிவர்த்தி ஆனதாக மகிழ்ச்சி அடைகிறார்.

2. பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு பரம்பரை விவசாயி திரு. தயாளன் தரிசாகக் கிடந்த நிலைத்தினை இந்த தொழில் நுட்ப உணர்விகள் மூலம் வளமான விவசாய நிலமாக மாற்றியுள்ளதாக பெருமைப்படுகிறார்.

3. உடுமலையைச் சேர்ந்த திரு. அரவிந்த் என்ற விவசாயி 22 ஏக்கர் நிலத்தில் தரிசாக இருந்த 18 ஏக்கர் நிலத்தினை உணர்ந்து செயல்படும் தானியங்கி செயலியின் மூலமாக வளமுள்ள நிலமாக மாற்றியுள்ளதாக கூறுகிறார்.

திரு.பெஞ்சமின் அவர்களின் இத்தகைய தானியங்கி உணர்வி செயலிகள் விவசாயிகளின் உற்பத்தியைப் பெருக்கி அவர்களின் பொருளாதார நிலையினை பெருமளவு உயர்த்தும் என்பது நிதர்சனம்.

Farm Again:

#20, 2nd Layout, Krishnasamy Nagar, Ramanathapuram, Coimbatore - 641 045.

91springboard, 5th Floor, #175 & #176,

JP Nagar 4th Phase, Bannerghatta Road, Bengaluru - 560076.

#97, Teachers Colony, Perumalpuram Post, Tirunelveli – 627007.

Contact: 1800-120-4143

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories