July 17, 2020

சாண பூந்தொட்டிகள்

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தரம் சாலாவில்  பீபல் (Peepal) என்ற வியாபார நிறுவனம் 2014 ஆம் ஆண்டு  பண்ணையினை (Peepal farm) சில நண்பர்களுடன் கூட்டுமுயற்சியில் வாங்கியது. விவசாயிகளின் துன்பத்தை குறைக்கவும் வயதான,நோயற்ற, மற்றும் புறக்கணிக்கப்பட்ட பசுக்களை பராமரிக்கத் துவங்கியது. ஆரம்பத்தில் வியாபார நிறுவனத்தின் அங்கத்தினர்களின் பொருளாதார பங்களிப்பில் பசுக்களை பராமரித்தாலும் பின்னாளில் பொதுமக்களின் பங்களிப்பு அதிகமானது.

பசுக்களின் கழிவுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்த முயன்றதன் விளைவு சாணப் பூந்தொட்டிகள்.பொதுவாக செடி நாற்றுகள் விற்கும் நர்சரி மையங்களில் பிளாஸ்டிக் பைகளில் தான் அதிகம் விற்கப்படுகின்றன.அச் செடிகள் மண்ணிலோ,பெரிய மண் சிமெண்ட் தொட்டிகளில் மாற்றிய பின் பிளாஸ்டிக் பைகள் தூக்கி வீசப்படுகின்றன.கால்நடைகள் மேய்ச்சல் நிலங்களில் இருக்கும் இந்த பிளாஸ்டிக் பைகள் கால்நடைகளால் உண்ணப்பட்டு பலவிதமான வயிற்று உபாதைகளுக்கு ஆளாவது மட்டுமல்லாமல் உயிர்  இழப்பும் ஏற்படுகிறது. தண்ணீரில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் நீர்வழி உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றது.

இத்தகைய கால்நடைகளின் பேரழிவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒரே தீர்வு பசுக்களில் பூந்தொட்டிகள் தான்.சாண தொட்டிகளில் வளர்க்கப்படும் செடிகள் வளர்ந்தபின் இடமாற்றம் செய்யும்போது அப்படியே குழிதோன்டி தொட்டி உடன்  வைத்து விடுவதன் மூலம் கால்நடைகளுக்கும்,சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை தடுக்க முடியும் என பத்மாஷ் பீபல் நிறுவனத்தின் ஸ்தாபகர் ராபின் சிங்
கூறுகிறார். முழுக்க முழுக்க இந்த கூற்று உண்மை தானே? சாண தொட்டிகள் மிக எளிமையான 6 அடிகளில் செய்ய வழிமுறைகளை தலைநகர் டெல்லியில் உள்ள புனித பசு ஸ்தாபனம் (Holy cow foundation) என்ற அமைப்பு கூறுகிறது.

1.மாட்டு சாணத்தை சேகரித்தல்

2. அதில் உள்ள குப்பைகள் மற்றும் மண் புழுக்களை நீக்குவது.

3.சுத்தப்படுத்திய சாணத்தினை(Mould) அச்சில் நிறப்புவது.

 

4. அச்சில் உள்ள சாணத்தினை நாமே அழுத்துவது (compress manually)

5.அச்சில் அழுத்தப்பட்ட சாண தொட்டியை லாவகமாக எடுப்பது.

6.இறுதியாக 24 மணிநேரம் சூரிய ஒளியில் காய வைப்பது.

இப்போது சானத் தொட்டிகள் தயார்.

சாணதொட்டிகள் மிகக் குறைந்த விலையில் ரூ 15 க்கு அருகிலுள்ள தோட்டக்காரர்கள்,கடைகள் மற்றும் நர்சரி தோட்டங்கள் வைத்திருப்பவர்கள் வாங்கி செல்கிறார்கள். "சமூக ஆதரவுடன் விவசாயம்" என்ற மாதிரி முகமையை அமைத்து அங்கத்தினர்களின் பங்களிப்புடன் மாதம்தோறும் செடிகளை சாணத் தொட்டிகளில் விற்பனை செய்து அதன் மூலம் பெறும் வருவாயினை கொண்டு பசுமாடுகளை பராமரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று ஸ்தாபகர் ராபின் சிங் கூறுகிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாத்து,மனிதநேயமிக்க, இயற்கையோடு இயைந்த வாழ்வினை மேற்கொள்வோம்.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories