September 11, 2021

சோலார் குக்கர் ("Solar Cooker")

உலகமெங்கும் கார்பன் உமிழ்வை (Carbon Emission) குறைக்கவும், படிம எரிபொருட்கள் (Fossil Fuel) பயன்பாட்டை குறைக்கவும் இயற்கை சக்திகளான சூரிய ஒளி மற்றும் காற்றினை பெருமளவு பயன்படுத்தவும் தொடர்ந்து பல மாதிரியான தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.



அந்த வகையில் 1997 - ஆண்டில் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் (Auroville) - லில் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர் சுஹாசினி ஐயரின் (Suhasini Iyer) வடிவமைப்பு ஆலோசனையின்படி டாடா எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (Tata Energy Research Institute) 18 மீட்டர் அகலம் உள்ள "சோலார் கிண்ணம்" (Solar Bowl) நிர்மாணம் செய்துள்ளது. இது சூரிய ஒளியை பயன்படுத்தி தண்ணீரை நீராவியாக மாற்றி சமயலறையில் பகல் முழுவதும் சமைக்கக்கூடிய அளவில் (சுமார் 1000 உணவுகளை) சமைக்க பயன்படுத்தப்படுகிறது.



அமைப்பு மற்றும் செயல்பாடு:

தமிழகத்தில் உள்ள ஆரோவில்
"சோலார் சமையலறை" (Solar Kitchen) நிலையான கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. ஏனெனில் சமையலுக்கான  சூரிய வெப்ப நீராவியை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் கட்டிடத்தின் உட்புரங்களை குளிர்ச்சியாகவும், நீர் மறுசுழற்சி மற்றும் கம்போஸ்ட் உரம் தயாரிக்கவும் செய்கிறது.

சூரிய கட்டிடத்தின் ஒரு பகுதியாக நீராவியை உருவாக்க சூரிய வெப்ப ஆற்றலை பயன்படுத்துவது மற்றும் சூரிய வெப்ப கதிர் வீச்சை உறிஞ்சுவதற்கு உகந்த கட்டிட வடிவமைப்பு, இயற்கை காற்றோட்டம் மற்றும் சூரிய புகைபோக்கிகள் அனைத்தும் கொண்டது.



சோலார் கிண்ணம் கலப்பு கிரானைட் மற்றும் சுருக்கப்பட்ட பூமித் தொகுதிகளின் (Compressed) Earth Blocks) சுவர்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மொத்தம் 96 முன்பே தயாரிக்கப்பட்ட ஃபெரோஸ்மெண்ட் கூறுகளைக் (Prefabricated Ferrocement Elements) கொண்டுள்ளது. மேலும் 11,000 கண்ணாடி பிரதிபலிப்பான்கள் (11,000 Mirror Reflectors) வரிசையாக அமைக்கப்பட்டு சரியான மற்றும் நிலையான கோளக் கிண்ணத்தை (Perfect and Fixed Spherical Bowl) உருவாக்குகிறது.

அனைத்து திசைகளில் நகரும் கிண்ணத்தில் ஒரு டிராக்கிங் கொதிகலர் (Tracking Boiler) பொருத்தப்பட்டுள்ளது. மையத்தில் வைக்கப்பட்டுள்ளன இரட்டை அச்சை சுற்றி இந்த கொதி கலனுக்கு தண்ணீர் செலுத்தப்படுகிறது. இது சூரிய ஒளியை பயன்படுத்தி அதை நீராவியாக மாற்றுகிறது.

நீராவி பின்னர் சமையலறை கலப்பின  கொதிகலனுக்கு (Hybridised Boiler) கொண்டு செல்லப்படுகிறது. அதாவது காலை 5 மணியிலிருந்து சமையலுக்காக டீசல் கொதிகலனாக செயல்பட்டு 11 மணிக்கு மேல் சூரியன் உச்சத்தில் இருக்கும்போது டீசல் கொதிகலன் அணைக்கப்பட்டு முழுக்க முழுக்க சூரிய நீராவியால் சமையல் செய்யப்படுகிறது.

பிற சுற்று சூழல் நட்பு நடவடிக்கைகள்:-

(Other Eco-friendly Measures)

1. இயற்கை கட்டிடப் பொருட்களின் தீவிர ஆதரவாளர் கட்டிடக்கலைஞர் சுஹாசினி அவர்கள் கட்டிடம் கட்டும் போது குறைந்தபட்சம் தண்ணீர் தேவைப்படும் எஃகு அல்லது சிமெண் போன்ற பொருட்களை பயன்படுத்தியுள்ளர். உள்ளூர் பூமியிலிருந்து சுருக்கப்பட்ட பூமி தொகுதிகளை (Compressed Earth Blocks CEB) பயன்படுத்தியுள்ளார். இது போக்குவரத்து செலவை குறைத்தது மட்டுமல்லாமல் கார்பன் தடம் (Carbon Foot Print) கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது.

2. கட்டிடம் சாம்பல் நீர் மறுசுழற்சி (Grey water Recycling) உரம் தயாரித்தல் மற்றும் மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றையும் உறுதி செய்கிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கிட்டத்தட்ட 70 சதவீதம் சாம்பல் நீரை மறுசுழற்சி செய்பப்பட்டு தோட்டத்திற்கு நீர் பாசனம் செய்யப்படுகிறது.

3. சுற்றியுள்ள பூமி தொகுதிகளை பயன்படுத்தி உள்ளதால் திட்டச் செலவுகள் 10 - 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

4. சோலார் கிண்ணம் மற்றும் திறந்த வெளிகள் மூலம் இயற்கை காற்று காற்றோட்டம் காரணமாக மின் நுகர்வு குறைக்கப்பட்டுள்ளது.

5. கட்டிடப் பொருட்கள் வெப்பத்தை உறிஞ்சி உட்புறங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

6. உற்பத்தி தீவிர (Manufacturing - Intensive Construction Process) கட்டுமான செயல்முறை தவிர்ப்பதன் மூலம் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தி உள்ளது.

7. இட்லி மற்றும் அரிசி, காய்கறிகள் போன்ற பல தென்னிந்திய உணவுகள் வேகவைக்க வழக்கமான வாயு விறகுகள் மற்றும் மின்சார ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது இதற்கு சோலார் இன்னும் ஒரு நிலையான மாற்றாகும் மேலும் இந்தியாவில் பல உணவு பதப்படுத்தும் தொழில்களும் அதை பிரதிபலிக்கின்றன.

ஆரோவில் சோலார் கிச்சன் போன்ற விரிவான மற்றும் நிலையான அமைப்புகள் தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்திற்குச் சிறந்தது.

Contact   solarkitchen@auroville.org.in

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

Stories