November 25, 2020

பசுமைமிகு அறிவுத் தோட்டம்

"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழன்று உழவே தலை"

உலகத்தவர் பல காரணங்களால் பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும் முடிவில் உணவின் பொருட்டு உழவரையே எதிர்பார்ப்பார் ஆகையால் உழவே தலையாய தொழில்.

என்ற பொய்யா மொழியாரின் வாக்கின்படி

" வேலுர் மாவட்டத்தின்  காட்பாடியைச் சேர்ந்த திரு.செந்தமிழ்ச் செல்வன், 63 வயதான, 36 ஆண்டுகள் வங்கிப் பணியினை நிறைவு செய்தபின் விருப்ப ஓய்வு பெற்று தற்சமயம் விவசாயப் பணியினை மேற்கொண்டு நடத்திவருகிறார்.



Loom Solar

சூழ்நிலைகள், நிர்பந்தங்கள் மற்றும் இன்ன பிற காரணங்களால் வங்கிப் பணியினை செய்து வந்தாலும் மனதளவில் உள்ளோட்டமாக இருந்த விவசாயம் என்னும் வாழ்க்கை முறை உந்துதலின் காரணமாக சொந்த வீட்டையே விற்று 40 லட்ச ரூபாய்க்கு மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி "அறிவத் தோட்டம்" என்னும் மாதிரி பண்ணையை நடத்தி வருகிறார். பொதுவாக பணியில் இருந்து வரும் நடுத்தர மக்களின் விருப்பம் வாழ்நாள் கனவாக சொந்த வீடு என்பது யதார்த்த நிலை ஆனால் வீட்டை விட்டு விவசாயம் செய்யும் திரு.செந்தமிழ் செல்வன் அவர்கள் மிகவும் பாராட்டத்தக்கவர்.

தற்சமயம் அறிவு தோட்டத்தில் 110 தென்னை மரங்கள், 90 மாமரங்கள், 25 சப்போட்டா மரங்கள், 33 எலுமிச்சை செடிகள், பல வாழை மரங்கள், கத்தரிக்காய், தக்காளி, மிளகாய் மற்றும் பலவகையான கீரை வகைகளும் பயிர் செய்யப்படுகிறது. இதுவரையில் 150 விவசாயிகள் பெற்றோர் அமைப்புகளை (Parent Groups) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை "அறிவுத்தோட்டம்" கவர்ந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2014 -ல் விருப்ப ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னரே 2012 -ல் வரண்ட, பொட்டல் நிலத்தை (Barren Land) வாங்கி இரண்டு வருடங்களில் தேவையான குழாய் கிணறுகள், வேலி அமைத்தல், இயற்கை உரங்களை கொண்டு வளப்படுத்தல் அனைத்தையும் செய்த பின்னர் முழுநேர விவசாயியாக மாறியுள்ளார்.

தற்சமயம் 15000 தேங்காய்கள், 4 டன் மாங்காய்கள் எலுமிச்சம் பழங்கள், சப்போட்டா பழங்கள், வாழைப்பழங்கள் அறுவடை செய்து சுமர் 6 லட்சம் ஈட்டி வருகிறார். இந்த வருமானம் மிகப்பெரிய தொகை இல்லை என்றாலும் எந்த விதமான ரசாயனமும் பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் செய்து நஞ்சில்லா விளைவுகளை மக்களுக்கு அளிக்க முடிகிறது என்ற மனநிறைவு வேறு எதிலும் இல்லை என்று கூறுகிறார். திரு. செந்தமிழ்ச் செல்வன.

தொடர்புக்கு: +91 9443032436

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories