April 05, 2021

வளர்ப்பு இறைச்சி (Cultured Meat)

"வளர்ப்பு இறைச்சி" (Cultured Meat) என்பது தேவையான விலங்கின் "செல்" (Cell) களை பிரித்தெடுத்து அவற்றை சத்துப் பொருட்கள் கலந்த ஒரு மீடியத்தில் (Media) இறைச்சியாக வளர்த்தெடுப்பது என்று பொருள்படும்.

உலகமெங்கிலும் வளர்ந்து வரும் மக்கள் தொகை அதிகரிப்பு, அவசியத் தேவை மற்றும் நகரமயமாக்கல் காரணமாக 2050 - ஆம் ஆண்டுளவில் இறைச்சி நுகர்வு இரட்டிப்பாககும் என்றும் விலங்குகளை உள்ளடக்கிய வழக்கமான இறைச்சி உற்பத்தி முறைகளால் பூர்த்தி செய்ய முடியாது என்றும் வல்லுனர்களால் கணிக்கப்படுகிறது. உலகளவில் விவசாய நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு கால்நடைகளுக்கான சாகுபடிக்கு பயன்படுத்தபடுகிறது விவசாய நிலம் குறைந்து வருவதால் இறைச்சிக்கான கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்த இயலாது என்பது மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

"வளர்ப்பு இறைச்சி" "அல்லது செயற்கை இறைச்சி" பொதுவாக தொழில்நுட்ப வல்லுனர்களால் ஆல் மூன்று வகையான இறைச்சி மாற்றீடுகளை (Alternative) குறிக்கிறது.

1. தாவரங்கள் (Plants)

2. பூஞ்சைகள் (Fungus)

3. விலங்குகள் (Animal)

"வளர்ப்பு இறச்சி" அல்லது "செயற்கை இறைச்சி" அல்லது "சுத்தமான இறைச்சி" என்பது தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் விலங்குகளின் செல்களை பிரித் தெடுத்து வளர்க்கப்படுகிறது.

அடிப்படையாக "வளர்ப்பு இறைச்சி" ஐந்து வகையான தொழில்நுட்பங்களை (Technique) கொண்டது.

1. செல்வளர்ப்பு தொழில்நுட்பம்

(Cell Culture or Scaffolding Technique)

2. தன்னேற்பாடு தொழில்நுட்பம்

(Self Organizing or Tissue Culture Technique)

3. உறுப்பு அச்சுத் தொழில்நுட்பம்

(Organ Printing)

4. உயிரியக்கவியல் தொழில்நுட்பம்

(Bio - Photonics)

5. நுண்ணிய தொழில்நுட்பம்

(Nano Technology)

வளர்ப்பு இறைச்சியின் உற்பத்தியில் செயல்முறை விளக்கம் படத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.




 

வளர்ப்பு/ இன் விட்ரோ செயற்கை இறைச்சியின் சிறப்புகள்/ சாதகங்கள் (Advantages).

1. சரியான வடிவமைப்பின் மூலம் ஆரோக்கியமான இறைச்சியை உருவாக்க முடியும். கொழுப்பு அமிலம் (Fatty Acid) மற்றும் ஊட்டச்சத்துக்களின் (Nutrients) கலவையை மாற்றுவதன் மூலம் செயற்கை ஒமேகா-3 (Omega - 3) போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளுடன் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளை நீக்கி இறைச்சியை உருவாக்க முடியும்.

2.மிகக் குறைந்த காலத்தில் அதாவது சில வாரங்களிலேயே வளர்ப்பு இறைச்சியை (Cultured Meat) பெருமளவு உற்பத்தி செய்ய முடியும்.

3. செயற்கை வளர்ப்பு இறைச்சி விலங்குகளைக் கொல்வதை தடுக்கிறது. ஏனெனில் விலங்கில் இருந்து ஒரு சிறிய மாதிரி தசை செல்களை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

4. விலங்குகள் உணவுக்கான வளமான நிலம் குறைக்கப்பட்டு மாற்று விவசாயத்திற்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் நட்பு பாதுகாக்கப்படுகிறது.

5. காடழிப்பு மற்றும் வனவிலங்குகள் நில பயன்பாட்டில் குறைப்பு என்பது மறுசீரமைப்புக்கான வாய்ப்பைத் தருகிறது.

6. இறைச்சியின் உற்பத்திக்கு விரும்பிய விலங்கின் ஸ்டெம் செல்கள் மட்டுமே தேவைப்படுவதால் குறைந்து வரும் (Endangered) விலங்குகளின் ஸ்டெம் செல் மூலமாகவும் விலங்குகள் பாதிப்பில்லாமல் இறைச்சியை உற்பத்தி செய்ய இயலும்.

7. சைவ இறைச்சி தார்மீக மற்றும் சுகாதார பிரச்சினைகள் காரணமாக சைவ உணவு உண்பவர்கள் செயற்கை இறைச்சியை உண்ணலாம். ஏனெனில் அது விலங்குகளை கொல்வதோடு தொடர்புடையதில்லை.

8. கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் வாழ்க்கை (Controlled Ecological Life) மற்றும் விண்வெளி பயணங்களில் நோயற்ற சுகாதாரமான உணவை வழங்க இயலும்.

9. மாற்றுப் புரத மூலமானது பிற புரத மூலங்களுக்கான தேவை அதிகரிப்பது செயற்கை இறைச்சிக்கு சாதகமானது.

தொழில் நுட்பத்துடன் தொடர்புடைய குறைபாடு:

(Disadvantage):-

1. இது மிகவும் கட்டமைக்கப்பட்ட அல்லது 3D கட்டமைக்கப்பட்ட இறைச்சியை உற்பத்தி செய்ய முடியாது.

2. துண்ணிய தொழில்நுட்பம் ஆனதால் பெரிய அளவில் செலவு பிடிக்கும் தொழிற் சாலைகள் அமைக்க வேண்டும்.

3. செலவு, அளவுகோல் (Scale Up), பொது நியோபோபியா,
டெக்னோபோபியா மற்றும் சுகாதார நலன்களைப் பற்றிய முழுமையற்ற புரிதல் ஆகியவை அதன் வணிக நம்பகத்தன்மை கட்டுப்படுத்துகின்றன.

பொதுவாக விரைவான வணிகமயமாக்ககளுக்கான வளர்ப்பு இறைச்சி ஏற்றுக்கொள்ளலை மேம்படுத்த உணவு ஒழுங்குமுறை அமைப்புகள் வழிகாட்டல்களை தொடர்ந்து வழங்குகின்றன. பெல்ஜியம், ஆஸ்திரேலியா, போர்ச்சுகல், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் பல உலக நாடுகளில் பல சட்டரீதியாக அனுமதியும் மக்கள் இடையே பெருமளவில் வளர்ப்பு இறைச்சி வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் விஞ்ஞானிகள் பன்றியின் 10 தசை செல்களைக் கொண்டே இரண்டு மாதத்தில் 50,000 டன்கள்  வளர்ப்பு இறைச்சியை உற்பத்தி செய்து சாதனை நிகழ்த்தி உள்ளனர் என்பது கூடுதல் தகவல் எதிர்கால உலகின் புரதத் தேவையை "வளர்பு இறைச்சி" மட்டுமே  பூர்த்தி செய்யும் என்பது நிதர்சனம். 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories