October 05, 2021

பாரம்பரிய மண் கலவை வீடு "Natural Mud House"

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோயிலில் வசிப்பவர் திரு.C. ஜவஹர். தனக்காக 3200 சதுர அடியில் கட்டப்பட்ட வீட்டின் கட்டுமானத்தை சிமெண்ட் இல்லாத நிலையான சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக பாரம்பரிய வீட்டினை கட்டியுள்ளார்.



நமது மூதாதையர்கள் தங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் வீடுகளை கட்டி வாழ்ந்தனர். இத்தகைய வீடுகள் நன்கு காற்றோட்டமாக இருந்தன கிட்டத்தட்ட மூன்று தலைமுறையினர் சுகமாக வாழ்ந்திருந்தனர் அவர்களின் சூழல் நட்பு இல்லத்தால் ஈர்கப்பட்டதால் திரு.C ஜவஹர் 27 வயதான கட்டிடக்கலை பொறியாளர் திரு. அரவிந் மனோகரின் "பிழை அழகு" (Beauty of Mistakes) என்ற நிறுவனத்தை நாடி தனது வீட்டினை நிர்மாணித் துள்ளார்.



இந்த வீடு வெல்லம், கடுக்காய், முட்டையின் வெள்ளைக்கரு, சுண்ணாம்பு கலவை, களிமண் செங்கற்கள் மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் மூங்கில்கள் கழிவு செய்யப்பட்ட மரச் சாமான்களை பயன்படுத்தி பாரம்பரிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

வீட்டின் சுவர்கள் வழக்கமான செங்கற்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. ஆனால் சிமெண்டிற்கு பதிலாக அவை சுண்ணாம்புச் சாறு, மணல், வெல்லம், நொறுக்கப்பட்ட கடுக்காய் மற்றும் தண்ணீர் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது செங்கற்களில் பூச்சு (Plastering) ஐந்து அடுக்குகளில் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிக பிராணவாயுவை கொண்ட கட்டடத்தின் சுவாசத்தை உறுதி செய்கிறது.
சுவர் பூச்சு முதல் அடிப்பகுதி சுண்ணாம்பு மணல் மற்றும் நீர் கலவையை பயன்படுத்தப்பட்டுள்ளது இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு தண்ணீர் சுண்ணாம்பு மற்றும் நொறுக்கப்பட்ட கடுக்காய் கலவை பயன்படுத்தி பூசப்பட்டுள்ளது.



நான்காவது அடுக்கு சுண்ணாம்பு, தண்ணீர் மற்றும் டால்கம் பவுடரை உள்ளடக்கியது.

ஐந்தாவது மற்றும் இறுதி அடுக்கு முட்டை வெள்ளையுடன் மீண்டும் சுண்ணாம்பு மற்றும் தண்ணீரின் கலவையாகும்.

சுண்ணாம்பு கோடை காலத்தில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. மற்றும் குளிர்காலத்தில் வெப்பத்தை வெளியேற விடுவதில்லை.

வீட்டின் கூரைகள் அருகிலுள்ள காரைக்குடி பழைய மரசந்தையில் இருந்து பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்ட மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கறையான் தாக்குதலில் இருந்து மரம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வாழை இலைகள் அல்லது தாமரை இலைகள் மரத்திற்கும் செங்கற்களுக்கும் இடையில் வைக்கப்பட்டுள்ளது.



தரைக்கு சுண்ணாம்புடன் பெத்தாம் செர்லா (Betham Cherla) கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுவர் பூச்சில் முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்துவது ஒரு பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது.இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நட்பு கட்டிடங்கள் மக்களின் தேர்வாக இருப்பதால் இது போன்ற பாரம்பரிய வீடுகள் பெருகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

Stories