டெல்லியை தலைமை தளமாக கொண்ட ஐ பவர் பேட்டரிஸ் (I Power Batteries) நிறுவனம் திரு.விகாஸ் அகர்வால் (Mr.Vikas Agarwal) அவர்களால் 2020 - ஆண்டில் துவங்கப்பட்டது. அதன் உற்பத்தி தொழிற்சாலை ஹரியானா மாவட்டத்தில் குன்ட்லி (Kundli) என்ற இடத்தில் செயல்படுகிறது.
ஆரம்பத்தில் 2011 - ஆண்டி லிருந்து வழக்கமான ஈயம் அமில பேட்டரிகளை (Lead Acid Batteries) தயார் செய்து கொண்டிருந்த நிறுவனம் ஈயம் ஒரு திரவ உடல்நலம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்பதால் அவற்றை தயாரிப்பதை நிறுத்தி விட்டு மிகவும் திறமையான லித்தியம் அயான் (Lithium - Ion) பேட்டரிகளை தயாரிக்கத் துவங்கினோம் என்று திரு விகாஸ் அகர்வால் நிறுவனத்தின் வரலாற்றைக் கூறுகிறார்.
தற்சமயம் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களான ஜெமோ பாய் (Gemopai), பென்லிங் இந்நியா (Benling India), ஒக்கினாவா ஆட்டோடெக் (Okinava Autotech), மற்றும் ஆம்பியர் எலக்ட்ரிக் (Ampere Electric) உள்ளிட்ட பல்வேறு மின்சார வாகன நிறுவனங்களுக்கு லித்தியம் அயான் பேட்டரி பேக்குகளை உற்பத்தி செய்து வழங்குகிறது. இந்த நிறுவனம் நாட்டின் சிறந்த 20 மின்சார வாகனங்களில் 15 நிறுவனங்களுக்கு லித்தியம் அயான் பேட்டரி தொகுப்புகளை விற்பனை செய்து வருகிறது. ஒட்டுமொத்தமாக இரண்டு,மூண்று மற்று நான்கு சக்கர மின் வாகன தயாரிப்பாளர்களுக்கு லித்தியம் அயான் பேட்டரி தொகுப்புகளை உருவாக்குகின்றன. அவை அவற்றின் விவரக்குறிப்புகள் மற்றும் தேவைகளுக்கேற்ப தயாரிக்கப்படுகின்றன.
ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பேட்டரி செல்களைத் தவிர மற்ற அனைத்தும் வடிவமைக்கப்பட்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய அயான் பேட்டரி தொகுப்புகள் உற்பத்தி செய்யத் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
இந்த பேட்டரி பொதிகளை (Packs) உருவாக்கம் செயல்முறை ஹரியானாவின் இண்ட்லியில் உள்ள 50,000 சதுர அடி உற்பத்தி நிலயத்தில் நடக்கிறது. அங்கு தயாரிப்புகளை சோதிக்கவும் சரிபார்க்கும் தேவையான உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு சுமார் 500 பேட்டரி பொதிகளை (Packs) தயாரிக்க முடியும்.
இருசக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு 1.5 முதல் 2 கிலோ வாட் வரம்பில் விற்கும் பேட்டரி பொதிகள் (Packs) பேட்டரி களுக்கான மொத்த தேவையில் 60 சதவீதம் ஆகும். மூன்று சக்கர வாகனங்களுக்கு 5 கிலோ வாட் லித்தியம் அயான் பேட்டரி பேக்குகளும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 10 கிலோ வாட் பேக்குகளையும் உருவாக்குகிறார்கள். இந்த இரண்டு பிரிவுகளும் பேட்டரிகளுக்கான மொத்த தேவையில் 20 சதவீதத்தை ஈட்டுகின்றன. மீதமுள்ளவை மின் சைக்கிள்களுக்காக தயாரிக்கப்படுகின்றன. 2022 நிதியாண்டில் ரூ 80 கோடி முதல் ரூ.100 கோடிவரை விற்று முதல் அடைய முடியும் என்று அவர்கள் செயலாற்றுவது ஸ்தாபகர் திரு.விகாஸ் அகர்வால் கூறுகிறார்.
Address:
Plot No-82,HSIIDC Industrial Area, Sec-53, Kundli, Sonipat, Haryana, India 131028
Phone: +91.11.25920254/55/56
Email: support@ipowerbatteries.in
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.