June 14, 2021

மொட்டை மாடியில் குறுங்காடு வளர்ப்பு (Urban Jungle)

பெங்களூரு ஒரு "தோட்ட நகரம்" (Garden City) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று இயற்கை தோட்டக் காட்சியானது ஒரு கான்க்ரீட் காடாக மாற்றமடைந்துள்ளது வளர்ந்து வரும் நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக பரவலாக மரம் வெட்டுவது ஆகியவை வெப்பநிலையை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

திரு.நடராஜா உபாத்யாயா (Mr.NatRaj Upadhyaya) உடுப்பியில் உள்ள பரம் பள்ளி கிராமத்தினைச் சேர்ந்த 58 வயது ஓய்வு பெற்ற பொறியாளர் விவசாய குடும்பத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் பெங்களூருவில், பனசங்கரி (Banashankari) பகுதியில் உள்ள தனது வீட்டு மொட்டை மாடியில் 300 வகையான மரங்களைக் கொண்ட 50 வகையான பட்டாம் பூச்சிகள் மற்றும் பல வகையான பறவைகளுக்கு புகலிடமாக ஒரு நகரப்புற காட்டை  (Urban Jungle) உருவாக்கி பராமரித்து வருகிறார்.



2010 - ஆம் ஆண்டில் கோடை காலத்தின் ஆரம்பத்தில் வரவிருக்கும் வெப்பத்தைத் தணிக்க நீர் குளிரூட்டியோ, ஏர் கண்டிஷனரோ அமைக்காமல் தன் வீட்டுக்கு முன் ஒரு தோட்டத்தையும் தனது வீட்டு மொட்டை மாடியில் ஒரு இயற்கை வனத்தினை உருவாக்கி வெப்பநிலையை 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைத்துள்ளார்.

தோட்டக்கலை மற்றும் இயற்கையின் மீதான தனது விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினார் திரு.நடராஜா. அவருடைய முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் திரு.நடராஜா அரிசிபைகள்
(Jute Bags) மற்றும் கழிவு செய்யப்பட்ட கொள்கலன்களில் (Discarded Containers) தாவரங்களை வளர்கத்துவங்கினார் ஆரம்பத்தில் சில காய்கறிகளையும் மருத்துவ தாவரங்களையும் வளர்த்தவர் பின்னர் மறுசுழற்சி செய்யப்பட்ட 55 லிட்டர் கொள்கலன்களல் (Drums) மரங்களை வளர்க்கத் துவங்கினார்.



தொடர்ச்சியான அவரது முயற்சிகள் 300 வகையான தாவரங்கள் வளர்ச்சியைக் கண்டன. இதில் 72 இனங்களின் 100 மரங்கள், புல்லுருவிகள் (Creepers),பழ மரங்கள், காய்கறிகள், மூங்கில், முருங்கை, புளியமரம், காட்டு அத்தி உட்பட பல மரங்கள் வளர்த்து வருகிறார்.

சமையலறைக் கழிவுகளையே கரிம  உரமாக (Organic Fertilizer) பயன்படுத்துகிறார் தாவரங்களை பாதுகாக்க பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதில்லை. டிரம்களில் வளர்க்கப்படும் மரங்கள் 15 அடிக்கு மேல் வளர்வதில்லை. அதற்காக தொடர்ந்து கவாத்து (Pruning) முறையில் இதனை பராமரிக்கிறார். மரத்தை சுற்றி யுள்ள பகுதி பல புதர்களையும், தாவரங்களையும் கொண்டுள்ளது. இவை அனைத்தும்
ஒன்றுக்கு  மற்றொன்று வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இந்த வகையில் சுமார் 1700 தவவர்கள் வளர்வதாக திரு. நடராஜன் கூறுகிறார்.

"மைக்ரோ ஜங்கிள்" என்பது குறைந்த பரப்பளவில் அதிக தாவரங்கள் வளர்ப்பதைப் பற்றிய நிருபணமாகும் இதில் தாவரங்கள், பறவைகள், பூச்சிகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிக்கும் பிற கூறுகள் உள்ளன. இனங்கள் அழிந்து போகும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் யுகத்தில் இதுபோன்ற தனியார் மற்றும் பொது நகரப்புற தோட்டங்கள் அடைக்கலமாக இருக்கும் என்று திரு.நடராஜா மேலும் கூறுகிறார்.
உண்மைதானே? 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories