April 02, 2021

ஹைடெக் தேங்காய் உரிக்கும் இயந்திரம் (Hi Tech Coconut Peeling Machine)

"கூக்கோஸ் நிறுவனம்" (Koocos Industries) கேரள மாநிலத்தின் திரிச்சுர் மாவட்டத்தில் கஞ்சானி (Kanjani) கிராமத்தைச் சேர்ந்த திரு.கே.சி. சிஜோய் (Mr.K.C. Sijoy) 2005 ஆண்டில் ஸ்தாபனம் செய்த நிறுவனம். கேரளாவின் தென்னை விவசாயிகள், சாலையோர இளநீர் வியாபாரிகள் மற்றும் மொத்த தேங்காய் விற்பனையாளர்கள் பயன்பெறும் வகையில் மேம்படுத்திய தேங்காய் உரிக்கும் இயந்திரம் ஒன்றை மென்மையான இளநீர் மற்றும் கடினமான தேங்காய் உடைக்கும் வகையில் வடிவமைத்து தயாரித்து வணிகப்படுத்தியுள்ளார் பொதுவாக தேங்காயை உரிப்பதில் நிறைய உழைப்பும், நேரமும் செலவாகிறது வியாபாரிகளில் பெரும்பாலானோர் அழகான வகையில் தேங்காய் உரித்து காட்சிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை. மேலும் தற்போது சந்தையில் உள்ள அனைத்து பழமையான தேங்காய் உரிக்கும் இயந்திரங்கள் கடினமான மட்டையை உரிப்பதில்லை.


திரு.கே.சி. சிஜோய் இயந்திரம் அவர்களின் அனைத்து வகையான தேங்காய் மட்டைகளை உரிப்பதுடன் அவற்றை சிறு துண்டுகளாக்கி கால்நடை தீவனமாக அளிக்கிறது.

மேம்படுத்திய தேங்காய் உரிக்கும் இயந்திர தொழில்நுட்பம்:

இயந்திரம் 500 வாட் மோட்டரால் இயக்கப்படுகிறது. மற்றும் தேங்காயை சுழற்று வதற்காக (Rotating the Coconut) ஒருமுனையில் சுழலும் சாதனத்துடன் தேங்காய் பிடித்து விடுவிக்க ஒரு நெம்புகோல் (Lever) உள்ளது.
ஒரு கூர்மையான கத்தி தேங்காயின் கீழ் வைக்கப்பட்டுள்ளது இது கப்பி (Pulley) அமைப்பால் இயங்குகிறது. அது இடமிருந்து வலமாக நகருகிறது.

இயந்திரத்தை இயக்குவதற்கு மிகவும் எளிதானது தனிப்பட்ட பயிற்சி தேவையில்லை என்பது இந்த இயந்திரத்தின் சிறப்பு.

விவசாய தொழில் முனைவோர் கருத்தரங்கில் (Agri - Entrepreneurship Orientation Programme) கேரளா விவசாய பல்கலைக்கழகம் (Kerala Agri Cultural University) திரு.சிஜோய் அவர்களின் "கூக்கோஸ் நிறுவனம்" மிகச் சிறந்த நிறுவனமாக தெரிவு செய்து விருது வழங்கியுள்ளது மேலும் மத்திய அரசு திரு.கஜோய் அவர்களுக்கு ரூ.25 லட்சம் மானியம் அளித்து அவருடைய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

கேரளா பல்கலைக்கழகத்தின் விவசாய பொறியியல் துறையின் தலைவர் (Head Agricultural Engineering) திரு.கே.பி. சுதாகர் கூறுகையில்.

"சந்தையில் மற்ற தென்னை இயந்திரம் தோலுரிப்பான்கள் இருந்தாலும் திரு. சிஜோயுடைய இயந்திரம் ஹை- டெக் (Hi -Tech) மற்றும் கடினமான தேங்காய் மட்டை களையும் உரித்து சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 
Stories