January 15, 2021

மறுசுழற்சி கோடை வாஸஸ்தலம் (Recycled Resort)

அந்தமான் தீவுத் தொகுப்பில் சிறிதும் பெறிதுமான சுமார் 580 தீவுகள் உள்ளன. தலைநகர் போர்ட் பிளேர் (Port Blair) லிருந்து சுமார் 2 மணிநேர கடல் பயண தூரத்தில் அமைந்துள்ளது "அவுட்பேக் ஹேவ்லாக்" (Outback Havelock) என்ற கோடைவாஸஸ்தல ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதி.



2012 - ஆம் ஆண்டிலிருந்து நீச்சல் பியிற்றுனராக (Diving Instructor) பணிபுரிந்து வரும் 31 வயதான திரு. ஜோராவார் புரோகித் (Mr. Zorawar Prohit) தனது நண்பர்கள் திரு.அகில் வர்மா (Mr.Akhil Varma), திரு. ஆதித்யா வர்மா (Mr. Adithya Verma) மற்றும் திரு.ரோஹித் பதக் (Mr.Rohit Pathak) இணைந்து சுற்றுச் சூழலுக்கு உகந்த (Eco - Friendly) மறுசுழற்சி கோடை வாசஸ்தலம் ஒன்றை வடிவமைத்து (Recycled Resort) உள்ளனர் சுமார் 5 லட்சம் கழிவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் 500 கிலோ ரப்பர் கழிவுகள் மற்றும் இத்தகைய இதர கழிவு பொருட்களை கொண்டு பிரெஞ்சு கட்டிடக்கலை கட்டுமானத் தொழில் நுட்பத்தில் (French Architecture Technology) கட்டப் பட்டுள்ளது.



சிறப்புகள்:

- கட்டிடத்திற்கு தேவையான சுமார் 5  லட்சம் கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களும் ரப்பர் கழிவுகளும் அந்தமான் மற்றும் அனைத்து தீவுத் தொகுப்பிலிருந்தும் சேகரம் செய்யப்பட்டது.

- அனைத்து பிளாஸ்டிக் பாட்டில்களும் மணல் கொண்டு நிரப்பப்பட்டு செங்கற்களுக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

- மணல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் செங்கல்லை விடவும் பலமானதாகவும், கலைநயத்துடனும் உள்ளது என்று கட்டிட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

- அதுநாள் வரையில் கழிவு பிளாஸ்டிக் பாட்டில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் குறிப்பாக கடற்கரை பாதிப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில் குப்பை மேடுகளில் குவிந்து கிடந்த அனைத்து பிளாஸ்டிக் பாட்டில்களும் தொடர்ந்து இவ்வாறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது செங்கல் செலவு மிச்சம்!

- அந்தமானில் பலரும் இந்த தொழில் நுட்பத்தின் படி மறுசுழற்சி கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்.



- " அவுட்பேக் ஹேவ்லாக்" (Out Back Havelock) ஹோட்டல்களில் பலவிதமான வாழை மரங்களும் மற்ற காய்கறி, பழச் செடிகள் இயற்கை விவசாய (Organic Farming) முறைப்படி வளர்க்கப்பட்டு அவையே சமைக்கப்பட்டு தங்கும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது என்பது கூடுதல் நன்மை.

Address: SH5 Govind Nagar Havelock Islands, Andaman, and Nicobar Islands 744211
Phone: 095319 49235

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories