November 09, 2020

சேமிப்பு கிடங்கில் வெங்காயம் வீணாவதைத் தவிர்க்கும் உணர்விகள் (Sensors)

செல்வி.கல்யாணி ஷிண்டே (Kalyani Shinde) 23 வயதாகும் கணினி பொறியாளர். ஆசியா கண்டத்திலேயே அதிகமான வெங்காயம் விளைவிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த லசால்கானில் பிறந்து வளர்ந்தவர். ஆண்டாண்டு காலமாக இப்பகுதியைச் சேர்ந்த வெங்காயம் விளைவிக்கும் விவசாயிகள் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கும் வெங்காயம் அழுகி வீணாவதால் பெருமளவு நஷ்டத்தை சந்தித்ததைக் கண்ட கல்யாணி ஷிண்டே, அதை தவிர்ப்பதற்காக ஒரு LOT (Internet of Things) முறையினை கண்டுபிடித்துள்ளார்.

பெருமளவில் இழப்பைச் சந்திக்கும் பாரம்பரிய சேமிப்பு கிடங்கு (Traditional warehouses) களிலிருந்து இழப்பினைத் தவிர்க்கும் நவீன சேமிப்பு கிடங்குக்கு (Smart ware houses) மாற்றும் முயற்சி மேற்கொண்டு அதற்கான உணர்வியினை (Sensors) கண்டுபிடித்துள்ளார். அதனை "காடேம்" (Godaam) என்ற நிறுவனத்தின் மூலமாக அமைத்துக்கொடுத்து விவசாயிகளின் இழப்பினை பெருமளவு குறைத்து வருகிறார்.

வெங்காய கிடங்குகளில் ஆங்காங்கே உணர்வி செயலிகளை (Sensors) வைத்துவிட்டால் அவை அங்குள்ள தட்பவெப்பம், வெங்காயம் கெடும்போது வெளியிடப்படும் வாயுக்கள் ஆகியவற்றை ஆரம்பக்கட்டத்திலேயே உணர்ந்து விவசாயிகளுக்கு எச்சரிக்கை அளிக்கிறது. உடனே விவசாயிகள் அத்தகைய வெங்காயங்களை கிடங்கிலிருந்து நீக்கியோ அல்லது அப்பகுதியில் உள்ள வெங்காய குவியலை உடனே விற்று விடவோ செய்வதன் மூலம் நஷ்டத்தை தவிர்க்க  முடிகிறது.



2019 - ஆண்டு இத்தகைய உணர்வி செயலிகளைக் கண்டுபிடித்து நிர்மாணம் செய்ய வெங்காயம் மற்றும் பூண்டு ஆராய்ச்சி நடுவம் (Directorate of Onion and Garlic Research Center) நிதி உதவி செய்துள்ளது.

இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things) என்று சொல்லக்கூடிய உணர்வி செயலிகள் தற்சமயம் அரசாங்கம் மற்றும் தனியார் விவசாய கிடங்குகளில் பயன்படுத்தப்பட்டு வெங்காயம் வீணாவது பெருமளவில் தவிர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Digital Impact Square, 4th Floor,
Viscon IT Park, Nashik.

phone P: +91 7721036067

E: kalyani@godaaminnovations.com

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories