சர்வதேச எரிசக்தி நிறுவனம் International Energy Agency (IEA) 2050 ஆண்டுகளில் உலகளாவிய குளிர்ச்சியின் தேவை மூன்று மடங்கு அதிகரிக்கும் என கணித்துள்ளது. குறிப்பாக இந்தியா, இந்தோனேஷியா, சீனா போன்ற ஜனத்தொகை மிகுந்த நாடுகளில் இது உண்மை. IEA - வின்படி வரும் பத்தாண்டுகளில் உலக ஏ.சி இயந்திர விற்பனையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா பெறும்.
1901 - லிருந்து நோக்குகையில் மார்ச் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் வெப்பநிலை 40 டிகிரி - ஐ தாண்டியதால் அதிகமான மக்கள் ஏ.சி கள் போன்ற குளிரூட்டும் சாதனங்களுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டு மொத்த ஆற்றல் துகர்வு மீது சுமையில்லாமல் வெப்ப அலைகளிருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் குளிர்ச்சியான காற்றைப் பெறுவதை உறுதி செய்ய சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் நிலையான தீர்வுகள் மற்றும் வாழ்க்கை முறைகளுடன் சமாளிக்கும் வகையில் அதிக ஆற்றல் திறன் கொண்ட மாற்றுகளைப் பார்க்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் ஆக்ராவை தளமாகக் கொண்ட திரு.அசு தோஷ் வர்மாவின் எக்சல்டா (Exalta) நிறுவனம் சூரிய சக்தி ஏசி க்கள் மூலம் நிலையான மாற்றீட்டை வழங்குகிறது.
எக்ஸல்டா வின் சோலார் AC:-
1. குளிர்சாதனத்திற்கான சோலார் பேனல்கள் ஆன் கிரிட் அமைப்பிலும் ஆஃப் கிரிட் அமைப்பிலும் தேவைக் கேற்ப இயங்கக் கூடியவை.
2. 1 டன் குளிர் சாதனத்தை இயக்குவதற்கான 1500 watt மின்சார தரவிற்கு 250- வாட் உற்பத்தி சக்தி கொண்ட 6 முதல் 10 பேனல்கள் வரை பயன்படுத்தப்படுகிறது.
3. வழக்கமான டியூபுலர் பாட்டரிகள் என்றால் 150 Mah சக்தி கொண்ட 4 பேட்டரிகள் கொண்டது.
4. அதற்கு ஏற்ற மின்மாற்றிகள் (Inverter) கொண்டது.
5. தேவைக்கு ஏற்ப லித்தியம் அயான் டேட்டரிகள் பயன்படுத்த இயலும்.
6. ஒரு சோலார் AC அமைப்பு சுமார் ரூ 45,000 முதல் ரூ. 1 1/2 லட்சம் வரையில் உள்ளது.
7. இதற்கான பாகங்கள் பெரும்பாலானவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.
சிறப்புகள்:-
1. சோலார் ஏசி.கள் மூலம் பயனர்கள் மாதத்திற்கு சுமார் 600 யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடிகிறது.
2. எக்ஸல்டா சோலார் AC கள் 25 வருடங்கள் ஆயுளைக் கொண்டிருக்கும்.
3. மின்சார கட்டணத்தை ரூ 5,500 குறைக்க முடிகிறது
4. வழக்கமான ஏசிகளுடன் ஒப்பிடுகையில் மலிவானது.
5. சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்து வில்லை
2009 ஆண்டில் துவங்கி 2011 ஆண்டுமுதல் விற்பனையை தொடங்கிய எக்ஸல்டா நிறுவனம் ஒவ்வொரு மாதமும், துபாய், ஓமான், நைஜீரியா உட்பட பல நாடுகளில் உலகம் முழுவதும் 300-500 சோலார் ஏசிகளை விற்பனை செய்து வருகிறது.
இதுவரையில் 5000 க்கும் மேலான சோலார் ஏசி யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.
எக்ஸல்டா நிறுவனம் சோலார் ஏசி தவிர மினி வென்டிலேட்டர் கள், இன்வெர்ட்டர்கள், டிப் ஃப்ரீசர்கள் மற்றும் கம்ப்ரஸர் கள் போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்கிறது. இவை அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை பெரும்பாலானவை இயற்கை ஆற்றலை பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடதக்கது.
Contact:
Website: https://exalta.in/
sales@oxyneuron.com
Mob: 9999890656
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.