January 08, 2021

தண்ணீர் லில்லி - தாமரை மலர் விவசாயி (Water Lilly, Lotus Farmer)

திரு. சோம்நாத் பால் (Mr. Somnath pal) 36 வயதான மும்பை நகரில் வாழ்பவர். வீட்டை சுற்றியுள்ள இடத்தில் 200 வகை தண்ணீர் லில்லியும், எண்பது வகை தாமரையும் மேலும் தண்ணீர் வாழ் 15க்கும் மேற்பட்ட தாவரங்களை வளர்த்து வருகிறார். லில்லி மலர்கள் ரூ 1000 முதல் ரூ 40000 வரை விற்பனை செய்து வருகிறார்.



ஆரம்பத்தில் தனது வீட்டு மொட்டை மாடியில் சில லில்லி மலர்களை பொழுதுபோக்குக்காக (Hobby) வளர்த்து வந்தவர் தற்சமயம் 11,000 சதுர அடியில் நிதர்சனமான வருமானம் தரும் முழுநேர விவசாய தொழிலாகவே மேற்கொண்டுள்ளார். இதற்கான மலர்ச் செடிகளை இந்தியாவின் அஸ்ஸாம் (Assam) கேரளா (Kerala) மேற்கு வங்காளம் (West Bengal) மகாராஷ்டிரம் (Maharashtra) விலிருந்தும் மற்றும் தாய்லாந்து (Thailand), சீனா (China), அமெரிக்கா (America), இத்தாலி (Italy), இங்கிலாந்து (United Kingdom). ஆகிய வெளிநாடுகளிலிருந்தும் தருவித்து வளர்த்து வருகிறார்.


திரு. சோம்நாத் வளர்க்கும் மலர்ச் செடிகள் அரிய வகை லில்லி மலர்ச் செடிகளான.

- நிம்பாயா இம்யூடாபில்ஸ் (Nymphae Immutabilis)

- நிம்பாயா ஈ ராஸ் (Nymphala E Ros)

-  நிம்பாயா ரெட் பிளேர் (Nymphala Elare)

- நிம்பாயா மெக்காலா (Nymphala Makkala)

- நிம்பாயா கலரேட் (Nymphala Colorate)

"வகைகளும் மற்றும் அரிய வகை தாமரை (Lotus) மலர்ச் சிக்கலான

- நெலும்போஸ்னே ஒயிட் (Nelumbo Snow White)

- நெலும்போஸ்னே ஒயிட் (Nelumbo Snow White)

- நெலும்போஸ் வாசுகி (Nelumbo Vaskuki)

- நெலும்போஸ் நட்சத்திரா (Nelumbo Natchathra)

- நெலும்போ ட்விங்கிள் (Nelumbo Twinkle)

- நெலும்போ ரெட் சில்க் (Nelumbo Redsilk)

- நெலும்போ Kanchi (Nelumbo Kaanchi)

- நெலும்போ கிரீன் ஆப்பிள் ( Nelumbo Green Apple)

- நெலும்போ ஒயிட் பஃப் (White Puff)

- கோலோகாசியா எஸ் குலேண்டா பிளாக் மேஜிக் (Colocasia Esculanta Black Magic)

- கோலோகாசியா எஸ் குலேண்டா ஒயிட் லாவா (Colocasia Esculanta White Lava)

- பாப்பிரஸ் ட்வார்ப் (Popyrus Dwarif)

- பாப்பிரஸ் ஜெயின்ட் (Popyrus Gaint)

- ப்யூட்டோமஸ் உம்பலேட்டஸ் (Butomus Umbellatus)

- தாலியா டில்பேட்டா (Thalia Dealbata)

- தாலியா ஜெனிகுலேட்டா (Thalia Geniculata)

- ஸ்டர் ரஷ் (Star Rush)

ஆகியவை அடங்கும்

லில்லி மலர் வளர்ப்பு முறை:

- இரண்டு நாட்கள் சுத்தமான நீரில் நிழலில் வளர்க்க வேண்டும்.

- பின்னர் 12"*"12" அங்குள்ள மண் நிறைந்த கோப்பையில் சில நாட்கள் வைத்து வளர்க்க வேண்டும்.

- பின்னர் களிமண் (Clay Soil) அல்லது லோமி மண் (Loamy Soil) அல்லது கருப்பு மண்ணில் மாற்றி வளர்க்க வேண்டும் மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரையில் மலர்ச் செடிகள் வளர்க்கும் காலம்.

மாதத்திற்கு 200 மலர்ச் செடிகள் கர்நாடகா, ஆந்திரா தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது என்று திரு. சோம்நாத் தொடர்ந்து விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறுகிறார்.

தொடர்புக்கு: 9004603931

Website: Nymphaea & Nelumbo.

Stories