August 11, 2022

கடனுதவி, வட்டி வெறும் 6% Interest Rate at 6 %

பணம் என்பது எப்போதும் மகிழ்ச்சியை தருவதில்லை என்று பல்வேறு ஆய்வுகள் மற்றும் தத்துவார்த்தங்கள் ஒன்றிணைந்து கூறுகின்றன. இந்த கூற்றுகளின் உண்மை தன்மை சவால் செய்யத்தக்கதே. ஆனால் யதார்த்தத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் மேலே உயர விரும்பும்போது சிறிய அளவிலான நிதியாவது பெற வேண்டியுள்ளது இல்லையெனில் அபிலாஷைகள் பெரும்பாலும் துண்டிக்கப்படுகிறது. நாட்டின் கிராமப்புறங்களில் இந்த சூழ்நிலை அதிகமாக உள்ளது.



இதற்கு தீர்வாக ஒரு சுவாரஸ்யமான சேவையை "ரங்தே P2P பைனான்சியல் சர்வீஸ்" என்ற நிறுவனம் நுண்கடன் அணுகலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வெற்றிப் பரவலில் ஈடுபட்டு வருகிறது. இது வங்கி அணுகல் இல்லாத சமூகங்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் மலிவு கடன் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

பெங்களூரை தளமாகக் கொண்ட இலாப நோக்கமற்ற அரசு சாரா (NGO) அமைப்பு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நம்ப முடியாத குறைந்த வட்டி விகிதத்தில் மலிவான நுண்ணிய கடனை (Microcredit) வழங்குகிறது. அதன் மாதிரியின் படி கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவரை தேர்வு செய்யலாம். அது விவசாயி தையல்காரர், மற்றும் அனைத்து சிறு தொழில் செய்பவர், என அவரது தேவைகளுக்கு ஏற்ப பகுதியாகவேர் முழுமையாகவோரூ 100 ம் அதன் மடங்குகளிலோ பெறலாம்.

கடன் வாங்கியவர் 6% வட்டி வீகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்துகிறார். அதில் 2% ஒரு நிலையான தற்செயல் தொகையை கழித்த பிறகு முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தரப்படுகிறது. மேலும் "ரங் தே" 2% வரை உள் செலவுகளுக்காக தக்கவைத்துக் கொண்டு மீதமுள்ள கிராமப்புற கூட்டாளர்களை ஆதரிப்பதில் ஈடுபடுகின்றன.



பெரிய வங்கிகளை ஈடுபடுத்துவதை விட தனி நபர்களைக் கொண்டு அவர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் சிக்கலான நடைமுறைகள் இல்லாமல் வரம்பை விரிவு படுத்த முடிகிறது.

"ரங்தே" நிறுவனம் அவர்களது நன்கொடையாளர்கள் தளங்கள் மூலம் நிதி திரட்டுகிறது. குழந்தை பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக "கனவுகளின் காவலர்கள்" (Gaurdians of Dreams) இல்லங்களுடன் இணைந்து உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் இந்த குழந்தைகளின் ஆவணங்களை வழங்குவதோடு அவர்களின் கல்லூரி கல்விக்காக ரூ 25,000 உதவி தொகையையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

பீகார் மாநிலம் வைஷாலியைச் சேர்ந்த லக்ஷ்மிதேவி புதிய பருவத்திற்கு தரமான விதைகள் மற்றும் உரங்களை வாங்க கடன் வழங்கியுள்ளது
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள யஷ்வந்த்புரா கிராமத்தைச் சேர்ந்த ரசியா என்பவர் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்று பயனடைந்துள்ளார்.

இன்று மணிப்பூர், ஒடிசா, மகாராஷ்டிரா, மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள 16 களப் பங்குதாரர்களுடன் அதன் வட்டத்தில் உள்ள 12,0000 க்கும் மேற்பட்ட சமூக முதலீட்டாளர்களுடன் "ரங் தே" பணியாற்றுகிறது. ஆண்டுதோறும் ரூபாய் நூறு கோடியை வழங்கும் வகையில் பணியாற்றுகிறது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் கடனை வழங்கியதிலிருந்து "ரங் தே" தொடர்ந்து கடனிலிருந்து 93% திருப்பிச் செலுத்தும் விகிதமாக கொண்டுள்ளது. இந்த திருப்பிச் செலுத்தும் விகிதத்தை வங்கிகள் இதுவரை அடையவில்லை என்பதும் பெருமளவு பல்லாயிரம் கோடி வாராக்கடன் என்று ஆண்டுதோறும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் பெரும்பாலான கடன் வாங்குபவர்கள் நிதி காப்பு பிரதி (Security) இல்லாத நபர்கள் என்பதை கருத்தில் கொண்டால் இது சிறிய சாதனை அல்ல என்பது கண் கூடு.

இறுதியாக "ரங் தே " 12,443 முதலீட்டாளர்களின் தாராள பங்களிப்புடன் 57,096 கடன்களை வழங்கியுள்ளது இதன் ஒன்பது வருட செயல்பாட்டில் அமைப்பு 55 கோடி ரூபாய் மதிப்புள்ள சமூக முதலீடுகளை திரட்டி உள்ளது.

நாடு முழுவதும் 18 மாநிலங்கள் செயல்பாட்டில் இந்தியாவின் வறுமை ஒழிப்பு வரலாற்றை உருவாக்க நீண்டதொரு பயணத்தை "ரங் தே" மேற்கொண்டுள்ளது. 

Wesbite: https://rangde.in/contact

Rang De P2P Financial Services Pvt. Ltd. WeWork, Salarpuria Symbiosis, Begur Hobli, Bannerghatta Main Road, Arekere, Bengaluru, Karnataka - 560076.

support@rangde.in

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories