November 24, 2020

லாஃபேப்ரிகா கிராஃப்ட் (La Fabrica Craft)

கோவா மாநிலத்தைச் சேர்ந்த திரு.சச்சின் கங்காதரன் (Mr.Sachin Gangadharan) 29 வயதான ஒரு இளம் கட்டிட வடிவமைப்பாளர் (Architect), அழிக்க முடியாத பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மட்கும் காகித பைகளை கண்டுபிடித்து அதனை 2019 - ஆண்டிலிருந்து சந்தைப்படுத்தி உள்ளார்.

"லாஃபேப்பரிகா கிராஃப்ட்" La Fabrica Craft  என்ற நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்து வருகிறார். இன்றைய சூழலில் சந்தைப் பொருட்கள் எதுவாக இருந்தாலும் பெருமளவில் சுற்றுச்சூழலை பாதிக்கும் அழிக்க முடியாத பிளாஸ்டிக் பைகளே பயன்படுத்தப்படுகின்றன. திரு. சச்சின் அவர்களின் கண்டுபிடிப்பான வலுவான காகிதக்கலவை பைகள் திடப்பொருட்களானாலும் திரவப் பொருட்கள் ஆனாலும் எடுத்துச்செல்ல பயன்படுகின்றன. இவை பயன்பாட்டிற்குப்  பிறகு எளிதில் மட்கி எருவாகின்றன.



"லா ஃ பேப்ரிகா கிராஃப்ட்" பைகள் கழிவு செய்யப் பட்ட காகிதக் குப்பைகளின் கூழ் கொண்டு, பஞ்சு (Cotton), கோதுமை உமி (Wheat Husk) மற்றும் பிற தாவர கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் என்சைம்ஸ் (Enzymes) என்னும் செரிமான பொருட்களைக் கலந்து செய்யப்படுகின்றன. பின்னர் திரவப் பொருட்களை எடுத்து செல்வதற்கு ஏற்ப பாலி லாக்டிக் ஆசிட் (Poly Lactic Acid) PLA பூச்சு கொடுத்து பலவகையான வடிவங்களில், தடிமன்களில் தேவைக்கேற்ப பைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஒரு 50 மைக்ரான் பிளாஸ்டிக் பை சாதாரணமாக 15 - 20 கிலோ எடையை தாங்குவதற்கு இணையாக ஃபேப்ரிகிராஃப்ட் பைகளும் பயன்படுகிறது. திரவப் பொருட்கள் மட்டும் இரண்டு நாட்களுக்கு இத்தகைய பைகளில் ஒழுகாமல் வைத்திருக்க முடியும். திடப் பொருட்கள் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் சுமார் 8 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லும்  பைகள் ஒன்று ரு 12-15 /- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 20 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் பைகள் ஒன்று ரூ 15 - 30 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய பைகள் அதிக எண்ணிக்கையில் 250 பைகள் ரூ 250/- க்கும் அதாவது ரூ 1.5 க்கும் குறைவாக விற்கப்படுகிறது. பயன்பாடு அதிகமாகும் பட்சத்தில் லாஃபேப்ரி கிராஃப்ட் பைகளின் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார் திரு. சச்சின் கங்காதரன்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த எந்தவிதமான கண்டுபிடிப்புகள் பயன்பாட்டிற்கு வந்தாலும் வரவேற்கக்கூடியதே. அந்தவகையில் திரு.சச்சின் கங்காதரனின் கண்டுபிடிப்புக்கு நிச்சயம் பாராட்டத்தக்கது.

தொடர்புக்கு: +91 9633747004. 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories