பழங்காலத்திலிருந்தே கடலில் முத்துக் குளித்தல் பழக்கத்தில் இருக்கிறது. ஆழ்கடலில் மூழ்கி முத்துச் சிப்பிகளை (Oysters) எடுத்து அதிலிருந்து முத்துக்களை சேகரித்து வந்துள்ளனர். இதுபற்றி நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் கடந்த 21 வருடங்களாக தனது தோட்டத்தில் நன்னீர்
முத்துச்சிப்பிகளை (Mussels) வளர்த்து முத்துக்களை எடுத்து பல நாடுகளுக்கு அனுப்பி வருகிறார் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 65 வயது கே.ஜே மாதச்சன் (K.J. Mathachan). பலருக்கு இது புதிய தகவலாக இருக்கலாம்.
மாதச்சன் தகவல் தொடர்புத் துறையில் பேராசிரியராக சவுதி அரேபியாவின் டஹ்ரானில் (Dhahran) உள்ள அசர் ஃபகத் பல்கலையில் (King fahd University of petroleum and minerals) பணிபுரிந்து வந்தார். அராம்கோ (ARAMCO) என்னைண நிறுவனத்திற்காக அரபி - ஆங்கில மொழிபெயர்ப்பாளராக பணிபுரிய சீனாவுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.
சீனாவின் வுக்சி (WUKSI) ல் உள்ள தன்சுயி (Dansui) மீன் ஆராய்ச்சி நடுவத்திற்கு (Fish research center) பார்வையிட சென்றவர் அங்கு அளிக்கப்பட்ட ஆறுமாத கால முத்து வளர்ப்பு பயிற்சியை (Diploma in pearl Cultivation) முடித்தார். இந்தியாவில் மிகச்சிலரே முத்து வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதால் 1999 - ல் கேரளாவில் தன்னுடைய சொந்த நிலத்தில் முத்து வளர்ப்பு மேற்கொண்டார்.
இதற்காக மேற்குதொடர்ச்சி மலை ஆறுகளின் நன்னீர் முத்து சிப்பிகளை (Western ghats rivers) மகாராஷ்டிராவில் இருந்து வாங்கிவந்து பக்கெட்களில் வளர்க்கத் தொடங்கினார். துவங்கிய முதலாண்டு முடிவிலேயே ரூபாய் 3 லட்சம் லாபம் ஈட்டியவர் தொழிலை விரிவாக்கம் செய்து உள்ளதாக கூறுகிறார்.
சந்தையில் மூன்று வகை முத்துக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
1. செயற்கை முத்து
2. இயற்கை முத்து
3. இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட முத்து.
இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட முத்து கேரட் ரூபாய் 360 -/- முதல் ரூபாய் 1800-/- வரையில் விற்கப்படுகிறது.
தொழில்நுட்பம்:
வாங்கிவரப்பட்ட நன்னீர் முத்துச்சிப்பிகளை மிகவும் கவனத்துடன் சிறிதே திறந்து அதுக்குள்ளே கருவினை (Nucleus) இட்டு அதனை அப்படியே தண்ணீரில் அமிழ்த்தி 15-25 C வெப்பநிலையை பராமரிக்கப்படுகிறது. சிப்பிகளின் உணவாக நுண்ணுயிர்கள் மற்றும் பாசிகள் உணவாக அமைகிறது. சுமார் 18 மாதங்களில் கருவினைசுற்றி
கிட்டத்தட்ட 540 அடுக்குகள் கால்சியம் கார்பனேட் மற்றும் சுறப்புகள் (Secreations) படிமானம் (Calcium Carbonate Layers) ஏற்பட்டு முத்தாக ஆகின்றது.
அறுவடை செய்யப்பட்ட முத்துக்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியா, குவைத், சவுதி அரேபியா, மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக தற்போது முத்துச்சிப்பி வளர்ப்பு, 30 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலம் ஆறு மீட்டர் ஆழ தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது. மேலும் தோட்டத்தில் வெணிலா சென்ஸ் தயாரிக்கப்படும் வெண்ணிலா செடிகள், தென்னை மரங்கள் மற்றும் மாம்மரங்களையும் தனது விவசாய நிலத்தில் வளர்த்து வருகின்றார்.
ஆர்வத்துடன் வரும் விவசாயிகளுக்கு வளர்ப்பு முத்து குறித்து பயிற்சிகளையும் கொடுத்து வருகிறார்.
2018- ஆண்டு மாதச்சன் நரம்பு தாக்குதல் (Stroke) ஏற்பட்டாலும் தளராமல் முத்து வளர்ப்பையும் அதுபற்றிய வகுப்புகளையும் இணையவழியில் (online Class) நடத்தி வருவது பாராட்டுதலுக்கு உரியது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.