July 04, 2022

15 லட்சத்தில் உலக தரமான வீடு (Okno ModHomes)

உலகில் காலநிலை மாற்றத்திற்கு முக்கியமான பங்களிப்பாக கட்டிட கட்டுமானம் உலக அளவில் ஆண்டுக்கு 28 சதவீதம் கார்பன் வெளியேற்றத்திற்கு காரணமாகிறது. அதாவது தொழில்முறை கட்டிக்கலை நிலைமையை மோசமாக்கு அதற்கு மட்டுமே பங்களிக்கிறது எனவே வழக்கமான நடைமுறைகளில் உள்ள தடைகளை உடைப்பதன் மூலம் கட்டுமானத் துறையில் நேர்மறையாக தாக்கத்தை உருவாக்கும் வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹர்ஷத் (24), பரீஷீத் (26) முதுகலை பட்டப் படிப்பை முடித்துள்ள தொழிலதிபர்கள் ஒக்னோ மோட் ஹோம்ஸ் (Okno Mod Homes) - ஐ நடத்துகிறார்கள்.

இந்நிறுவனம் தொழில்நுட்பமும் நிலைத்தன்மையும் கைகோர்த்துச் செல்லும் வகையில் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் பயன்படுத்தாத வீடுகளை கட்டிக் கொடுக்கின்றது இத்தகைய வீடுகளை 90 நாட்களில் சொந்த IKEA போன்ற சூழல் நட்பு இல்லத்தை அமெம்பிள் செய்ய முடிகிறது. IKEA மர வீடுகள் வடிவமைப்பு வானிலை மற்றும் நிலநடுக்கத்தை தாங்குகின்றது மற்றும் சிமெண்டால செய்யப்பட்ட வழக்கமான வீடுகளின் வலிமையை கொண்டுள்ளன.அமெரிக்கா, நார்வே மற்றும் பிற மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள் மர வீடுகளில் வாழ்ந்ததாக வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் வலுவாகவும், புயல்கள் மற்றும் கடுமையான குளிர் வெப்பநிலை உட்பட கடுமையான வானிலைகளை தாங்குகிறது. இதன் அடிப்படையில் இந்திய வெப்பநிலைக்கு ஏற்ப அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பைன் மரங்களை உபயோகித்து வீடுகள் கட்டப்படுகின்றன எந்த ஒரு சேதத்தையும் தடுக்கும் ஒரு ரசாயன மற்ற கரைசலுடன் இதனை செயல் ஆக்கப்படுகிறது 15 ஆண்டுகளுக்கு மரம் வளைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறது இந்த முதன்மை மூலப் பொருட்களை பயன் படுத்தி வடிவமைப்புகள் தயாரிக்கப்படுகிறது வீடு ஒரு பேனல் அமைப்பை பயன்படுத்தி கட்டப்படுகிறது மற்றும் தனி பயன் ஆக்கப்பட்ட மரத்தான்கள் பலம் வளம் மற்றும் சுமைகளை கருத்தில் கொண்டு பல கட்டங்களாக அமைக்கப்படுகின்றன.அடித்தளத்தை நிறுவிய பின் மீத முள்ள கட்டமைப்பு அதன் மீது கட்டப்படுகிறது. அனைத்து கட்டமைப்பு பொருட்களும் பிளாட் பேக் மற்றும் எழுதப்பட்ட வழிமுறைகளுடன் வருகின்றன. கட்டடம் கட்டுபவர் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் மற்றும் இன்டர்லாக் நுட்பங்களை பயன்படுத்தி வீட்டை கட்டலாம்.

வீட்டின் வாழ்க்கை சுழற்சி (Life Span) 50 ஆண்டுகள், உலோக சட்டங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை உள்ளடக்கியது. வீட்டின் உட்புறம் மரம் மற்றும் பிற கழிவுகளை பயன்படுத்தி செய்யப்படுகிறது. அனைத்து கட்டமைப்பையும் அகற்றி வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். அதாவது மொபைல் வீடு என்று அழைக்கலாம். இத்தகைய வீட்டினை தேவைக்கேற்ப 90 நாட்கள் டெலிவரி வாக்குறுதிகள் நிறுவனம் வழங்குகிறது.சுற்றுச்சூழல் சமநிலையை நிலைநாட்டுவதற்காக வீடு கட்ட பயன்படும் ஒவ்வொரு மரத்துக்கும் 4 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்பது கூடுதல் சிறப்பு.

இந்த தொடக்க நிறுவனம் ஏற்கனவே கர்நாடகாவின் சிக்மகளூரில் ஒன்று மற்றும் ஹைதராபாத்தில் மூன்று வீடுகளை அமைந்துள்ளது இதற்கு சராசரியாக ரூபாய் 15 லட்சம் செலவாகிறது. தற்போது இந்த வீடுகள் விடுமுறை இல்லங்களாக செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது வீடுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்க உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

AddressSurvey 125/A/5, Janwada, Telangana 500075

Phone No: 088858 58333

hello@oknomodhomes.com

Our Website: http://www.oknomodhomes.com/

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories