August 14, 2021

1500 சதுர அடியில் 100க்கும் மேற்பட்ட தாவரங்கள் (100 Plants in 1500 Sqfeet)

கரிம வேளாண்மையை (Organic Farming) வீட்டிலிருந்து எவ்வாறு எளிதாக செய்ய முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு அமைக்க தமிழ்நாட்டில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இணை வேளான் இயக்குனர் திருமதி.ஆர்.ஆர். சுசீலா (58) (Mrs.R.R. Susela) மற்றும் ஓய்வு பெற்ற வேளாண் உதவி இயக்குனர் திரு.என் மதுபாலன் (62) (Mr.N.Madhubalan) தம்பதியினர் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஒரு மினி காட்டை அமைத்துள்ளனர். 1500 சதுர அடி மொட்டை மாடியில் 100க்கும் மேற்பட்ட தாவரங்களை வளர்த்து தங்கள் சுற்றுப்புறத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கரிம வேளாண்மை பயிற்சி அளித்துள்ளனர்.

செயலாக்கம்:

திரு.மதுபாலன் திருமதி. சுசீலா தம்பதியினர் முதலில் மொட்டைமாடியிலிருந்து கீழே உள்ள வீட்டிற்கு தண்ணீர் வெளியேற்றுவதை (Water Seepage) தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அடுத்து தோட்டத்தில் ஒரு நீர் சேமிப்பு தொட்டியை நிறுவினர் பின்னர் அவர்கள் விதைகள், உரம் மற்றும் வளரும் பைகளை (Grow Bags) சேகரித்தனர். அவற்றை நம்பகமான அமைப்புகளிடமிருந்தும் தங்கள் கிராமத்திலுள்ள பிற விவசாயிகளிடமிருந்தும் வாங்கினர்.

மாடித் தோட்டம் என்பது ஒரு முறை முதலீடு. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10,000 /- வரை முதலீடு செய்துள்ளனர் முதலில் 20 பயிர்கள் வெந்தயம், கொத்தமல்லி மற்றும் ஒரு சில கீரைகள் உட்பட நடவு செய்துள்ளனர். இப்போது தக்காளி, மிளகாய்,  கத்தரிக்காய், பூசணி, பாகற்காய், வெண்டைக்காய் வாழை, கொய்யா மற்றும் மாதுளை உட்பட பல புதிய பழங்கள் காய்கறிகளை வளர்க்கின்றனர். மலர் வகைகளில் பலவும் மர வகைகளில் முருங்கைமரம், அகத்தி மற்றும் வேப்ப மரத்தையும் விளைக்கின்றனர்.



திரு. மதுபாலன் கரிம வேளாண்மையை (Organic Farming) தேர்ந்தெடுத்ததற்கு காரணம் அந்த முறை பல நன்மைகளைக் கொண்டுள்ளது. புதிய உற்பத்தியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு பலவழிகளில் நன்மை அளிக்கிறது. மேலும் மண்ணின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகிறது. ஒரு பண்ணையில் அதிக பல்லுயிர் பெருக்கம் அது மிகவும் நிலையானதாகவும் உள்ளதாக நம்புகிறேன் என்று கூறுகிறார். பண்ணை எரு, மண்புழு உரம், வேப்பம்புண்ணாக்கு மற்றும் புங்கன் பிண்ணாக்குகளை எருவாக பயன்படுத்துகின்றனர். மேலும் வளர்ப்பு பொருளாக மண்ணுடன் தேங்காய் நாரையும் பெருமளவு பயன்படுத்துகின்றனர். இவை தாவரங்களுக்கு வளரும் சூழலை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.



கோவிட் - 19 லாக்டவுன் (Lock Down) ன் போது தம்பதியினர் 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மாடித் தோட்ட வளர்ப்பு முறையினை இலவச வகுப்புகளாக அவர்களாக வழங்கியுள்ளனர் பயிற்சி பெற்ற சில இல்லத்தரசிகள் தங்கள் தயாரிப்புகளை விற்பதன் மூலம் ஒரு நல்ல வருமானத்தை ஈட்டுவது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

Fb Page: https://www.facebook.com/vivasayamkarkalam/?ti=as

Website: https://www.orgvika.com/

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories