April 14, 2022

காற்றிலிருந்து மூங்கிலை வைத்து குடிநீர் உற்பத்தி (Warka Water Tower)

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி உலகில் ஏறத்தாழ 2.3 பில்லியன் மக்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடுகளில் வாழ்கின்றனர். அதே நேரத்தில் 4 பில்லியன் மக்கள் வருடத்தின் சில மாதங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை அனுபவிக்கின்றனர்.

குறிப்பாக எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் தண்ணீரைத் தேடி வருடத்திற்கு 40 பில்லியன் மணி நேரங்களைச் செலவிடுகின்றனர். பலருக்கு குடிநீரை கண்டுபிடிக்க 6 மணி நேரம் வரை ஆகின்றது. அப்படியே கண்டுபிடிக்கப்பட்டாலும் அது பெரும்பாலும் பாதுகாப்பானது அல்ல. மேலும் தொற்று பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிர்களால் மாசுபட்டுள்ளது.

இந்த சிக்கலைத் தணிக்க ஆர்டுரோ விட்டோரி (Arturo Vittori) என்ற இத்தாலிய கட்டிடக் கலைஞரின் லாப நோக்கற்ற குறைந்த விலை "வார்கா கோபுரம்" (warka Tower) என்ற மூங்கில் கோபுரம் உருவாக்கியுள்ளார். இது காற்றில் உள்ள ஈரத்தை கிரகித்து நாளொன்றுக்கு சுமார் 100 லிட்டர் தண்ணீரை அறுவடை செய்து சேமிக்கிறது.



இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஆர்டுரோ விட்டோரி எத்தியோப்பியாவில் உள்ள கிராமப்புற சமூகங்களுக்கு சென்றிருந்தபோது அந்த நாட்டின் தண்ணீர் நெருக்கடியின் அளவு அவரைத் தாக்கியதன் காரணமாக இத்தகைய மிகவும் விலை குறைந்த தண்ணீர் உற்பத்தி செய்யும் மூங்கில் கோபுரத்தை உருவாக்கியுள்ளார்.

வார்கா மூங்கில் தண்ணீர் கோபுரம்:-

குறைந்த விலை மூங்கில் கோபுரம் 9.5 மீட்டர் உயரமும் சுமார் 80 கிலோ எடையும் கொண்டது. காற்று மற்றும் வளிமண்டலத்திலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராமெட்ரிக் வடிவமைப்பு இலகுரக மற்றும் எளிமையான மற்றும் புதுமையான கருத்துடன் ஒரு மெல்லிய கண்ணி  (Mesh) சட்டத்தின் மீது பரவி உள்ளது. இது வளி மண்டலத்திலிருந்துதண்ணீர நீராவியை ஈர்க்கிறது. இந்த நீர் பின்னர் கண்ணிக்குள் ஒடுங்கி (Condense) ஒரு நீர்த்தேக்கத்தில் சேர்கிறது, சேர்ந்த நீர் ஆவி ஆவதைத் தடுக்க கீழ் பகுதிகளுக்கு நிழல்தரும் ஒரு விதமான (Canopy) அமைந்துள்ளது. கோபுரத்தை பயனர்கள் எளிதாக நிர்மாணிக்கவும் இயக்கவும் முடியும். இதனால் இயற்கையாகவே நெகிழ்வானதாகும் (Flexible) தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் இது எளிதான விருப்பமாகவும் உள்ளது.



இந்த கோபுரத்தின் மூலம் தினமும் பல்வேறு கிராமங்களுக்கு 100 லீட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த வடிவமைப்பை இப்பொழுது ஹைட்டி,  மடகாஸ்கர், கொலம்பியா, பிரேசில், இந்தியா மற்றும் சாம்பாவிலும்செயல்படுகிறது.

எத்தியோப்பியாவை பூர்வீகமாகக் கொண்ட ராட்சத அத்தி மரத்திலிருந்து "வார்கா" என்ற பெயர் வந்தது. "வார்கா வாட்டர்" - இன் நிலையான திட்டங்கள் இந்த துயரங்களுக்கு தீர்வு காண்பதையும், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கிளினிக்குகள் அமைத்து மக்களின் வாழ்க்கைச் சூழலை வழங்குவதன் மூலம் அவர்களின் இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த உதவுகிறது குழுவினர்கள் மேற்கொள்ளும் திட்டங்களில் ஒன்று "வார்கா ஹவுஸ்", இது நிலையான வீட்டு மேம்பாட்டு திட்டமாகும். இதில் வீடுகள் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி கட்டப்படுகின்றன.



உள்ளூர் சமூகங்களின் உணவு தேவைகள் "வார்கா கார்டன்ஸ்" போன்ற அமைப்புகள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. அங்கு உள்ளூர் சமூகங்கள் தங்கள் சொந்தஉணவை வளர்ப்பதன் மூலம் பராமரிக்கின்றன. "வார்கா சோலார் தொழில்நுட்பம்" மூலம் கிராமப் புறங்களுக்கு மின்சாரம் வழங்க பசுமை சக்தியைப் பயன்படுத்துகிறது.

அனைத்து பயன்பாடுகளும் லாபநோக்கற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Our Website: https://www.warkawater.org/

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories