உலகில் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாவதாக உலக மாசு கட்டுப்பாடு அமைப்பு கூறுகிறது. மொத்தமாக உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் 60% வரை மல்டி லேயர் பேக்கேஜிங் உள்ளிட்ட பேக்கேஜிங் கழிவுகள் பங்களிக்கின்றன. உலக அளவில் வெறும் 9% பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது அப்படியே மறுசுழற்சி செய்யப்பட்டாலும் கூட இந்த மறுசுழற்சி மையங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றனர் இதற்கான தீர்வினை நோக்கி உலகெங்கும் பல நிறுவனங்கள் அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன.
தீர்வு கண்டுள்ள அமைப்பு - "சமுத்யோகா வேஸ்ட் சக்ரா"
(Samudhyoga Waste Chakra)
துவக்க அமைப்பு நிறுவப்பட்டது - 2018 – ஆண்டு 5 பேர் கொண்ட குழுவாக
தொடங்கப்பட்டது
நிறுவப்பட்ட இடம் - சென்னை
இயக்குனர் - - ஐ.ஐ.டி சுற்றுச்சூழல் பேராசிரியர் இந்துமதி எம்.நம்பி
இணை இயக்குனர் - கே.சிவகாமி
வணிகத் தலைவர் - திரு. கேசவ் விஜய்
மறுசுழற்சி செய்யப்படும் கழிவுகள் - 1. பிளாஸ்டிக் கழிவுகள்
2. சிறுநீர்
மறுசுழற்சி செய்யும் முறை - - ரசாயனம் மற்றும் மெக்கானிக்கல் தொழில்நுட்பம்
பிளாஸ்டிக் மறுசுழற்சி - DZEEP
DZEEP தொழில்நுட்பம் - 1000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை ஜீரோ
எமிஷனுடன் 800 லிட்டர் எண்ணையாக
மாற்றுகிறது இதில் வயிறு வலி சிஸ் என்கிற
செயல் முறை பின்பற்றப்படுகிறது.
எண்ணெயின் பயன்பாடு:- இவ்வாறு தயாரிக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட எண்னை குறிப்பிட்ட அளவு டிசலுடன் கலந்து பாய்லர்கள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றை
இயக்கலாம்.
சிறுநீர் மறுகழற்சி :- ECO Fert தொழில் நுட்பம்.
Eco Fert தொழில்நுட்பம் :- சிறுநீரை பிரத்தியேகமான முறையில் பிராஸஸ்
செய்யப்படுகிறது (வரை பட விளக்கம்)
- 1000 லிட்டர் சிறுநீரில் இருந்து
- 850 லிட்டர் தண்ணீர்
- 100 அம்மோனியா
- 1 கிலோ ஸ்ட்ரூவைட் ஆகியவை மீட்டெடுக்கப்
படுகிறது. அம்மோனியா, ஸ்ட்ரூவைட் விற்பனை
செய்யப்பட்டு தண்ணீர் தோட்டத்திற்கு
பயன்படுத்தப்படுகிறது.
பாராட்டுக்கள் :- அமெரிக்க தூதரகம் ஐஐடி சென்னையுடன் இணைந்து
ஏற்பாடு செய்த "கார்பண் ஜீரோ சேலஞ்ச் போட்டியில்"
"சமுத்யேககா வேஸ்ட் சக்ரா" அமைப்பு கலந்துகொண்டு ரூபாய் 5 லட்சம் வென்றது.
நிதியுதவி :- 2019 ஆண்டு இன்ஜினியர்ஸ் நிறுவனத்திடமிருந்து 1 கோடி ரூபாய்
நிதி உதவி பெற்றது.
தற்சமயம் கழிவு சுழற்சி தொழில்நுட்பங்கள் அமைப்பு ஐஐடி சென்னையில் இன்ஜினியர்ஸ் டிசைன் துறையில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஸ்மார்ட் நகரங்கள் அனைத்திலும் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளதாக அமைப்பின் இயக்குனர் பேராசிரியர். இந்துமதி எம். நம்பி தெரிவிக்கிறார்.
IITM Incubation Cell, Module 2, D block, 3rd floor, Phase II, IIT Madras Research Park, Kanagam Road , Taramani, Chennai- 600 113.
Mobile
+9197909 36504 | +91 9790943590
E-Mail
wastechakra@gmail.com
website: www.wastechakra.com
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.