December 08, 2020

வீட்டு காற்றாலை மின் இயந்திரம் (Domestic Wind Mill Turbine)

ஆந்திரா மாநிலத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள மது வஜ்ரகரூர் (Madhu Vajrekarur) 23 வயதான மின்சாரவியல் பொறியியல் (Electrical Engineer) இரண்டாம் ஆண்டு மாணவர் அவருடைய கிராமத்தில் நன்நீர் தட்டுப்பாடும் அடிக்கடி மின்வெட்டும் தொடர்ந்து இருக்கிறது என்பதால் அதற்கான விடிவாக மின்சாரம், மற்றும் நன்நிர் உற்பத்தியும் ஒருங்கே அமைந்த ஒரு வீட்டு காற்றாலை (Wind Turbine) உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

உலகஅளவில் பல கோடி மக்களும் இந்தியாவில் 88 மில்லியன் மக்களும் இன்றளவில் சுகாதாரமும், நல்ல குடிநீரும், மின்சாரமும் பெறாமலே பல துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது திரு.மது அவர்களின் வீட்டு காற்றாலை இந்த நிலைக்கு விடிவாக ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.

திரு.மது அவர்கள் அவரது வீட்டிற்கு பின்புறத்தில் 15 - அடி உயரமான காற்றாலை நிறுவி மின்சாரம் மற்றும் நன்நீரை உருவாக்கும் டர்பைனை உருவாக்கியுள்ளார்.

 வீட்டு காற்றாலை எவ்வாறு வேலை செய்கிறது?

வாயுமண்டலத்தில் (Atmosphere) உள்ள குளிர்ந்த காற்றினை காற்றாலை இறக்கையின் பின்னால் அமைந்துள்ள படல் மூலமாக உள்ளே செலுத்தப்பட்டு அழுத்த குளிர் விப்பானுக்கு (Cooling Compressor) அனுப்பப்படுகிறது குளிர்ந்த காற்று நீரராக்கப்பட்டு செம்பு குழாய்கள் (Copper Tubes), மூலமாக நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்கு (Water Purifier) அனுப்பப்படுகிறது. அதில் சவ்வு வடிப்பான்கள் (Membrane Filters) கரி வடிப்பான்கள் (Carbon Filters) மற்றும் புற ஊதாகதிர் வடிப்பான்கள் (Ultra violet rays Filters) மூலமாக சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான நீர் வெளிவருகிறது.

மேலும் காற்றாடி டர்பைன்கள் ஒரு மின்மாற்றி உடன் இணைக்கப்பட்டு (Inverter) 30 கிலோ வாட் சக்திகொண்ட மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வீட்டு மின்விசிறிகள், விளக்குகள், மின்சார பிளக்குகள் அனைத்தும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாளொன்றுக்கு குறைந்தது 100 லிட்டர் நன்நீரும், மின்சார சக்தியும் தொடர்ந்து கிடைக்கிறது. இந்த காற்றாலையை 15 நாட்களில் வடிவமைத்து நிர்மாணம் செய்துள்ளதாகவும், சுமார் 1 லட்சரூபாய் செலவானதாகவும்  திரு.மது அவர்கள் கூறுகிறார். மேலும் பெருமளவு மின்சார செலவு, நன்னீர் வாங்கும் செலவு ஆகியவற்றை தவிர்த்துள்ளார்.

வீட்டு காற்றாலை யினை வீடுதோறும் அமைத்துக் கொடுக்கவும் வியாபார ரீதியில் (Commercial) அமைக்கவும் உதவுவதாக கூறுகிறார் திரு மது.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories