Dr.சந்திரசேகர் பிராதார் (Dr.Chandrasekar Biradar) கர்நாடக மாநிலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். விண்வெளி விஞ்ஞானத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் பணிநிமித்தமாக 33 நாடுகளில் பணிபுரிந்து விட்டு தற்போது எகிப்தில் உள்ள கெய்ரோ (Cairo) வில் மனைவி ப்ரியாபிராதார் மற்றும் 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். 2000- ஆண்டில் அமெரிக்காவில் பணிபுரிந்து போது வீட்டிலேயே காய்கள் மற்றும் பழங்கள் வளர்க்கும் விவசாயக் கலையை தனதாக்கிக் கொண்டு இன்றுவரை பல முன்னேற்றங்கள் செயல்படுத்தி செய்து வருகிறார்.
50 சதுரடி மாடித்தோட்டத்தில் 50 வகையான காய்கறிகள், பழங்கள் மற்றும் பூஞ்செடிகள் வளர்த்து பலன் பெறுகிறார். தக்காளிகள், செர்ரி பழங்கள், ரஷ்யன் பெர்சிமான், கத்திரிக்காய், வாழை மரங்கள், பட்டாணி, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, கோஸ், கேரட், புரோக்கோலி, வெள்ளரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வெங்காயம், முள்ளங்கி, ஆப்பிள், கீரை வகைகள் இன்னும் பல இதில் அடங்கும் என்பது ஆச்சர்யமான உண்மை.
டாக்டர். சந்திரசேகரின் விவசாய குடும்ப பரம்பரை விவசாய குணம் (genes) விவசாயத் துறையில் சிறந்ததாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் (passion) மற்றும் அத்தியாவசிய நிலை (Necessity) மூன்றும் அடுக்கு விவசாயம் அமைக்க காரணமானது என்பது நிதர்சனம்.
அடுக்கு விவசாய முறை:
1. முதல் அடுக்கில் மண்ணுக்கு அடியில் கிடைக்கக்கூடிய விவசாய பொருட்கள் கொடுக்கும் செடிகள் பயிரிடப்படுகிறது, கேரட், பீட்ரூட், வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, இஞ்சி, மற்றும் மஞ்சள் ஆகியவை இதில் அடங்கும்.
2. இரண்டாவது அடுக்கில் மண்ணின் மட்டத்தில் வளர்ந்து பலனளிக்கும் காய்கள் மற்றும் பழங்கள் பயிரிடப்படுகிறது புதினா, கொத்தமல்லி, மற்றும் அனைத்து கீரை வகைகளும் இதில் அடங்கும்.
3. மூன்றாவது அடுக்கு மண்ணின் மட்டத்திலிருந்து சிறிது மேல்நிலையில் விளையக் கூடிய பழங்கள் மற்றும் காய்களான கத்திரி, மிளகாய், வெண்டை, பீன்ஸ், தக்காளி, காலிபிளவர், புரோக்கோலி, பட்டாணி போன்றவை முதல் அடங்கும்
4. நான்காவது அடுக்கு மண்ணின் மீது பெரும்பாலும் கொடியாக படர்ந்து பலனளிக்கும் காய்களான கொடி அவரை, பாவக்காய், கோவக்காய், புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரிக்காய் போன்றவை இதில் அடங்கும்.
5. ஐந்தாவது அடுக்கு பெரிய செடிகள் மற்றும் சிறு மரங்கள், முருங்கை, கரிவேப்பிலை மற்றும் பூக்களாகி ஆகிய பழங்கள் கொடுக்கும் மரங்கள் இதில் அடங்கும்.
இத்தகைய அடுக்கு முறையில் பயிரிடப்படும் செடிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று வேர்களைக் கொண்டு சத்துக்களை பரிமாரிக் கொள்கின்றன (Symbiotic) என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து செடிகளும் ரசாயனங்கள் ஏதுமில்லாத மண்ணின் கலவை, கோக்கோ பீட் (Coco peat) மற்றும் கம்போஸ்ட் (Compost) எரு கொண்ட கலவையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது அவசியம். தண்ணீர் தேவைகள் சமையலறைக் கழிவு நீரை பயன்படுத்தப்படுகிறது.
பழங்கள் மற்றும்காய்கள் ரசாயனம் அற்ற சத்து மிகுந்த, பசுமை நிறைந்தவை என்பது சிறப்பு.
சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான இத்தகைய அடுக்குமுறை மாடித்தோட்ட முறை இயற்கையை பாதுகாப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்து உண்ணுவது என்பது உயர்ந்த பண்பாக அமைகிறது என்பது பாராட்டுக்குரியது அல்லவா. ?
"இனியெல்லாம் இயற்கையே"
இது இன்றைய உலகம், மற்றும் நாளய உலகம் முழுவதுமே உச்சரிக்கும் ஒரு மந்திரச் சொல். இயற்கைக்கு ஆதரவான வேலைகளை வேளாண்மையிலிருந்து இருந்து தான் முதலில் தொடங்கவேண்டும். ஏனென்றால் இயற்கையே இயங்கு சக்தி!
Contact: C.Biradar@cgiar.org.