பல ஆண்டுகளாக இந்தியாவில், குறிப்பாக வட மாநில விவசாயிகள் அறுவடைமுடிந்தபின் விவசாய நிலத்தில் உள்ள கழிவு வைக்கோல் முடிச்சுகளை (Waste Stubbles) அடுத்த போக விவசாயத்துக்காக விவசாய நிலத்திலேயே எரித்து சாம்பலாக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் பெரும் அளவு நச்சுப்புகை ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கு பாதிப்பாகவும், குறிப்பாக டெல்லி தலைநகரின் சுற்றுச்சூழல் பாதிப்பு 20 மடங்கு அதிகரித்தும் சுவாசிப்பதற்கு தகுதியற்ற சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான மாற்று வழியினை ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபார்ஷ் மஜ்ரா (Farsh Majra) கிராமத்தினைச் சேர்ந்த 32 வயதான திரு.விரேந்தர் யாதவ் (Virendar Yadav) கண்டுபிடித்து லாபகரமாக செயலாற்றி வருகிறார். அதன்படி அவருடைய கிராமம் மற்றும் சுற்றியுள்ள சுமார் எட்டு கிராமத்திலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக கழிவு வைக்கோல் முடிச்சுகள் எரிக்கப் படுவதுமில்லை, நச்சுப் புகையும் இல்லை. மாற்றாக கழிவு வைக்கோல் முடிச்சு வேளாண்மையால் (Waste Stubble Management) விவசாயிகள் வருமானமும் ஈட்ட முடிகிறது.
செயல்பாடு:
- 2019- 2020 - ஆண்டுகளில் 4 வைக்கோல் கட்டு இயந்திரங்கள் இயக்கப்பட்டு அனைத்து கழிவு வைக்கோல் முடிச்சுகளும் அருத்து அடுக்கி வைக்கப்பட்டு அழுத்தமான (Compress) துண்டுகளாக உருவாக்கி கட்டப்படுகிறது. பின்னர் கட்டப்பட்ட வைக்கோல் துண்டுகள் காகிதச் தொழிற்சாலைகள்க்கும் மற்ற சில தொழிற்சாலைகளுக்கும் விற்பனை செய்து மறுசுழற்சி செய்யப்படுகிறது.
ஹரியானா விவசாயி திரு. விரேந்தர் யாதவ் அவர்களின் ஒரு வருமான கணக்கு
2019 - ஆண்டு 60,000 குவிண்டால் வைக்கோல் முடிச்சு
2020 - இதுவரை 48,000 குவிண்டால் வைக்கோல் முடிச்சு
விற்பனை விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ 135 /- வீதம் வருமானம் ரூ 1.5 கோடி
வெட்டுச்செலவு, கூலி, எரிபொருள் செலவு போக்குவரத்துச் செலவு மற்றும் இதர செலவுகள் போக நிகர லாபம் (Nett Profit) Rs. 45, லட்சம் என்று கூறுகிறார் திரு.வீரேந்தர் யாதவ்.
விவசாய கழிவுகளை எரித்து மாசு ஏற்படுத்துவதை விட அதையே பலவிதமான நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்த பயனபடுத்த முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக விவசாயி திரு. விரேந்தர் யாதவ் விளங்குகிறார் என்பது பாராட்டத்தக்கது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.