குஜராத் மொழியில் "புங்ரூ" என்றால் ஸ்ட்ரா (Straw) என்று பொருள்.
2001 - ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் நில அதிர்வு (Earth quake) ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு வறட்சியில் தண்ணீர் பற்றாக்குறையினால் அழிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து வந்த பருவ மாற்றத்தால் (Monsoon) பெருமழை பெய்து மாநிலமே நீரில் மூழ்கி பயிர்கள் நாசமானது. வறட்சியும், வெள்ளமும் மாறி மாறி பயிர்கள் அழிவதை தடுக்க 48 வயது பிப்லாப் கேதான் பால் (Biplab Ketan Paul) என்பவர் தனித்துவமான ஒரு மழைநீர் தொழில்நுட்பத்தினை கண்டுபிடித்து சுமார் 40,000 ஏக்கர் வறண்ட வயல்களை விளைநிலங்களாக மாற்றியுள்ளார்!
தொழில்நுட்பத்தின் அடிப்படை தாத்பர்யம் (தத்துவம்) Principle:
மழை காலங்களில் பெய்யும் பெரும் மழை நீர் பயிரையும் அழிக்காமல், பயனற்று கடலிலும் கலக்காமல் 100 அடி ஆழத்திலிருந்து 400 அடி ஆழம் வரையில் கொண்டு சென்று சேமித்து வைத்து வறட்சி காலங்களில் சேமித்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதே "புங்ரூ" தொழில்நுட்ப தத்துவம்.
சேமிப்பு முறை:
1. சரிவான நிலப்பகுதியில் மழைநீர் சேகரம் செய்யும் சுமார் 10 அடி விட்டத்தில் ஒரு கான்கிரீட் குழி பகுதியை ஏற்படுத்த வேண்டும்.
2. அதன் மையப்பகுதியில் 10 லிருந்து 15 செ.மி விட்டமுள்ள குழாய் அமைத்து.
3. சுமார் 100 அடி முதல் 300 அடி ஆழம் வரையில் பெருமணல் இருக்கும் பகுதி வரை குழாயை நிர்மாணித்து விட்டால் போதுமானது.
மழைகாலத்தில் சேகரமாகும் நீர் பலகோடி லிட்டர்கள் நிலத்தடியில் சேகரிக்கப்பட்டு வறட்சி காலங்களில் பிரத்தியேகமாக அமைக்கப்படும் மோட்டார்கள் மூலம் விவசாயத்திற்கு பல மாதங்கள் வரையில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார்கள்.
"பூங்ரூ" தொழில்நுட்ப நிர்மாணம் அனைத்தும் பயிற்சி பெற்ற பெண்களாலேயே நிகழ்த்தப்படுகிறது என்பது மற்றுமொரு சிறப்பான அம்சம். பெண்களின் பயிற்சி மற்றும் செயலாக்கம் திருப்தி ஜெயின் (Trupti Jain) அவர்களின் "நைரீத்தா சர்வீஸஸ்" (Naireeta Services) நடத்துகிறது. சமூக அக்கறை கொண்ட நிறுவனமான நைரீத்தா சர்வீஸஸ் நகர மற்றும் கிராமத்தை சார்ந்த ஏழைக் குடும்பங்களின்
ஏழ்மை நிலை போக்க சேவை செய்து வருகிறது "புங்ரூ" மூலமாக.
பிப்லாப் கேதன் பால் 14000 விவசாயிகள் 40,000 ஏக்கர் வறண்ட மற்றும் வெள்ள அழிவை சந்தித்த நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றியுள்ளார். இந்த ஆக்கச் செயலை பாராட்டும் வகையில் 2015 ஆம் ஆண்டில் (UN Climate Change Conference UNCC) "மோ மெண்டம் ஃபார் சேஞ்"
(Momentum for change) என்ற விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. தவிர மேலும்.
1. அமைதியின் தூதுவர் (Ambassador for peace) விருது.
2. அசோகா குளோபல் சேஞ் மேக்கர். (Ashoka Global change maker) விருது.
3. இந்தியாவின் மாற்றம் நிகழ்த்துபவர் (Change maker in India)
4. தண்ணீர் நட்சத்திரம் (Water Star) விருது.
5. மாநில வளர்ச்சியின் சிறந்த பங்களிப்பாளர் (Contributor for state development) விருது உட்பட இன்னும் பல விருதுகள் பெற்றுள்ளார்.
" தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று"
திரு. பிப்லாப் கேத்தான் பால் - அவர்களின் புகழ் ஓங்குக !!
Naireeta Services Private Limited.
Registered Office
www.naireetaservices.com
Registered Office
B7 Aditya Flats, Opp Rusabh Society,
Fatehpura, Paldi,
Ahmedabad 380007,
Gujarat, India
Operation Office
Phone: +91 98255 06900
Email: biplab@naireetaservices.com
Naireeta Services Private Limited,
B-1, 1203, West Gate, Business Bay,
Near Signature I, Makarba Crossing,
Makaraba, Ahmedabad- 380051,
Gujarat, India
Field Offices
Mr. Biplab Paul – Director
Naireeta Services Pvt. Ltd.
Email: biplab@naireetaservices.com
Mobile : +91 9825506900
Mr. Sureshbhai Nayak
First Floor, Shabari Plaza,
Opp. Taluka Panchayat Building
Harij - 384240,
Dist. Patan, Gujarat
Mrs. Trupti Jain – Founder Director
Naireeta Services Pvt. Ltd.
Email: trupti@naireetaservices.com
Mobile : +91 9925007097
Mr. M P Ramkumar
Plot No. 8, Gayatrinagar,
Kotapolur Road, Sullurpeta,
Neilore District,
Andhra Pradesh -524121,
Mobile : +91 9940652943
Email: ramakumar_m@hotmail.com,
ram@naireetaservices.com
Subsidiary/ Affiliated organizations/companies
1. Sustainable Green Initiatives Forum (Registered company under section 8)
NGO name
1.Climate Connect
2. Lokvikas
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.