"நெக்சு மொபிலிட்டி" (Nexu Mobility) நிறுவனம் புனே - வைதலைமையிடமாகக் கொண்டு 2015-அண்டு திரு.அதுல்யா மிட்டல் (Mr.Athulya Mittal) அவர்களால் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளை விற்பனை செய்கிறது.
கடந்த காலங்களில் சில ஆண்டுகள் முன்பு வரையில் மின்சார வாகனங்களின் நிலை பல கேள்விகளையும் சந்தேகங்களையும் கொண்டதாக பார்க்கப்பட்டது. ஆனால் 2018- ஆம் ஆண்டுக்கு பிறகு நேர்மறை சாதக கொள்கைகளையும் சலுகைகளையும் அளிக்கத் துவங்கிய பிறகு சுமார் 20% சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் மொத்த விற்பனையில் மின்சார வாகன விற்பனையில் தற்போது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டினாலும் நடப்பு மற்றும் வரும் காலங்களில் இத்தகைய நிறுவனங்கள் இந்தியச் சந்தையிலும் வெளிநாட்டு சந்தையிலும் செழித்து வளரும் என்று கணக்கிடப்படுகிறது.
இந்த வகையில் வளர்ந்து வரும் நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாக மின்சார மிதிவண்டிகள் மற்றும் ஸ்கூட்டர்களை மேம்பட்ட வாகனங்களாக ரிவர்ஸ்கியர், திருட்டு அலாரங்கள், மற்றும் சைடு ஸ்டாண்ட் உணர்விகள் போன்ற அதி நவீன அம்சங்களுடன் சந்தைப் படுத்துவதன் மூலம் பசுமை நடமாட்டத்தின் மதிப்புகளை நிலை நிறுத்துவதாக பெருமிதம் கொள்கிறார்கள். இந்திய சாலைகளுக்கு ஏற்றதாகவும் குறைந்த விலையிலும் வாடிக்கையாளர்களுக்கு மின்சார மிதிவண்டிகள் மற்றும் ஸ்கூட்டர்களை வழங்கி வருகிறது.
"நெக்சு மொபிலிட்டி" - யின் தலைமைச் செயல் அலுவலர் திரு- ராகும் ஷோனக் கூறுகையில் நிறுவனத்தின் மின்சார மிதிவண்டிகள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் இந்தியாவில் உள்ளூர் உற்பத்தி மற்றும் வளர்ச்சியை தூண்டுவதன் மூலம் இந்திய மின்சார இயக்கம் துறையை (Indian Electric Mobility Industry) வடிவமைக்க நெக்சு உதவுகிறது என்று கூறுகிறார்.
மின்சார மிதிவண்டியின்
சிறப்புகள்:
1. மின்சார மிதிவண்டியின் விலை ரூ 31,983 முதல் 42,317 வரை.
2. வாகன பயன் பாட்டுக்கு கிலோமீட்டருக்கு ரூபாய் 20 பைசா மட்டுமே.
3. மின்சார மிதிவண்டி 50 ரூபாய் செலவில் 1000 கிலோமீட்டர் வரையில் செல்லக்கூடியது.
4. மிகக்குறைவான பகுதிகளுடன் (Minimum Parts) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகள் குறைந்த பராமரிப்புடன் இருப்பதால் அதிக செலவுகளை மிச்சம் படுத்துகின்றன.
5. மின்சார மிதிவண்டிகளில் 36 வோல்ட், 250 வாட் பிரஷ் இல்லாத டி.சி. மோட்டார் மற்றும் 26 அங்குல நைலான் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
6. மின்சார மிதிவண்டிகள் ரோம்பஸ் +, மற்றும் ரோட்லார்க் ஆகிய இரண்டு மாடல்களில் விணகப் படுத்தப்பட்டுள்ளன.
7. பேட்டரிகள் முழு மின்னேற்றத்திற்குப்பின் நான்கு மணி நேரம் வரையில் மிதிவண்டியை பயன்படுத்த முடியும்.
8. மின்சார மிதி வண்டிகள் பெடல் பயன் முறையிலும் திராட்டில் (Throttle) பயன் முறையிலும் உள்ளன.
9. இந்தியா முழுவதும் 70 க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அவர்கள் வழியாக மின்சார வாகனங்களைப் பெறலாம்.
10. ஆன்லைன் மூலமாகவும் மின்சார வாகனங்களை வாங்கலாம்.
11. புனேவில் உள்ள நிறுவனத்தின் ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
12. மோட்டார் மற்றும் பேட்டரி 18 வாத உத்தரவாதத்தை வழங்குகின்றன.
ஆரம்ப கட்டத்தில் சவால்கள் இருந்தபோதிலும் "நெக்சு மொபிலிட்டி" அதன் அடையாளத்தை திறம்பட உருவாக்கி பல ஆண்டுகளாக இந்தியாவின் பசுமை இயக்கம் பிரிவில் வலுவான ஒரு இருப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச ஏற்றுமதி சண்தைகளை கைப்பற்றியதோடு எதிர்காலத்தில் இரண்டு பிரீமியம் மின்சார மிதிவண்டிகளை உள்ளிட்ட புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது. "நெக்சு மொபிலிட்டி" யை எளிதாக அணுகுவதற்கு அமேசான், பேடிஎம், சாய்ஸ் மியி சைக்கிள் மற்றும் பைக்ஃபார்சேல் போன்ற ஆன்லைன் தளங்களில் விற்பனையை மேற்கொள்ள விருகறது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.