தலைநகர் டெல்லியைச் சேர்ந்த "ஆண்ட் ஸ்டுடியோ" (Ant Studio) என்ற நிறுவனம் தொழிற்சாலைகளுக்கான குறைந்த செலவாகும் இயற்கை முறை மண் குளிர்பானங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது. அதனுடைய சிறப்புகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குறைந்த விலை என்று கூறப்படுகிறது இத்தகைய குளிர்பானங்களுக்கு தேவையானது 1. டெர்கோட்டாகளி மண் (Terracotta Clay) மற்றும் தண்ணீர் மட்டுமே.
Photo Source: Ant Studio
பண்டைய காலத்து எகிப்து (Egypt) தொழில் நுட்பத்தின் படி தண்ணீர் ஆவியாகி சுற்றுப்புறத்தை குளிர்விக்கும் (Egyptian Evaporative Cooling) முறை பின்பற்றப்படுகிறது தொழிற்சாலையின் ஒரு பக்கத்தில் டெர்கோட்டா (Terracota) களிமண் கொண்டு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான நீண்ட குழாய்கள் தேனி கூண்டைப் போல (Honey comb) கலை நுணுக்கத்துடன் பொருத்தப்பட்ட பின் அவற்றின் மீது குளிர்ந்த நீர் தொடர்ந்து விழும்படி அமைக்கப்பட்டு தொழிச்சாலையின் வெப்பக்காற்று டெர்ரகோட்டா குழாய்களின் வழியாக செல்லும்போது குளிர்விக்கப்படுகிறது. இச்செயல் தொடர்ந்து நடைபெறும்போது தொழிற்சாலையின் உள் வெப்பநிலை 50 °C இருந்து 36 °C - யாக குறைக்கப்படுகிறது.
Photo Source: Ant Studio
முதன்முதலாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் "டேகி எலக்ட்ராணிக்ஸ்" (Deki Electronics) என்ற தொழிற்சாலையில் நிறுவப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இத்தகைய குளிர்விப்பானங்கள் சுற்றுசூழல் பாதுகாப்பானதும்
விலை குறைவும் மட்டும் அல்லாது மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு பொருளாதார உதவியாக இருக்கிறது என்பது வரவேற்கத்தக்கது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.