June 09, 2021

பண்ணை கழிவுகளை பயன்படுத்தி ஒரு குளிர் பதன அறை

ஆகாஷ் அகர்வால், உத்தரபிரதேசத்தில் உள்ள சஹரன்பூர் வாழும் இந்தியர். அமெரிக்காவின், உத்தா பல்கலைகழகத்தில் (Utah University)  விற்பனைத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

தந்தை அனுராக் அகர்வால் (Anurag Agarval)  இயந்திர தொழில்நுட்பத் துறையில் பட்டமேற்படிப்பினை இந்தியாவின் ஐ.ஐ.டி (IIT) மற்றும் அமெரிக்காவின் டெனிஸ்ஸி பல்கலைக்கழகத்தில் (Tenesse Technological University) முடிந்தபின் முப்பத்தொன்பது ஆண்டுகள் பல பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து
செறிந்த அனுபவ அறிவைப் பெற்றவர்.டாக்டர்.பி.வி.ராவ் (Dr.Pv.Rao)  பொருளாதாரத்துறையில் பல்வேறு வங்கிகள் மற்றும் பொருளாதார மேலாண்மை நிறுவனங்களில் 39 ஆண்டுகள் பணிபுரிந்து செறிந்த அனுபவ அறிவை பெற்றவர்.

ஆகாஷ் அகர்வால், அனுராக் அகர்வால், டாக்டர்.பி.வி.ராவ் மூவரும் இணைந்து  (Newleafdynamic) என்ற நிறுவனத்தின் கீழ் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக பல கண்டுபிடிப்புகளை செயலாற்றி வருகின்றனர்.அந்த வரிசையில் "கிரீன் சில் கூலர்ஸ்" (Green Chill Coolers) என்ற பெயரில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக பண்ணை கழிவுகளான சாணம், தவிடு, காய்ந்த இலை தழைகள், மரத் துண்டுகள், தென்னை ஓலைகள்| தேங்காய் ஓடுகள், பயோ கேஸ் மற்றும் எரியக்கூடிய அனைத்து பண்ணை கழிவுகளையும் பயன்படுத்தி பழங்கள், காய்கள் மற்றும் அனைத்து பண்ணை உற்பத்திப் பொருட்களின் வாழ்நாளை நீடிக்க ஒரு குளிர்பதனப் பெட்டிகள் அறைகளை உருவாக்கி உள்ளார்.

" கிரீன்சில்" குளிர்பதனம் எவ்வாறு செயல்படுகிறது என்ற அதன் தாத்ப்பர்யம் :

பண்ணை கழிவுப் பொருட்களான வைக்கோல், கால்நடைகளின் உலர்ந்த சாணம், தென்னை மட்டைகல் மற்றும் ஓலைகள், தேங்காய் ஓடுகள் மற்றும் பயன்படாத மரங்கள் அனைத்தும் ஒரு உலையில் இட்டு எரிக்கப்படுகிறது. அதனால் உற்பத்தியாகும் வெப்பத்தை பயன்படுத்தி பிரத்தியேக உபகரணங்கள் இயங்கி கம்ப்ரஸர் மூலமாக குளிர்பதன பெட்டியை / அறையே குளிர்விக்க படுகிறது, தற்போது

- குளிர்பதன அறைகள் 15, 20, மற்றும் 25 டன்கள் கொள்ளும் அளவு உள்ளன.

-  -  2 °C லிருந்து  + 25°C அளவில் தேவையான அளவிற்கு குளிர்விக்கப்படுகிறது.

முதன்முதலில் ஒடிசா மாநிலத்தின் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் 1000 லிட்டர் பாலும் 30,000 கிலோ பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் மீன்கள் பதப்படுத்தும் குளிர்பதன அறை நிர்மாணிக்கப்பட்டது. பின்னர் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்திலும், அஸ்ஸாம் மாநிலத்தின் மஜீலி, சில்சார் மாவட்டங்களில் குளிர்பதன அறைகள் அமைக்கப்பட்டன. இந்த வகையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிர்மாணப் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியசக்தி குளிர் பதனப் பெட்டி "எக்கோ ஃப்ராஸ்ட்" (Eco Frost) ஒரு சூரிய சக்தி குளிர் பதனப் பெட்டி: இதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்யவும்.????
 
http://countryfarmss.com/news/27"கிரின் சில் குளிர்விப்பான்கள்" (Green Chill Coolers)ன் சிறப்புகள்:

- பண்ணைக் கழிவுகள் கொண்டு குளிர்விக்கப்படுகிறது.

- அரசு மின்சாரமோ, பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களோ  பயன்படுத்தப்படுவதில்லை.

- பால், காய்கறிகள், மீன், மலர்கள் போன்ற அனைத்து பண்ணை பொருட்களின் வாழ்நாளை நீட்டிக்கப் முடியும்.

- சாதாரணமாக 10 வாரங்கள் வறையில் பண்ணை பொருட்களின் பசுமை குன்றாமல் வாழ்நாள் நீட்டிக்கப் படுகிறது.

- குளிர்ச்சி நிலை -2 °C விருந்து  + 25°C வரையில்  வைத்திருக்கலாம். ஈரப்பதம் 65% முதல் 95% வரையில் வைக்க முடியும்.

- 10 டன்கள் முதல் 25 டன்கள் வரையில் தற்போது விளைபொருட்களை சேமிக்கும் முறையில் அறைகள் அமைத்து கொடுக்கப்படுகிறது.

குளிர்பதன அறை தவிர ஐஸ்கிரீம் தயாரிப்பு இயந்திரம், மொத்த பால் குளிரூட்டும் பெட்டி, பழுக்க வைக்கும் இயந்திரம், உலர வைக்கும் இயந்திரம், மற்றும் காளான்கள் வளர்க்கும் அறைகள் அனைத்தும் New leaf Dynamic நிறுவனம் அமைத்துக் கொடுக்கிறது.

" படிமங்களால் உருவான எரிபொருட்கள் மனிதன் உற்பத்தி செய்தவை அல்ல, அவற்றை மறுசுழற்சி செய்யவும் முடியாது. இந்த இயற்கை வளமூலதனங்கள் ஒருமுறை பயன்படுத்தப்பட்டால் அவ்வளவுதான், அவற்றை மீண்டும் பெறமுடியாது இதை நினைவில் கொள்ளுவோம்".

B-1/B-1, Mohan Cooperative Industrial Estate, Mathura Road, New Delhi -110044
A-150 Phase II, Sector 80, Noida, 201301, India
+91 98108 16292
info@newleafdynamic.com

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 
Stories