June 27, 2021

ஒன்றும் செய்யாதே விவசாயம் (Do nothing farming)

விவசாய நிலத்தில் எந்தவித பராமரிப்பும் செய்யாமல் மாதம் ரூ 45,000/- சம்பாதிக்கும் தமிழ்நாடு தம்பதிகள் திரு. ஹரிவர்தா பிரஜீத் (Mr. Harvartha Prajeeth) மனைவி டாக்டர். திருமதி மங்கையற்கரசி லீலா
(Mrs.Dr. Mangayarkarasi Leela).

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இராமநாத்புரமா என்ற கிராமத்தில் தங்களுடைய மூன்று ஏக்கர் நிலத்தை "கர்ம பூமி" என்று அழைக்கும் தம்பதியினர் ஃ புக்குவோகா (Fukuoka) இயற்கை வேளாண்மை மற்றும் பெர்மா கல்சர் முறையில் (Perma Culture) தங்கள் பண்ணையில் எந்த உரத்தையும் பூச்சி கொல்லி பயன்படுத்தாமலும் நிலத்தை உழாமலும், விதைப்பதும் இயற்கை விதை பரவல் மூலமாக விளைவிக்கின்றனர். அதாவது விதைகள் எங்கு விழுந்தாலும் அதன் வழியில் இயற்கையாகவே வளரும் என்று நம்புகிறார்கள். பாரம்பரிய வகைகளின் விதை சேமிப்பு அவர்களின் விவசாயத்தில் முக்கிய குறிக்கோள் மற்றும் செயல்பாடாகும்.



ஆழமான உழவுக்கு பதிலாக விழுந்துள்ள பச்சை மற்றும் உலர்ந்த இலைகளைப் பயன்படுத்தி தழைக்கூளம் மற்றும் மேல் மண்ணின் ஒரு அடுக்கை உருவாக்கி விதைகளை நடவு செய்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் மண் அரிப்பு தடுக்கப்பட்டு விதைகள் செழுமையாக முளைப்பதற்கு தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது.

பொறியாளர், டாக்டர் தம்பதியினரின் பண்ணையில் பச்சைப்பயிறு (Green Gram), உளுந்து (Black Gram), வேர்கடலை, தினைப்பயிர்கள் (Millets), பலா, வாழை, தென்னை, கொய்யா, காய்கறிகள் அனைத்தும் வளர்க்கப்பட்டு விழுப்புரம், பாண்டிச்சேரி சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வீட்டில் தயாரிக்கப்பட்ட வேர்க்கடலை உருண்டைகள், கேழ்வரகு, எள் உருண்டைகள் பழ ஜாம்கள், காய்கறிகள், டீ இலையாகவும் தூளாகவும் மருத்துவ குணமுள்ள மூலிகைகளும் விற்கப்படுகின்றன இவை அனைத்துமே லாபக்கணக்கு பார்க்காமல் விற்கப்படுகின்றன என்பது சிறப்பு.



விற்பனைக்காக பிற உணவுப் பொருட்களை வழங்கும் ஆரோவில்லின் "கிராட்டிடியுட் ஃபார்ம் பிரைவேட் லிமிட்டெட் (Gratitude Farm Private Limited of Auroville) என்ற நிறுவனத்துடன் இணைந்து எங்கள் அமைப்பை "உழவர் மேகம்" (Farmer cloud) என்ற பெயரிட்டு நடத்தி வருகிறோம் என்று டாக்டர் மங்கை கூறுகிறார்.

உழவர் தம்பதியினரின் கூற்றுப்படி கர்ம வேளாண்மைக்கு அதிக அளவில் மனித வளமும் (Man Power)  பிற செயல்பாடுகளும் தேவைப்படுகிறது மேலும் விவசாயிகளுக்கு சரியான விலையை உறுதி செய்யக்கூடிய கரிம பொருட்களுக்கான கட்டமைக்கப்பட்ட சந்தை இன்னும் நமது நாட்டில் இல்லை.

இந்த முன்மாதிரி விவசாயம் சுவாரசியமாகவும் நிலையானதாகவும் தோன்றினாலும் வணிக நோக்கங்களுக்காக இதை அளவிட முடியவில்லை என்பதே நிதர்ஸனம். இந்த வகையில் இன்று வரையில் எங்களுடன் இணைந்தவர்கள் மிகக் குறைவுதான் என்றாலும் சிறிய அளவில் விவசாயிகளும், குடும்பங்களும் செய்யத் துவங்கினால் அது
மதிப்பிற்குரியது என்பதை உணர்வார்கள். எங்களைப் பொருத்தவரை "வேளாண்மை எதுவும் செய்யாதீர்கள்" என்பது "ஒரு வாழ்க்கை கலை" விவசாயம் முறையல்ல என்று டாக்டர் மங்கா என்ற அழைக்கப்படும் டாக்டர் மங்கையர்க்கரசி கூறுகிறார்.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories