January 10, 2021

"ராக்கெட் அடுப்பு" "Rocket Stove"

                                                                                             
ஒருநாள் எரிவாயு மின்சாரம் இல்லாத போனால் எவ்வாறு சமைப்பது என்ற அதீத எண்ணத்தின் காரணமாக உருவானது தான் "ராக்கெட் அடுப்பு"

கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தைச்  சேர்ந்த 57, வயதான திரு.அப்துல் கரீம் (Mr.Abdul Kareem) 3 in 1 ராக்கெட் அடுப்பை வடிவமைத்து மார்ச் 2020 முதல் சந்தைப் படுத்தி வருகிறார். "ராக்கெட்அடுப்பு" சமையல் அடுப்பாகவும் (Cooking Stove), சூளை அடுப்பாகவும் (Oven),  தண்ணீர் ஹிட்டராக (WaterHeater) ஆகவும் ஒருங்கே செயல்படத்தக்கது.



1850 - களில் ஆங்கிலேயர்கள் எண்ணத்தில் (Concept) உருவாகி பயன்பாட்டில் இருந்தது. தற்போது அதே தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இன்றைய தேவைக்ககேற்ப வடிவமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார் திரு.அப்துல் கரீம். அடுப்புப்பகுதிகள் 4 MM ஸ்டில் (Steal) கொண்டும் ஒவன் பகுதிகள் எவர்சில்வர் (Stainless Steel) தகடுகைளைக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

கொச்சி நகரத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரு. அப்துல்கரீம் "எக்செலன்ட் எஞ்ஜனியரிங்" (Excellent Engineering) என்ற உற்பத்தி மற்றும் வர்த்தக நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். நிறுவனத்தில் கொதிகலன்கள் (Boilers) மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் (Industrial Materials) தயாரித்து விற்பனை செய்து வரும் திரு.அப்துல் கரீம் தற்போது கூடுதலாக "ராக்கெட் அடுப்பும்" அந்த வரிசையில் இணைத்துள்ளார்.

தற்சமயம் நான்கு வகை "ராக்கெட் அடுப்புகள்" சந்தைப் படுத்தப்பட்டுள்ளது.

1. "பிரீமியம் வகை" (Premium Model) 60 கிலோ எடை கொண்டது, சமைப்பது, சூளை அடுப்பு (Grill), தண்ணிர் சுடவைப்பது அனைத்தும் ஒரு சேர பயன்படுத்த முடியும் விலை ரூ 20,000

2. "வழக்கமான வகை" (Regular Model) 35 கிலோ எடை கொண்டது. சமைப்து (Cooking), சூளை அடுப்பு (Grilling) இரண்டையும் ஒரு நேர்த்தில் செயல்படுத்த முடியும் விலை. ரூ 6500 /-

3. "அடிப்படை வகை" (Basic Model) 30 கிலோ எடை கொண்டது சமையல் (Cooking) மட்டும் செய்யக்கூடியது விலை ரூ 5000 /-

4. " பயணத்தொகுப்பு" (Tour Package Stove) 20 கிலோ எடை கொண்டது. பயணத்தின் போதும் தேவைப்பட்ட இடத்திற்கு எடுத்துச் சென்றும் சமையல் செய்து கொள்ளமுடியும் விலை ரூ 7000/-

அனைத்து வகைகளுக்கும் எரிபொருள் தேங்காய் ஓடுகள் தென்னை மட்டை காய்ந்த மரக்குச்சிகள், மரம் அறுப்பு மில்களில் கழிவு, மரக்கட்டைகள் மரத் தூள்மற்றும் காகிதங்கள்.

பொதுவாக பொருட்களுக்கு உத்தரவாதம் (Warranty) என்பது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது. ஆனால் "ராக்கெட் அடுப்பு" வாழ்நாள் உத்திரவாதத்தில் (Warranty) விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் கேரளாவில் மட்டும் சிலநூறு ராக்கெட் அடுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் விற்பனையை விரிவுபடுத்த விருப்பம் உள்ளதாக திரு.அப்துல் கரீம் தெரிவிக்கிறார்.

தொடர்புக்கு: 9562402265. 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories