September 12, 2021

கால்நடைமந்தை கண்காணிப்பு தொழில்நுட்பம் "Herd Monitor Technology"

வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன விரிவான அதி நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் அவர்கள் பராமரிக்கும் விலங்குகளுக்கு உதவும் வகையில் திரு. கோஜீ சீகே (Mr.Kosi Seike) என்பவர் 2016 - ஆம் ஆண்டில் "தேசாமிஸ்" (DESAMIS) என்ற நிறுவனத்தை துவக்கி அதன் தலைமை நிர்வாகியாக (CEO) தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.

இந்த நிறுவனம் அதிநவீன தொழில் நுட்பங்களின் அடிப்படையில் இயக்கப்படும் கால்நடை நடத்தை கண்காணிப்பு அமைப்பை
(U - Motion) வழங்குகிறது. கால்நடைகளில் வெப்பத்தை முன்னணி பொறியியல் மூலம் கண்டறிந்து அதன் மூலம் மருத்துவ சிகிச்சை மற்றும் செலவுகளை குறைப்பது மட்டுமல்லாமல் கால்நடைகளின் ஆரோக்கியத்தையும் செயல் திறனையும் மேம்படுத்துகிறது.

யு - மோஷன் (U - Motion) என்பது ஒரு செயற்கை நுண்ணரிவால் (Artificial Intelligence) இயக்கப்படும் கால்நடை நடத்தை கண்காணிப்பு அமைப்பு ஆகும். இது கால்நடைகளில் ஒவ்வொரு செயல்பாடுகளையும் பதிவு செய்கிறது. யு- மோஷன் கால்நடைகளின் கழுத்தில் அணியும் பட்டையில் அமைந்துள்ள மூன்று வகையான உணர்விகள் (Sensors) 3 D - முடுக்கம் (Acceleration) நியுமேட்டிக் (Phe umetic) மற்றும் அருகாமை உணர்விகள் (Proximity Sensor) கொண்டுள்ளது. இந்த உணர்விகள் (Sensors) விலங்குகளின் செயல்பாடு மற்றும் நடத்தையின் (Activity and Behaviour) தனித்தன்மையை தீர்மானிக்க உதவுகிறது, மேலும் உணர்விகளிலிருந்து தரவுகள் (Data) எல்லா நேரங்களிலும் இணையம் வழியாக (Internet) மேகக்கணி (Cloud Database) தரவு தளத்திற்கு மாற்றப்படும்.

செயல்பாடுகள்:

1. பெர்சனல் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், அல்லது லேப்டாப் சாதனங்கள் மூலம் எந்த நேரத்திலும் கால்நடைகளின் நிகழ்நேர செயல்பாடுகளை பார்க்கலாம்.

2. கால்நடைகளின் வெப்பம் மற்றும் நோய்களின் எச்சரிக்கை அறிவிப்புகளை பார்க்கலாம்.

3. உணர்விகள் கால்நடைகளின் செயல்பாடுகளிலும் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களையும் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கலாம்.

4. மிக மோசமான உடல் நிலையை கண்டறியவும் அதன்படி உடனடி சிகிச்சை முறையையும் அறியலாம்.

5. வெப்ப கண்டரிதல் மூலம் இனப்பெருக்க செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.

6. ஆரம்பகால அறிகுறிகளை தெரிவிப்பதன் மூலம் சிகிச்சை மற்றும் செலவை குறைக்க உதவுகிறது.

7. தனிப்பட்ட வெப்பக் கண்டறிதல் மூலம் வளர்சிதை மாற்ற நோய்கள் (Metabolic Diseases) மற்றும் பிற பிரச்சனைகளை கண்டறிய வழி வகுக்கும்.

இத்தகைய தொழில் நுட்பங்கள் வரும் ஆண்டுகளில் கால்நடை வளர்ப்பு உட்பட அனைத்து தொழில்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட உள்ளது என்பது நிதர்ஸனம்.

 

DESAMISCO.,LTD.

theSOHO418, 2-7-4, Aomi, Koto-ku, Tokyo, Japan, 135-0064

TEL : +81-3-6380-7239

FAX : +81-3-6380-7238

CONTACT : contact@desamis.co.jp

Stories