June 06, 2021

30 நாளில் மலிவு விலையில் வீடு ரெடி("O Pod Tube Houses")

உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று 2019 - ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், அதே ஆய்வில் சுமார் 6 கோடிக்கு அதிகமான மக்களுக்கு போதுமான வீட்டு வசதிகள் கிடைக்கவில்லை என்று கூறுகிறது.


பலர் வைக்கோல் குடிசைகள், தென்னை, பனை ஓலைகள் வேய்ந்த வீடுகள் போன்ற தற்காலிக வீடுகளில் வாழ்கின்றனர். சிலர் கழிவு செய்யப்பட்ட பழைய சரக்கு பெட்டகங்களில் (Discarded Containers) வீடாக கொண்டு வாழ்கின்றனர். இதுபோன்ற அவர்கள் பெரும்பாலும் தொடர்ந்து தங்கள் வீடுகளை இடமாற்றம் செய்ய அல்லது மீண்டும் கட்டியெழுப்பும் கட்டாயத்தில் உள்ளனர்.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தெலுங்கானாவில் பொம்மக்கல் கிராமத்தில் வசிக்கும் 23 வயதான சிவில் பொறியியல் பட்டதாரி பெரலா மானசா ரெட்டி (Perala Manasa Reddy) பெரிய அளவில் உள்ள புதிய கழிவுநீர் குழாய்களை கொண்டு மிகக்குறைந்த விலையில்" ஒபாட் டியுப் ஹவுஸ்" (O Pod Tube Houses) வடிவமைத்து கட்டியுள்ளார். அடிப்படையாக முதன்முதலில் ஹாங்காங்கில் ஜேம்ஸ்லா சைபர் டெக்சரால் (James Law Cybertecture) வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் இந்திய சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்கள் செய்து பெராலா மானச ரெட்டி கட்டியுள்ளார்.



"ஒ பாட் டியூப் ஹவுஸ்" (O Pod Tube Houses) - ன் சிறப்புகள்:

1. மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமான விசாலமானவை.

2. பயனாளிகளின் தேவைக்கேற்ப 1. BHK, 2BHK மற்றும் 3 BHK வீடுகளை கட்டமைக்க முடியும்.

3. ஒரு நபர் உள்ளே நிற்கும் அளவிற்கு குழாய் 7 அடி உயரமாக உள்ளதை உறுதி செய்கிறது.

4. வெப்பத்தை தடுக்க வெள்ளைப் பூச்சுடன் வழங்கப்பட்டுள்ளது.

5. குழாய்கள், கதவு ஜன்னல் சட்டகம் (window Frames) மற்றும் மின் பொருட்கள் உள்ளிட்டது.

6. வீடு 16 அடி நீளம் கொண்டது.

7. ஒரு சிறிய வாழ்க்கை அறை (Living Room) ஒரு குளியலறை, ஒரு சமையலறை ஒரு சிங்க் (Sink) மற்றும் கட்டில் அமைக்கும் அளவிலான ஒரு படுக்கையறை ஆகியவற்றை கெண்டுள்ளது.

8. முதல் குழாய் வீடு 2021 - ஆம் ஆண்டு மார்ச் 2ம் தேதி கட்டுமான பணிகள் தொடங்கி மார்ச் 28ஆம் தேதி 1 BHK வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதாவது 4 வாரத்தில் ஒரு வீடு தயார்.

10. குழாய் வீடு அனைத்து மூலப் பொருட்களுடன் சுமார் ரூ 5 லட்சத்தில் உள்ளது.

இத்தகைய வீடுகளை வணிகப் படுத்த "சாம்னவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்" (Samnavi Construction) என்ற நிறுவனத்தை துவக்கி அதன் மூலமாக விற்பனை செய்கிறார் பெராலா மனசா ரெட்டி.

இது வரையில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்று உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது நீங்கள் தொடர்புகொள்ள விரும்பினால் "சாம்னவி கட்டுமான" வலைதளத்தில் பார்வையிடலாம்.

Address:

CHANDRA RESIDENCY,RAM NAGAR,MUSHEERABAD,HYDERABAD,500020

+918519998651
+918519998657
contact@hello.com

Our Website: https://samnaviconstructions.com/

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories