October 30, 2020

எட்டு ஏக்கர் நிலத்தில் 550 வகை பழமரங்கள்

திரு.வில்லியம் மேத்யூ (Mr.William Mathew) கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கப்பாட்டுமலா (Kappattu mala) என்ற கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான எம்.சி.ஏ (MCA) பட்டதாரி. பல ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பணி புரிந்த பின் அந்த வேலையை துறந்து சொந்த ஊரில் பழப்பண்ணை, மீன் பண்ணை (Pisiculture), தேனீ வளர்ப்பு (Apiculture) மற்றும் தென்னந் தோப்பினை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

1996 -ல் ராஜகிரியில் (Rajagiri) பட்டப்படிப்பை முடித்தபின் பலவகையான பணிகளை மேற்கொண்டு தோல்வியை சந்தித்த பின்னர் தனது எட்டு ஏக்கர் நெல் வயலினை பழ பண்ணை, மீன் பண்ணை மற்றும் தேனி வளர்ப்பு ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி வருவதாக திரு.வில்லியம் மேத்யூஸ் கூறுகிறார்.



"இன்ஃபார்ம்" (Infarm) என்று அழைக்கப்படும் அவரது பண்ணையில் 30 வகையான எலுமிச்சை பழ வகைகள், 19 வகையான பேரிச்சம் பழ வகைகள், வெளிநாட்டு பழ வகைகளான அமெரிக்கன் கொக்கோணியா (American Coconia) மிக்கி மவுஸ் பழம் (Micky Mouse Fruit) வகைகள், வேக்ஸ் ஆப்பிள் (Wax Apple) பழ வகைகள், ஹிமாலயன் மல்பெரி ( Himalayan Mulberry) பழ வகைகள், ரோல்லினியா (Rollinia) பிரேசிலியன் ஜப்போட்டிகாபா (Brazilian Jaboticaba) போன்ற வெளிநாட்டு பழ வகைகள் தவிற உள்நாட்டு வகைகளான மூட்டி பழம் (Mooti Pazham), இன்ஜாராபழம், (Njara Pazham) மற்றும் காரபழம் (Kara Pazham) போன்ற வகைகளையும் வளர்த்து வருகிறார்.

பழமரங்கள் தவிர மூலிகை தாவரங்களான ப்ரான்கின்ஸி (Faran Kinsee), கற்பூரம் (Camphor), ருத்ராட்ஷம் (Rudraksha) மரங்களும் இதில் அடங்கும்.

இத்துடன் தற்போது இரண்டு குளங்களை ஏற்படுத்தி மீன் வளர்ப்பிலும் (Pisciculture), 100 பெட்டிகள் கொண்ட தேனி வளர்ப்பிலும் (Apiculture) விரிவாக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



திரு. வில்லியம் மேத்யூவின் மனைவி திருமதி.சீனா (Mrs. seena) இவர்களுடைய "மாவூர் இன்ஸ்டிடியூஷன் ஆப் கம்ப்யூட்டர் டெக்னாலஜி (Mavoor Institution of Technology) MICT என்ற நிறுவனத்தை 60 மாணவர்களுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

விவசாயம் வேண்டாமென்று விவசாயிகளே வேறு பணிகளை நாடிச்செல்லும் இந்த காலகட்டத்தில் நல்ல வருமானம் தரும் வெளிநாட்டு IT பணியினை விட்டு விவசாயமே உண்மையான வாழ்க்கை முறை என்று உணர்ந்து அதனை சிறப்புறச் செய்து வரும் திரு.வில்லியம் மேத்யூ போன்றவர்கள் பாராட்டத் தக்கவர்கள்.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Infarm Nursery:

Contact: +91 8281400600

 
Stories