July 13, 2022

உயிர் காத்த மாடித்தோட்டம் (Terrace garden for peaceful life)

மைசூரைச் சேர்ந்த திரு. ருத்ர ராத்யா வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் தற்போது 72 வயதானவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒய்வு பெற்ற திரு. ருத்தரராத்யா சில ஆண்டுகளுக்கு முன் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு நாளைக்கு இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உயிர் வாழ தேவை என்றும் கூறப்பட்டது வாழ்க்கை வீட்டுக்குள்ளேயே முடங்கி போக விரும்பாத திரு.ருத்ரத்யா மன அமைதிக்காக மாடியில் சிறிய தோட்டத்தை நிர்மாணித்து தனது மனைவி திருமதி ஹேமலதா உடன் இணைந்து பராமரித்து வருகிறார்.



இது உங்களுக்கும் விசித்திரமாக தோன்றலாம். ஆனால் அவரது வீட்டுகூறையில்  விதைகளை விதைப்பது மற்றும் தாவரங்களை பராமரிப்பது மட்டுமே முன்னாள் பேராசிரியருக்கு நம்பிக்கையும் மன அமைதியும் தருவதாக கூறுகிறார்.

தனது மொட்டை மாடியின்60*40 அடி பரப்பில் திரு. ருத்ரராத்யா 20 வகையான காய்கறிகளையும் 15 வகையான கீரைகளையும் வளர்க்கிறார் இந்த வகையில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், நூல் கோல். கலர் குடைமிளகாய், கத்திரி, தக்காளி, பீன்ஸ், முள்ளங்கி கேரட், முருங்கை கருவேப்பிலை, மேத்திகீரை, கொத்தமல்லி போன்றவை அடங்கும் இது தவிர ஸ்ட்ராபெரி, ட் ராகன் பழம், அத்திப்பழம், மாம்பழம், பப்பாளி, பாசிப்பழம், திராட்சை ஆகியவை வளர்க்கிறார். மேலும் பூக்கள், காட்டுக்கொத்தமல்லி, ப்ரம்மி
மற்றும் பில்வா போன்ற மருத்துவ தாவரங்களையும் வளர்க்கிறார்.

72 வயதான நகரப்புற தோட்டக்காரர் ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதில்லை. மாடித்தோட்டம் அமைப்பதற்குகோகோ பீட், தோட்ட மண், கம்போஸ்ட் உரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு கலவையையே வளர்ப்பு மீடியமாக பயன்படுத்தப்படுகிறார் . சொட்டுநீர் பாசன மூலம் செடிகளுக்கு நீர் பாய்ச்சப் படுகிறது கூடுதலாக பாகற்காய், முட்டை பூ, புடலை, பூசணி, முலாம் பழம் மற்றும் தர்பூசணியும் வளர்க்கிறார். தனது வீட்டுக்குத் தேவையை பூர்த்திக்கும் பின் உபரி விளைச்சலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு சிறந்த ஒருங்கிணைந்த பண்ணை மாதிரி என்ற அரசின் விருதினைப் பெற்ற திரு.ருத்தரராத்யா நகரப்புற மாடி தோட்டக்கலை என்பது வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல் மன அமைதி தருவதாகவும் ஒரு நல்ல பகுதிநேர தொழிலாகவும் இருக்கும் என்று கூறுகிறார் நம் அனைவருக்கும் நம் உணவை வளர்க்க நிலம் இல்லை தான். ஆனால் நம்மில் பலருக்கு மொட்டை மாடியில் விவசாய உள்ளது முறையாக பின்பற்றினால் இந்த வரையறுக்கப்பட்ட இடத்திலும் புதிய, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான உணவை வளர்க்க முடியும்.

தொடர்புக்கு: 9448145228 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories