February 24, 2022

மக்கும் தன்மையுடைய கப்புகள் (Bio Degradable Containers)

தமிழக அரசு சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக "மீண்டும் மஞ்சப்பை" என்ற பிரச்சாரத்தை தொடங்கியபோது 39 வயதான கல்யாண்குமார் கோயம்புத்தூரில் "எஸ்.பி.எஸ் கல்யாண் மெஷின் டிசைனர்ஸ்" (SPS Kalyan Machine Designers) என்ற நிறுவனத்தின் உரிமையாளருக்கு லாபகரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கொள் கலன்கள், தட்டுக்கள் கரண்டிகள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பல வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை இயற்கை கழிவுப் பொருட்களைக்கொண்டு தயாரித்து சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்தது.


அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கால்நடைகள் உண்ணக்கூடிய மற்றும் மக்கும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சமையல் பாத்திரங்களான கரண்டிகள், தட்டுகள் மற்றும் கொள்கலன்கள் ஆகியவற்றை உருவாக்கக்கூடிய இயந்திரங்களை கண்டுபிடித்துள்ளார்.



தேவையான மூலப்பொருட்கள்:-

1. கோதுமை தவிடு

2. அரிசி தவிடு

3. மரத்தூள்

4. வாழை நார்

5. காய்கறி கழிவுகள்

6. வைக்கோல்

7. மரவள்ளிக்கிழங்கு கழிவு

  1. பனைநார்  உட்பட 15க்கும் மேற்பட்ட பொருட்கள்.

    உற்பத்தி செய்யக்கூடிய பயன்பாட்டுப் பொருட்கள்:-

    1. ஐந்து வகையான டீ கப்புகள்

    2. நான்கு வகையான ஜூஸ் கிளாஸ்கள்

    3. தண்ணீர் பாட்டில்கள்

    4. வழக்கமான குடுவைகள்

    5. காற்றுப்புகாத குடுவைகள்

    6. தட்டுகள் பலவகையில்

    7. உணவு பாத்திரங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இதில் அடங்கும்.

    சிறப்பு:-

    பயன்பாட்டுக்குப் பின் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம் அல்லது 100 சதவீதம் மட்கும் எருவாக பயன்படுத்தலாம்.

    "எஸ்.பி.எஸ் கல்யாண் மெஷின் டிசைனர்ஸ்" நிறுவனம் தேசிய மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. பெல்ஜியம், அந்தமான், சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்திய நிறுவனங்கள் வாடிக்கையாளராக உள்ளனர். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இயந்திரங்களின் விலை ரூ 1 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரையில் உள்ளது. கையால் இயங்கும் இயந்திரங்கள் முதல் தானியங்கி இயந்திரங்கள் வரையில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது உதாரணமாக டிகப்தயாரிக்கும் கைமுறை இயந்திரம் ஒரு நாளைக்கு 1000 கப் தயாரிக்கும் வகையிலும் தானியங்கி இயந்திரம் 1 நாளைக்கு 10000 டி கப்புகள் உற்பத்தி செய்கிறது. தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூவ கழிவு பொருட்களுக்கு ஏற்ப ஒரு கப் 50 பைசா முதல் ரூபாய் 3 வரையில் அமைகிறது.

    சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தவிர்க்க நிலையான தயாரிப்புகளுக்கு மாறுவது காலத்தின் தேவை மேலும் பல நிறுவனங்கள், அரசுகள், மற்றும் குழுக்கள் இந்த மாற்றீட்டை எடுத்துக கொள்கின்றன. அந்த வகையில் "எஸ்.பி.எஸ் கல்யாண் மெஷின் டிசைனர்ஸ்" நிறுவனம் இந்த செயல்முறைக்கு உதவும் ஒரு சிறந்த முயற்சியாக உள்ளது.

SPS Kalyan Machine Designers: 9597715496

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories