August 23, 2021

தரிசு நிலத்தை விளை நிலமாக்கும் இயந்திரம் (Barren Land to cultivable Land Converting Machine)

தெலுங்கானா மாநிலத்தின் சங்கா ரெட்டி மாவட்டத்தின் சிறிய கிராமம் பரோஞ்சா. வைச் சேர்ந்த 26 வயதான திரு.K. தீபக் ரெட்டி (Mr.Deepak Reddy) என்ற மெக்கானிக்கல் பொறியாளர் திரிசு நிலங்களை சாகுபடி செய்ய கற்கள் மற்றும் பாறைகளை நீங்கி விளை நிலமாக மாற்றும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார். மேலும் அதே இயந்திரம் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பிற வேர் காய்களையும் அறுவடை செய்யவும் வடிவமைத்துள்ளார்.

பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பெரிய அளவிலான கல்குப்பைகள் காரணமாக எந்தவிதமான விவசாய நட வடிக்கைகளையும் மேற்கொள்ள முடிவதில்லை நிலத்தில் இருந்து கற்களை அகற்ற அதற்கு பெரும் செலவுகள் ஆகின்றது சுமார் 5-7 ஏக்கர் நிலம் கொண்ட விளிம்பு நிலை விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான முதலீட்டை தவிர ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க முடியாது என்பது யதார்த்தம்.



இந்தியாவின் பல மாநிலங்கள் மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளும் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றன ஆனால் வெளிநாடுகள் அதிக பொருட்செலவில் இயந்திர மயமாக்கப்பட்ட தீர்வுகளைக் கொண்டுள்ளன. இந்தியாவில் இத்தகைய பணிக்கான செலவு குறைந்த உபகரணங்கள் இல்லாத குறையை திரு.தீபக் ரெட்டி என்ற பொறியாளரின் கண்டுபிடிப்பு நிவர்த்தி செய்கிறது.

செயல்பாடு:

இந்த இயந்திரம் முன்னோக்கி நகரும் டிராக்டர் மூலம் இணைக்கப்பட்டு இழுக்கப்படும் கருத்தாக்கத்தில் தான் வேலை செய்கிறது. இயந்திரத்தின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள கத்தி போன்ற அமைப்பு, கற்களுடன் மண்ணைத் தோண்டி அவற்றை கன்வேயர் பெல்டில் விழவைக்கிறது பெல்ட் அமைப்பு அச்சில் சுழன்று செயல்பாட்டில் மண்ணை வடிகட்டி மண் தரையில் விழுகிறது கற்கள் கன்வேயரிலேயே உள்ளன. இரண்டாவது வடிகட்டல் கட்டத்திற்கு மற்றொரு பெல்டுக்கு மாற்றப் படுகின்றன. அதன்பிறகு கற்கள் ஒரு சேமிப்பு வாளியில் சேர்க்கப்பட்டு கழிவு செய்யப்படுகின்றன.

உருளைக்கிழங்கு மற்றும் பிற வேர் காய்கறிகளுக்கும் இதே செயல்பாடு பொருந்தும் அறுவடை செய்வதை எளிதாகவும் விரைவாகவும் செய்வதால் விவசாயிகளுக்கு செயல்திறன் வருவாய் ஈட்டுவதற்கு ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது. மேலும் வெளிநாட்டு இயந்திரங்கள் 12 லட்சம் ரூபாயானாலும் திரு.தீபக் ரெட்டி கண்டுபிடித்துள்ள இயந்திரம் ரூபாய் 3 லட்சம் மட்டுமே. பல விவசாயிகள் கூட்டாக அதை வாங்க முடியும் அல்லது தற்காலிகப் பயன்பாட்டிற்கு வாடகைக்கு பெற முடியும் இதுபோன்ற சாதனங்களை பயன்படுத்துவது விவசாயிகளின் சாகுபடி நிலத்தை அதிகரிப்பதன் மூலம் அவர்கள் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும்.



திரு.K.தீபக் ரெட்டி-யின் தயாரிப்பு இயந்திரம் "பவ்மியா இன்னோவேஷன்ஸ்" (Bhaumya Innovations)  என்ற துவக்க நிறுவனத்தின் மூலம் வணிகரீதியில் விரைவில் விற்பனையில் சாதனை படைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories