January 24, 2021

"தோலுக்கு மாற்றான விற்தைப் பொருள்" "Leather Alternative Wonder Product"

கேரளாவின் ஒரு துவக்க நிறுவனம் (Kerala Startup) "மலாய் பயோ மெட்டிரியல்ஸ் டிசைன் பிரைவேட் லிட்" (Malai Bio materials Design Pvt.Ltd) தேங்காய் நீரை (Coconut Water) பயன் படுத்தி தோலுக்கு மாற்றாக நீர் உட்புக முடியாத ஒரு மாற்று அதிசய தயாரிப்பினை (Wonder Product) கண்டு பிடித்துள்ளது.

"மலாய் பயோ மெட்டிரியல்ஸ டிசைன் பிரைவேட் லிமிடெட்" நிறுவனம் "பீட்டா"  (PETA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம். (PETA - People for the ethical treatment of animals) விலங்குகளின் நெறிமுறை சிகிச்சைக்கான மக்கள் அமைப்பு.



தேங்காயின் பருப்பு (Drupe), தண்ணீர் இரண்டும் தோல், உடல் உறுப்புகளின் நலத்திற்கு பலவிதமான ஆதாயங்களையும் நோயை குணப்படுத்தும் பண்புகளும் (Healing Properties) கொண்டது என்பது நம்மில் பெரும்பாலோனோருக்குத் தெரியும். தேங்காய் நீரை கொண்டு சுற்றுச்சூழலுக்கு இணக்கமான (Environment Friendly) தொழிலைப் போன்ற ஒரு நெகிழ்வான உயிர் கலப்புப் பொருள் (Flexible Bio Composite material) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

திருமதி. ஜீசான கொம்பசோவா (Mrs.Zuzana Gombosova) இந்திய வாழ் ஸ்லோவோகியா (Slovakia) நாட்டைச் சேர்ந்தவர் தனது கணவர் திரு. சுஸ்மித் சுசீலன் (Mr. Susmith Suseelan) உடன் இணைந்து இந்த அதிசய கண்டுபிடிப்பை சந்தைப் படுத்தி உள்ளனர்.



தயாரிப்பு முறை:

- கேரளாவின் விவசாயிகளிடமிருந்து தேங்காய்கள் வாங்கப்படுகிறது.

- தேங்காயில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு அதனுடன் நுண்ணுயிர்கள் சேகரிக்கப்பட்டு நொதித்தல் செயல்முறை (Fermentation Process) நிகழ்த்தப்படுகிறது.

- நொதித்தல் செயல்முறை (Fermentation Process) 12 முதல் 14 நாட்கள் வரை நிகழ்கிறது.

- அதனுடன் தேங்காய் கழிவுகள், வாழைத்தண்டுகள்
(Banana Stems), சிஸல் நார்கள் (Sisal Fibre) மற்றும் சணல் நார்கள் (Hemp Fibre) சேகரிக்கப்படுகிறது.

- அத்தனையும் சேர்ந்து தோலைப் போன்ற ஒரு முப்பரிமாண (3 Dimentional Shapes) துணிகள் உருவாகிறது.

- இவை ஒரு வட்ட வாழ்க்கை சுழற்சி (Circular Life Cycle) பொருட்கள். பயன்பாட்டுக்கு பின் 150 நாட்களுக்குள் சிதைவுறக்கூடியது (Decompose).

- தோலை போன்ற விந்தைப் பொருளைக் கொண்டு தினப்பயன்பாட்டுக்கான தொங்கு பைகள் (Sling Bags) போட் பைகள், மடிக்கணினி பைகள் (Laptop Bags), பெல்ட் பைகள், பர்ஸ்கள் (Wallets) மற்றும் முதுகு சுமை (Back Pack Bags) இவைகள் அனைத்தும் தயார் செய்து பல நாடுகளில் சந்தைப் படுத்தப்பட்டுள்ளது

மலாய் (Malai) நிறுவனத்தின் செயலாக்கம் (Processing) தற்போது கொச்சியின் புறநகர் பகுதியில் மாதமொன்றுக்கு 200 சதுர மீட்டர் அளவிற்கு உற்பத்தி நடைபெறுகிறது. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் புகழ் பெற்ற நிறுவனங்களான "டான்".
(Ton), மேட்டர் (Ma-tt-er), கசிட்டோ (Kazeto) ஆகியவை Malai (Malai) நிறுவனத்தின் விந்தைப் பொருளை (Wonder Material) பயன்படுத்த வருகிறது.

சமீபத்தில் PETA அங்கீகரித்த இந்த நிறுவனம் லக்மே நிறுவனத்தால் 2020-ல் நடத்தப்பட்ட ஒரு போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Website: https://malai.eco/

Contact Number:

We would love to hear from you!

For general inquiries:

info@malai.eco

+91 7736997660

For inquiries about raw material supply, partnerships & business development:

business@malai.eco

For inquiries about material and sample order  :

sales@malai.eco

@malai.biomaterials (instagram/FB)

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories