பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து மாசுபட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்து செயல்களுமே மனிதனின் தேவை கருதியே என்றாலும் காற்று மாசுபடுதல் மற்றும் திடக்கழிவு உயிர்கள் வாழ்வதற்கான சூழலை குறைக்கின்றது இந்த நிலையை கட்டுப்படுத்தும் வகையில் மறுசுழற்சி மூலம் மனித குலத்திற்கு பயன்படும் வகையில் மாற்றுப் பொருட்கள் உற்பத்தி செய்வதில் பல துறைகளிலும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளம் பொறியாளர்கள் திரு. ரூபம் (Mr.Rupam) திரு.மவுசம் தாலுக்தார் (Mr.Mousam Talukdar), திரு.டேவிட் ப்ரதிம் கோகோய் (Mr.David Pratim Gogoi) இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு தங்களது பங்களிப்பாக கழிவு பிளாஸ்டிக்குகள், புகைபோக்கி கரி சாம்பல் கழிவுகள் மற்றும் சிறிதளவு சிமெண்டைக் கொண்டு கட்டிடச் செங்கற்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். வழக்கமாக விறகுகளை எரித்து சூளைகளில் தயாரிக்காமல் மின்சார அடுப்புகளைக் கொண்டு இத்தகைய செங்கற்களை தயாரித்து புகையினால் காற்று மாசு ஏற்படுத்தாதது கூடுதல் நன்மை.
"ஜெரூண்ட் பிரிக்ஸ்" என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் செங்கற்கள் 70% மாசு ஏற்படுத்தும் கழிவு பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
"ஜெரூண்ட் பிரிக்ஸ்" - ன் சிறப்புகள்:
- வழக்கமான சுட்ட களிமண் செங்கற்களை காட்டிலும் 10% எடை குறைவானது.
- வழக்கமான சூளைகளில் எரியூட்ட படாமல் மின்சார உபகரணங்களை கொண்டு (Electrical Equipments) தயாரிக்கப்படுகிறது.
- 10 லிருந்து 15 சதவிகிதம் வெப்பத் தடுப்பு (Thermal Insulation) இருப்பதால் வீட்டினுள்ளே வெயில் காலத்தில் குளுமையாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருக்க உதவுகிறது.
- களிமண் செங்கற்களை விட மலிவானது
- 6 களிமண் செங்கற்களுக்கு 1 தனித்துவமான ஜெரூண்ட் செங்கல் இணையானது
- பெரிய கற்களாக இருப்பதால் விரைவாக கட்டிடம் கட்ட முடியும் மேலும் தொழில்முறைச் செலவும் குறைவு.
2018- ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் குவஹட்டியில் (Guwahati) உள்ள அஜாரா (Azara) என்ற இடத்தில் 21000 ச.அடி பரப்பளவில் உள்ள தொழிற்சாலையில் சுமார் 10 லட்சம் ஜெரூண்ட் கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், மாடி குடியிருப்புகள் (Apartments) அஸ்ஸாம், அருணசலப்பிரதேசம், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கட்டப்பட்டுள்ளன. தற்சமயம் 1000 க்கும் மேற்ப்பட்ட வாடிக்கையாளர்கள் (Clients) கிழக்கிந்திய மாநிலங்களில் மட்டுமே உள்ளனர். "ஜெரூண்ட் பிரிக்ஸ்" - சுக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உற்பத்தியை அதிகரித்து அகில இந்திய ரீதியில் விற்பனை செய்ய இருப்பதாக நிறுவன இயக்குனர் திரு.ரூபம் அவர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்.
Coantact:
House No. 10, Juripar,
Sewali Path, Hatigaon,
Guwahati 38, Assam, India
+91 8638407020
+91 7002231943
askzerund@gmail.com
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.