November 15, 2020

மொட்டை மாடி மீன் வளர்ப்பு குளம் (Roof top fish pond)

மொட்டை மாடி கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடித்தோட்டம் வரிசையில் மொட்டை மாடி மீன் வளர்ப்பு குளத்தை நிர்மாணித்து மீன்கள் வளர்த்து வருகிறார் அசாம் மாநிலதின்  குவஹாட்டியைச் (Guwahati) சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி (Environmental Scientist) டாக்டர்.அமர்ஜோதி கஷ்யப் (Dr.Amarjyothi Kashyap).

மொட்டை மாடியை குளமாக்கி மீன் வளர்ப்பது என்பது சற்று வித்தியாசமான முயற்சியாக கருதப்படுகிறது. இருக்கும் குறைந்த இடத்தில் நகர விவசாயிகளாக தற்சார்பு விவசாயம் பெருகி வருகின்ற நிலையில் மீன் வளர்ப்பு தற்சமயம் இடம் பெறுகிறது.



டாக்டர்.கஷ்யப் தலைமையேற்று நடத்திவரும் என்விரான் (Environ) என்ற அரசு சாரா அமைப்பு கழிவு மேலாண்மை (Waste management) பிரிவின் கீழ் இத்தகைய மொட்டை மாடி மீன் வளர்ப்பை சமையலறை கழிவுகள் கொண்டு கடந்த சில மாதங்களாக செயலாற்றி வருகிறார். இதற்கான முதலீடாக Rs.50,000 செலவிட்டு நகர விவசாயிகளாக கூடுதல் வருமானமாக அல்லது தற்சார்பு பயன்பாட்டாளராக மொட்டை மாடி மீன் வளர்ப்பு அமைக்க முடியும் கூறுகிறார். தனது மொட்டை மாடி 4000 சதுர அடி பரப்பளவில் 1000 சதுரடி மீன் வளர்ப்பு குளமாகவும், 1000 சதுர அடி மாடித்தோட்டமாகவும், 2000 சதுர அடி குழந்தைகள், பெரியவர்கள் மனமகிழ் (Recreation park) பூங்கா வாகவும் மாற்றியுள்ளார். திரு.கஷ்யப்


மீன் குளமானது 28 அடி நீளமும் 14 அடி அகலமும் 4 அடி ஆழ மாகவும் அமைந்துள்ளது. தற்சமயம் கோல்டன் கார்ப் (Golden Carp) வகை மீன்கள் உற்பத்தியும் வளர்ப்பும் செய்து வருகிறார். மீன்களுக்கு உணவாக சமையலைறைக் கழிவுகளையும் பிரத்தியேக மீன் உணவுகளும் அளித்து வருகிறார்.

மேலும் அரசு சார் அமைப்பான ஸ்வச் பாரத் மிஷன் (Swachh Bharat Mission) -ன் படி திடக்கழிவு மேலாண்மையாக திடக்கழிவு தொட்டிகளை அமைத்து திட கழிவு மண்புழு எருவையும் (Vermicompost) திரவ சத்து நீரையும் (Vermi wash) தனது தோட்டத்திற்கும் மீதமானவற்றை நண்பர்களின் தோட்டத்திற்கும் அளித்து வருகிறார்  Dr.Kashyap.

இதுவரையில் 12,000 க்கும் மேற்பட்ட நகர விவசாயிகள் (Urban Farmers) திடக்கழிவு சேர்ப்பான்களை (Waste Assimalators) அமைத்து தங்களது மாடித் தோட்டங்களை பராமரித்து பலனடைந்து வருகின்றார்கள் என்பது பாராட்டத்தக்கது. மாடித் தோட்டங்களில் வெண்டை, கத்திரி, பீர்க்கன், காலி பிளவர், முட்டைகோஸ், பலவகையான கீரைகள், மற்றும் மருத்துவம குணம்  உள்ள செடிகளை வளர்த்து வருகின்றனர்.

Dr.Kashyap சகாக்களின் "என்விரான்" நிறுவனத்தின் இத்தகைய விவசாய முறை விரிவடைந்து பயனுள்ள நகர விவசாயம் பயனளிக்கும் என்பது திண்ணம். 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories