April 30, 2021

தண்ணீர் சேமிக்கும் கருவி "Fyllo"

விவசாயிகள் நோய்களற்ற ஆரோக்கியமான பயிர்களை வளர்க்கவும் தண்ணீரை மிகப்பெரிய அளவில் சேமிக்கவும் ஒரு சாதனத்தை கண்டு பிடித்து "ஃபைலோ" (Fyllo) என்ற துவக்க நிறுவனத்தின் மூலம் வணிக படுத்தி பெங்களூரை சேர்ந்த திரு. சுமித்ஷியோரன் (Mr.Sumit Sheoran) மற்றும் திரு. கதான் ஷியோரன் (Mr.Sumit Sheoran) மற்றும் திரு.சுதான் ஷிராய் (Mr.Sudhanshu Rai) சாதனைப் படுத்தியுள்ளார்.



1. இந்த சாதனம் மென்பொருள்  (Software) வன்பொருள் (Hardware) ஒருங்கிணைத்து அவ்வப்போது கிடைக்கும் தகவல்களைக் கொண்டு பயிர்களை உணரவும் பகுப்பாய்வு (Sense and Analyse) செய்யவும் மற்றும் பயிர் நோய்களை கணிக்கவும் சரியான நேரத்தில் உதவுகிறது.

2. சுமார் 1.5 கிலோ எடையுள்ள 15*15 செ.மி. சாதனம் ஒவ்வொரு பகுதியின் ஈரப்பதம், காற்று, மழை, வெப்பநிலை 13 க்கும் மேலான அளவுருக்களை (Parameters) யும் எதிர்வரும் நோய் தாக்குதல்களையும் பகுப்பாய்வுசெய்யும் இந்த உணர்வி (Sensor).

3. இந்த உணர்வி (Sensor) சாதனம் சூரிய சக்தியிலும் (Solar Energy) பேட்டரியாலும் இயக்கப்படுகிறது. சாதன நிறுவலும் செயல்பாடும் விவசாயிகள் சுலபமாக இயக்கும் வகையிலும், தேவையான போது மட்டும் இயக்குமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4. விவசாயிகள் “ஃபிலோ மொபைல்” பயன்பாட்டில் பதிவு செய்து அவர்கள் வளர்க்கும் பயிர், மண்ணின் வகை மற்றும் பிற அடிப்படை தகவல்களைப் பற்றிய உபகரணங்களைச் சேர்த்த பின்னர் சாதனம் பகுப்பாய்வு செய்து விவசாயிகளுக்கு எப்போது நீர்ப்பாசனம் செய்ய வேண்டும், என்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும், பயிரின் சிறந்த உற்பத்திக்காக திறனுக்கான சரியான நேரத்தில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் வழிகாட்டுகிறது.

5. வானிலை நிலைமைகளைப் பொருத்து பண்ணைக்கு பாய்ச்ச வேண்டிய நீரின் அளவு, எத்தனை முறை நீர் பாய்ச்ச வேண்டும் என்றும் கூறுவதால் பண்ணைக்கு பயன்படுத்தப்படும் அதிகப்படியான நீரை குறைக்க உதவுகிறது.

6. மழை மற்றும் நுண்ணிய கால நிலைமைகளைப் பொறுத்து இந்த சாதனம் ஏற்படக்கூடிய நோய்களை முன்னறிவிக்கிறது. அதன்மூலம் நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் செலவை குறைப்பதோடு அல்லாமல் விவசாயிகளின் இறுதி பண்ணை உற்பத்தியில் (Final Farm Produce) எந்த இழப்பையும் ஏற்படாமல் தடுக்கிறது.

7. ரூ.50,000/- விலையிலான இச்சாதனம் ஒவ்வொன்றும் 100 ஏக்கர் நிலங்களை உள்ளடக்கி செயல்படுவதால் ஒரு பெரிய குழுவிலான விவசாயிகள் ஒரே சாதனத்தில் முதலீடு செய்து பயன்படுத்தலாம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பயன்படும் அறிவிப்புகள் வழங்கப்படுவது இதன் சிறப்பு.



தற்சமயம் திராட்சை, குடைமிளகாய் (Capsicum) தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களுக்கு மட்டுமே சாதனம் செயல்படும் வகையில் உள்ளது. விரைவில் கொய்யா, வாழை, மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட காய்கறிகளுக்கான செயல்பாட்டைச் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக திரு.சுதான்ஷி கூறுகிறார்.

தற்போது மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் உள்ள 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் உள்ளதாகவும் விரைவில் குஜராத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில விவசாயிகளும் பயனடையும் வகையில் இணைந்து பணியாற்ற தொடங்க உள்ளோம் என்று அவர் மேலும் கூறுகிறார். 

Address:

Infosys Avenue, Electronics City Phase 1,
Electronic City, Bengaluru, Karnataka 560100IIIT-B Innovation CentreREACH UScontact@fyllo.inEMAIL US+91-7895387267

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories