November 17, 2020

நீர் விசை மின்சார உற்பத்தி ஆலை (Hydropower plant)

இந்தியாவின் கிழக்கிலுள்ள மலைகள் நிறைந்த மாநிலம் நாகாலாந்து (Nagaland). இங்கு உள்ள கோஹிமா (Kohima) மாவட்டத்தில் ஒரு மலை கிராமம் குசாமா (Khusama). கிட்டத்தட்ட 16 பிரிவுகள் கொண்ட மிகப்பழமையான மலைவாசிகள் குடியிருக்கும் பகுதி. இயற்கைக் கொடை அபரிமிதமாக இருந்தாலும் மின்சார வசதி இல்லாததால் தெருவிளக்குகள் கூட இல்லாத கிராம சூழ்நிலை.



திரு.கெசீடோ (Mr.Kesto) 31 வயது இளைஞர். அரசு இயந்திர தொழில் நுட்பத்துறையில் (Mechanical Department) இயந்திர தொழில்நுட்ப நிபுணராக (Technician)  பணிபுரிந்து வருபவர். கொரோனா பேண்ட மிக் ஊரடங்கு காரணமாக சொந்த ஊரிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனை நல்ல விதமாக பயன்படுத்த விரும்பிய திரு.கெசீடோ அந்த கிராமத்தின் இளைய சமூகத்தினரை இணைத்து ஒரு நீர் விசை மின்சார உற்பத்தி ஆலை (Hydropower Plant) நிறுவியுள்ளார். இதன் காரணமாக கிராமம் முழுவதும் சாலை விளக்குகளை அமைத்து தன்னிறைவு பெற்ற கிராம மாக மாற்றி சாதனை செய்துள்ளார்.

வருடம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் மிவோபோக் ஆறு  (Mewoboke River) அவருடைய நீர் விசை மின்சார உற்பத்தி ஆலைக்கு ஆதாரம்.
ஒரு நீர் விசை மின் உற்பத்தி ஆலையின் அடிப்படையான தத்துவத்தின் அடிப்படையில் தன்னுடைய பங்களிப்பு மற்றும் ஒத்த மனமுடைய பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றை வாட்ஸ் ஆப் (Whats app) மூலமாக பொரு ளுதவியாக Rs.85,000 -/- பெற்று ஒரு சிறிய நீர் விசை மின் உற்பத்தி ஆலையை (Mini Hydropower Plant) நிர்மாணித் துள்ளார். இதற்கு "ஒளி பொருந்திய குஸாமா திட்டம்" (Project Brighter Khuzama) என்று பெயரிடப்பட்டுள்ளது.

90 சதவீதம் விவசாயத்தை செய்து வரும் விவசாயிகள் இதுவரையில் "மெவோபோக்" ஆற்றையே நம்பி வந்துள்ளனர் தற்போது நதியின் வேகத்தைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்து சாலை விளக்குகள் மற்றும் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை யும் ஒளிமயமானதாக மாற்றியுள்ளனர்.

இந்த திட்டத்தினை பெரும்பாலும் "குஸாமா மாணவர் நல அமைப்பு" (Khuzama Students Care Union) மின் ஆலை, தெருவிளக்குகள்  நிர்மாணித்தல், அதற்கு அங்காமி மலைவாசிகள் (Angami Tribes) முறைப்படி வண்ணம் அடித்தல் ஆகிய அனைத்துப் பணிகளை செய்துள்ளதாக அதன் காரியதரிசி ( Secretary திரு.நோப்ரேணு தாப்ரு (Mr.Nophreru Thapru) கூறுகிறார்.

"Project Brighter Khuzama" பெற்ற வெற்றிச் செயல் பாட்டை நாகலாந்தின் மலைவாழ் மக்களின் சாதனையாக பல தலைமுறைகள் பாராட்டும் என்பது நிச்சயம். சாதனைகள் தொடரட்டும் !

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories