September 12, 2020

எளிமையான இயற்கை சார் களிமண் வீடு

திரு. பிஜு பாஸ்கர் மற்றும் திருமதி. சிந்து பாஸ்கர் (Mr. Biju Bhaskar & Mrs. Sindhu Bhaskar) 2011 - ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகரினை தலைமையிடமாகக் கொண்டு "தன்னல் மட் ஹோம்ஸ் ட்ரஸ்ட்" (Thannal Mud Homes Trust) என்ற நிறுவனத்தை துவங்கி எளிமையான இயற்கை சார் களிமண் வீடுகளை கட்டித் தரும் உயர்ந்த பணியினை செய்து வருகின்றனர்.


"தன்னல்" என்றால் நிழல் என்று பொருள் ஸ்தாபகர் பிஜு பாஸ்கர் பாரம்பர்யமான விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கட்டிடக்கலை பட்டப்படிப்பினை முடிப்பதற்குள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டடக் கலையை அறிந்து வந்தவர் தவிர சிற்பக்கலையிலும் புகழ்பெற்ற கஜுராஹோ (KHAJORAHO) சென்று மரசிற்பக்கலையும் பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. பாஸ்கர் திருமதி. பாஸ்கர் இருவரும் குழந்தைகள் ஆத்ய விருக்ஷா (Adhya Vriksha) போதி விருக்ஷா (Bodhi Vriksha) வுடன் அருணாச்சலம் என்று அழைக்கப்படும் திருவண்ணாமலையின் அடிவாரத்தில் தாங்களே வடிவமைத்து உருவாக்கிய எளிமையான இயற்கை சார் களிமண் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

புகைப்பட ஆதாரம்: Facebook

தன்னல்" என்றால் நிழல் என்று பொருள் ஸ்தாபகர் பிஜு பாஸ்கர் பாரம்பர்யமான விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கட்டிடக்கலை பட்டப்படிப்பினை முடிப்பதற்குள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டடக் கலையை அறிந்து வந்தவர் தவிர சிற்பக்கலையிலும் புகழ்பெற்ற கஜுராஹோ (KHAJORAHO) சென்று மரசிற்பக்கலையும் பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. பாஸ்கர் திருமதி. பாஸ்கர் இருவரும் குழந்தைகள் ஆத்ய விருக்ஷா (Adhya Vriksha) போதி விருக்ஷா (Bodhi Vriksha) வுடன் அருணாச்சலம் என்று அழைக்கப்படும் திருவண்ணாமலையின் அடிவாரத்தில் தாங்களே வடிவமைத்து உருவாக்கிய எளிமையான இயற்கை சார் களிமண் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

களிமண் வீடுகள் கட்டுமானம் என்பது பொதுவாக 4 வகையாக கட்டப்படுகிறது.

1. பழமையான "காப்" (Cob) தொழில்நுட்பம். அதாவது மணல் சிறு சரளைக் கற்கள் வைக்கோல், பசுஞ்சாணம், பசுவின் சிறுநீர் மற்றும் சுண்ணாம்பு அனைத்தையும் கலைவையாக்கி கட்டப்படுவது.

2. அடோப் (ADOBE) தொழில்நுட்பம் அதாவது களிமண் கற்கள் சுடப்படாமல் வெறுமனே சூரிய ஒளியில் உலர வைத்து கட்டப்படுகிறது.

3. "வேட்டில் மற்றும் டப்" (Wattle and Daub) தொழில்நுட்பம்.
அதாவது மூங்கிலினால்
படல்போல அமைத்து அதன் இரு பக்கத்திலும் கரடுமுரடான களிமண் களி மண்கலைவை பூச்சினை கொண்டு கட்டப்படுவது.

4. "ரேம்ட் எர்த்" ( Rammed Earth) தொழில்நுட்பம்:  அதாவது இரு பக்கத்திலும் மரப் பலகைகளை அமைத்து அதனிடையில் களிமண் நிறப்பி சுவர்களாக ஏற்படுத்தி கட்டப்படுவது.

புகைப்பட ஆதாரம் - Thannal website

வீடுகள் கட்டப்படும் இடத்தின் தட்பவெப்ப சூழ்நிலைக்கு (Climate) ஏற்ப இவற்றில் ஏதாவது தொழில் நுட்பத்தினை தெரிவு செய்து கொள்ளலாம்.

தனிமையான காட்டுப்பகுதியிலும், ரம்யமான கிராமப் பகுதிகளிலும், பரபரப்பான நகரப்பகுதியிலும் தேவைக் கேற்ப இத்தகைய இயற்கை சார் களிமண் வீடுகள் கட்டித் தரப்படுகிறது என்பது சிறப்பு.

களிமண் வீட்டின் அனுகூலங்கள் (Benefits):

1. இயற்கை சார் களிமண் வீடு, மனிதனின் உடல் போன்றது களிமண் வீட்டின் சுவர்களில் உள்ள நுண்துளைகள் மூலம் சுவாசிப்பது என்பது மனிதனின் தோலைப் போன்றது.

2. எனவே வீட்டின் உள்ளே எப்போதும் குளிர்பதனம் செய்தது போல குளிர்ந்த வெப்பநிலையே நீடிக்கிறது.
A.C. உபகரணம் தேவையில்லை ! அதை இயக்க மின்சார செலவும் இல்லை!

3. ஒரு 500 சதுர அடி களிமண் வீட்டினை 5 மாதத்தில் சிறப்பாகவும் சிக்கனமாகவும் கட்டி விடலாம்.

4. வீடு கட்டும் பகுதியிலேயே உள்ள களிமண் மற்றும் கட்டுமான தொழிலாளர்களை பயன்படுத்தியே கட்டுமானம் செய்ய இயலும்.

5. குறிப்பிட்டகாலத்திற்குப் பின் வேறு களிமண் வீடு கட்ட பழைய வீட்டின் களிமண்ணைக் கொண்டு மறுசுழற்சி செய்ய இயலும்.

6. இத்தகைய இயற்கை சார் களிமண் வீடு கட்ட சதுர அடிக்கு ரூ 800 முதல் ரூ 1000 போதுமானது இப்போது கட்டப்படும் வழக்கமான வீடுகளுக்கு சதுரடிக்கு ரூ 2500 /- முதல் 3000 /- செலவாகிறது என்பது ஒப்பிடத்தக்கது.

புகைப்பட ஆதாரம் - Thannal website 


களிமண் வீட்டின் அனைத்து கட்டிடப் பொருட்களும் இயற்கை அளிக்கும் பொருட்களை கொண்டு கட்டப்படுவதால் அதில் வாழும் போது மன நிறைவான அமைதி கிடைக்கிறது என்பது சிறப்பானது அல்லவா?

"இயற்கையைப் போற்றுவோம்

இயற்கையோடு இயைந்து வாழப்பழகுவோம்"

Contact Thannal: 9385620884

Stories