November 06, 2020

ரசாயனம் இல்லா ஐந்து அடுக்கு விவசாயம்

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள டில்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் சவுராசியா (Akash Chourasiya). தான் ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்ற குடும்ப விருப்பத்தின்படி போட்டித்தேர்வுக்கான தயாரிப்புகளை செய்து கொண்டிருந்தவர் அதனை விடுத்து ரசாயணமில்லா காய்கறி பழங்களை உற்பத்தி செய்து சாதனை செய்து வருகிறார்.

விவசாய குடும்பமாக இருந்தாலும் பீடி தயாரிப்பு தொழிலின் வருமானத்தையே பெருமளவு நம்பி இருந்தது. இந்த சூழ்நிலையில் குடும்பத்தினர்கள் நண்பர்கள் விருப்பத்திற்கு எதிராக தனது 2.5 ஏக்கர் நிலத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் இயற்கை முறையில் தக்காளி பயிர் செய்து தனது எதிர்கால கனவான 5 அடுக்கு விவசாயத்திற்கு அடித்தளம் அமைத்தார்.

ஆரம்பத்தில் பல சோதனைகளைச் சந்தித்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து பயிர் செய்து தற்போது அவருடைய விவசாய பண்ணையில் 15 அடி உயர தக்காளி செடிகளின் மூலம் ஒரு செடிக்கு 12 கிலோ தக்காளியை தொடர்ந்து அறுவடை செய்கிறார்.



முதல் வெற்றியைக் கண்ட திரு.ஆகாஷ் அவர்கள் படிப்படியாக 5 அடுக்கு விவசாய முறையை நிர்மாணித்து வெற்றி கண்டுள்ளார்.

5 அடுக்கு விவசாய முறை:

-  முதல் அடுக்கு  விவசாயம் நிலத்திற்கு கீழ் விளையும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன அந்தவகையில் பெரும்பாலும் இஞ்சி பயிரிடப்படுகிறது.

- இரண்டாவது அடுக்காக நிலத்தின் மேல் பகுதியில் வளரக்கூடிய கீரை வகைகள் அனைத்தும் பயிர் செய்யப்படுகிறது.

- மூன்றாவது அடுக்காக மூங்கில் பயிர்கள் நிழல் கொடுப்பதற்காகவும், பழ, காய்கறி செடிகளை தாங்கிப் பிடிப்பதற்காகவும் வளர்க்கப்படுகிறது.

- நான்காவதாக பப்பாளி போன்ற மரங்கள் பயிர் செய்யப்படுகிறது.

- ஐந்தாவது அடுக்காக உயரப் படரும் கொடிகள் (Creepers) பயிரிடப்படுகிறது.

ஐந்து அடுக்கு பயிர் செய்தல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்ட முடிகிறது. 2.5 ஏக்கர் நிலத்தில் மொத்த வருமானமாக (Total profit) ஆண்டுக்கு 10.5 லட்சமும் நிகர வருமானமாக (Nett Profit) 7.5 லட்சமும் ஈட்டுவதாக திரு.ஆகாஷ் அவர்கள் கூறுகிறார்.

பண்ணையிலேயே வளர்க்கப்படும் கால்நடைகளின் கழிவுகளே எருவாக பயன்படுத்தப்படுகின்றது. உபரி கால்நடை கழிவுகளை கொண்டு மண்புழு உரம் தயாரித்து டன் ரூ 5000 -/- என்று விற்பனை செய்து அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டுகிறார்.

இதைத் தவிர உள்நாட்டு பாரம்பரிய விதை வங்கி (Seed Bank) ஒன்றை நிறுவியுள்ளார். விவசாயிகள் விதைகளை இலவசமாகப் பெற்று பயிர்செய்து அறுவடையின்போது பெற்ற விதைகள் அளவைப் போல இரண்டு பங்கு விதையினை வங்கியில் செலுத்தினால் போதும்.

இந்த வகையில் 3500 க்கும் அதிகமான விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர் என்பது சிறப்பு. அங்கத்தினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2013- ஆண்டிலிருந்து தற்சமயம் வரையில் 5 அடுக்கு விவசாய முறையினை 48,000 க்கும் மேலான விவசாயிகளுக்கு பயிற்சி இலவசமாக அளித்துள்ளார் திரு.ஆகாஷ் அவர்கள்.

இறுதியாக ஆகாஷ் அவர்கள் கூறுகையில் விவசாய நிலத்தில் ரசாயன விஷங்களை இடாது நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்தாள் நோயில்லா சமுதாயத்தை உருவாக்கலாம் என்கிறார்.

Contact: 9179066275

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 
Stories