July 18, 2022

மண் ஆரோக்கிய மேலாண்மை ("Soil Health Management")

மண்ணின் ஆரோக்கியம் விவசாயிகளின் வெற்றிக்கும் அதன் விளைவாக உணவு உற்பத்தி மற்றும் அதன் விநியோகத்திற்கும் அடித்தளமாக உள்ளது. நுண்ணுயிர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளமான சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது.

"பயோம் மேக்கர்ஸ்" (Biome Makers) நிறுவனம் இதற்கான தொழில் நுட்பத்தின் மூலம் விவசாயிகளின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மண்ணின் தரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றிய தகவல்களை வழங்குகின்றன.



"பயோ மேக்கர்ஸ்" நிறுவனம் பொதுமக்கள் மற்றும் விவசாய சமூகத்தின் உறுப்பினர்களுக்கு ஆதாரங்கள் மற்றும் செயல்பாட்டுக்கான முறையுடன் புதுப்பிக்கப்பட்ட இணைய தளத்தின் மூலமாக கட்டுரைகள், விவசாயிகளின் ஆய்வு வெற்றிகள், சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் மண் உயிரியல் மற்றும் பயிர் உற்பத்தி வளர்ச்சி பற்றிய ஆழமான புரிதலை உருவாக்குகிறது.

இது பற்றி "பயோம்மேக்கர்ஸின்" இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அட்ரியன் ஃபெராரோ (Adrien Ferero) விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் உலகம் முழுவதும் மண் ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மை மேம்படுத்துவதற்கும் தமது பணியைப் பகிர்ந்து கொள்வதே நிறுவனத்தின் இலக்காக உள்ளதாக கூறுகிறார்.



"பயோம் மேக்கர்ஸ்" நிறுவனத்தின் "பீ கிராப்" (Be Crop ) தொழில்நுட்பம் மண் மாதிரிகளை முழுமையாக மதிப்பீடு செய்து உட்கார்ந்து ஆரோக்கியத்திற்கும் மண்ணை மீளுருவாக்கம் செய்வதற்கான மேம்பாடுகளைப் பற்றிய கருத்துக்களை வழங்கும், அறிவியல் கண்டறியும் அமைப்பாக செயல்படுகிறது.

இது விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு அவர்களது 12 ஸ்பூன் மண் மாதிரிகளை சேகரித்து உலகம் முழுவதும் அமைந்துள்ள "பயோம் மேக்கர்ஸ்" ஆய்வகங்களில் ஒன்றுக்கு அனுப்பி நிலம் முழுவதும் உள்ள வேறுபாடுகளை காண ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் டி.என்.ஏ பிரித்தெடுத்தல் மற்றும் நுண்ணுயிர்கள் வழியாக சுகாதாரத் தரவை அளவிட வரிசைப்படுத்துதல் செயல்முறைகள் மூலம் மண்ணை பகுப்பாய்கின்றனர்.



செயற்கை அறிவியல் (Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மண்ணின் செயல்பாட்டை மாதிரியாக்கி அதன் ஊட்டச்சத்து மதிப்பை சுருக்கமாக ஒரு முழுமையான பகுப்பாய்வு அறிக்கையை உருவாக்குகிறது உயர்நிலைத் தன்மை, ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து போன்ற வகைகளில் தகவல்களும் பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா போன்ற கூறுகள் பற்றிய விரிவான தகவல்களையும் வழங்குகிறது.

இத்தகவல்கள் இழந்த நுண்ணுயிர்களை மீட்டெடுக்கவும் மண்ணின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் தேவையான தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குகிறது. விவசாயிகள் விவசாய முறைகளை மேம்படுத்துவதன் மூலம்  மீளுருவாக்கம் செய்யும் விவசாயத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கான திறனை மேம்படுத்துகிறது. இந்த வகையில் " பயோம் மேக்கர்ஸ்" நிறுவனம் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில், உலகளவில் மண் புத்துயிர் பெற வழி வகுத்துள்ளது.

நூற்றாண்டு கணக்கான ஆண்டுகளாக சில பொறுப்பற்ற விவசாய நடைமுறைகளால் நிலத்தின் ஊட்டச்சத்துக்கள் அகற்றப்பட்டுள்ளது என்ற பரவலான தத்துவத்திற்கு ஒரு விடிவாக "பயோம் மேக்கர்ஸ்" நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Biome Makers Inc.

US HQ & Lab
890 Embarcadero Dr,
West Sacramento,
CA 95605,
+1 415 795-7469

Website: https://biomemakers.com/

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories