August 26, 2020

சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான ஒரு சிக்கன வீடு.

கர்நாடக மாநிலத்தின் ஹீப்ளியைச் சேர்ந்த, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரு. ஜிதேந்திர P. நாயக் (Jitendra.P.Nayak) 47, வயதாகும் ஒரு கட்டிட வடிவமைப்பாளர் (Architect).

கட்டிட வடிவமைப்பு பொறியியல் பட்டப் படிப்பினை BVB பொறியியல் கல்லூரியிலும் இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பினை விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலை (Visveshvaraya Technological University) யில் முடித்தபின். கே.பி.ஜெயின் கழுமம் (K.B. Jain Associates) நிறுவனத்தில் சில ஓராண்டு பணியில் இருந்தபோது சிக்கன கட்டிடக்கலையில் அனுபவம் பெற்றார்.

K.B. ஜெயின் குழுமம் இன்றுவரையில் சிக்கன கட்டிட வடிவமைப்பில் பழைய கட்டிட பொருட்களை கொண்டு தற்கால நவீன கட்டிடங்களை உருவாக்குவதில் திறமை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் ஹீப்ளி (Hubli) ஐ தலைமையிடமாகக் கொண்டு "இன்ஃபரா ஸ்டிரக்சர் ஒன்" (Infrastructure One) என்ற கட்டிட வடிவமைப்பு நிறுவனத்தைத் துவங்கி கடந்த 15 ஆண்டுகளில் கர்நாடகம் முழுவதும் 200 திட்டங்களை செயலாக்கி உள்ளார்.ஜிதேந்திர நாயக், தனக்கென கட்டியுள்ள வீட்டின் சிறப்புகள்:

- வீட்டினுள் சிறந்த காற்றோட்ட வசதிக்காக ஜன்னல்கள் மற்றும் வாசல்களை "புனல் விளைவு" (Funnel Effect) ஏற்படும் வகையில் அமைத்துள்ளார்.

- வீடு பெரும்பாலும் பழைய வீடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களைக்கொண்டு அமைத்துள்ளனர்.

- தயார் நிலையில் உள்ள " இரும்பு சிமெண்ட் ஸ்லாப்" pre- Cast Ferro Cement slab) களை பெருமளவில் பயன்படுத்தி உள்ளதால் இரும்பு தேவை 80
சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 40% வரையில் செலவு குறைக்கப்பட்டுள்ளது.

- பெர்ரோ சிமெண்ட ஸ்லாப்கள் ஏற்கனவே தண்ணீர் இட்டு பதப்படுத்தப்பட்டுள்ளதால் 21 நாட்கள் க்யூரிங் (Curing) செய்ய தேவையில்லை. அதற்காக கிட்டத்தட்ட 60,000 லிட்டர் தண்ணீர் மற்றும் கூலி செலவு மீதமாகின்றது.

- மேல் கூரைகள் முழுவதுமே இத்தகைய பெர்ரோ சிமெண்ட் மூலமாகவே அமைக்கப்பட்டுள்ளது.

- மர சன்னல்கள், கதவுகள், படிகைப்பிடிகள் மற்றும் மர கிரில்கள் அனைத்தும் பழைய மரச்சாமான்கள் கடைகளில் கிலோ ரு32 /- க்கு வாங்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. சாராரணமாக மரத்தின் விலை கிலோ ரூ 320 (Normal wood price Rs.320/Kg)

- தெற்கு மற்றும் மேற்கு திசையிலுள்ள சுவர்கள் அதிக நேரம் சூரிய ஒளி பெற்று வீட்டினுள்ளே வெப்பம் ஆகாமல் இருக்கசுற்றிலும் மூங்கில் செடிகள் வளர்க்கப்பட்டு நிழல் தரும்படி உள்ளது. எனவே Ac இல்லாமல் குளுமையிலேயே உள்ளது.

- இதுவரை சோலார் மின்சாரம் வீட்டிற்கு பயன்படுத்தப்படுவதால் மின்சார செலவு இல்லை.

- பெருமளவில் மழைநீர் சேகரிப்பு தொட்டியும் அமைக்கப்பட்டு சுமார் 8 மாதங்கள் வரையில் மழை நீர் பயன்படுத்தப்படுகிறது.

- திருமதி. ஆஷா நாயக், திரு.ஜிதேந்திராவின் மனைவி
ஒரு உள்வீட்டு வடிவமைப்பாளராக (Interior Designer) பெருமளவில் உதவியுள்ளார்.

மொத்தத்தில் பலவிதமான சிக்கன நடவடிக்கைகளில் திரு.ஜி தேந்திர நாயக் 40 சதவீத குறைந்த செலவில் அரசு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான ஒரு சிக்கன வீட்டினை நிர்மாணித்து உள்ளார் என்பது பாராட்டுக்குரியது.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories