May 22, 2021

ரேஷா மண்டி - பட்டுக்கான தனித்துவ தொழில்நுட்ப மேடை "Reshamandi" - Silk Unique Technology Platform For Silk

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட "ரேஷா மண்டி" என்கிற அக்ரி டெக் தொடக்கமானது (Agritech Startup)  பட்டு உற்பத்தியில் இந்தியாவை உலகில் முதலிடம் ஆக்குவதை நோக்கமாகக் கொண்டது.


"ரேஷாமண்டி”யை மயாங்க் திவாரி - தலைமை நிர்வாக அதிகாரி,  (Mayank Tiwari - CEO), சவுரப் அகர்வால் - சி.டி.ஓ (Saurabh Agarwal - CTO), மற்றும் உத்கர்ஷ் அபூர்வா - தலைமை வணிக அதிகாரி (Uthkarsh Apoorva - Chief Business Officer) ஆகியோரால் ஏப்ரல் 2020 ஆண்டு நிறுவப்பட்டது.

“மத்திய பட்டு வாரியம்” (Central Silk Board) ஜவுளி அமைச்சகத்தின் (Ministry of Textiles) ஒரு பகுதி பட்டு வளர்ப்புத் தொழில் நாட்டில் மிகப் பெரியதாகும் என்று மதிப்பிடுகிறது. அதற்கான செயல்பாடுகள் 52, 360 கிராமங்களில் பரவி சுமார் 92 லட்சம் இந்தியர்களை ஒரு நிதி ஆண்டில் (Financial Year) பணி அமர்த்தியுள்ளது.

பட்டுப்புழு வளர்ப்பை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

https://youtu.be/vLbdDiH63VU



சீனாவின் பட்டு பொருட்களுக்கான சமீபத்திய தடை இந்திய பட்டு வளர்ப்பு தொழிலுக்கு புதியதொரு வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமைந்து உள்ளது என்றாலும் முட்டை உற்பத்தி, கூட்டுப்புழு  (Cocoon) உருவாக்கம், நூல் மற்றும் துணி உற்பத்தி ஆகியவற்றின் ஆரம்ப கட்டத்திலிருந்து வினியோகச் சங்கிலி வரையில் விவசாயிகள் மற்றும் பட்டு நூல் உற்பத்தியாளர்களை சுரண்டும் இடைத் தரகர்களாக (Middle Men) வர்த்தகர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இந்தியாவின் முதல் பட்டு அக்ரிடெக் தொடக்கமான "ரேஷா மண்டி" இணைக்கும் AI மற்றும் IOT தலைமையிலான டிஜிட்டல் சுற்றுச்சூழல் (Digital Eco Systems) அமைப்புகளுடன் இந்தியாவின் விநியோகச் சங்கிலியை ஒழுங்கமைத் தற்கான முழு அடுக்கு (Full Stack) வலையமைப்பை (Network) உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு முனையிலும் தரமான கண்காணிப்பு, தொழில்நுட்ப ஆலோசனை உயர் தர உள்ளீடுகள் (High Quality Inputs) மற்றும் சந்தைஇணைப்புகள் (Market Linkages) போன்ற சேவைகளை வழங்குகிறது.



அடிப்படையில் தேசிய பேஷன் டெக்னாலஜி பட்டதாரியான மயாங்கிற்கு இந்தியாவின் மிகவும் பொக்கிஷமான மரபுகளில் ஒன்றான பட்டுத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் "ரேஷா மண்டி" இந்திய நாட்டின் மிகப்பெரிய பட்டு உற்பத்தியாளர்களான கர்நாடக மாநிலத்தில் உள்ள பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு பரிச்சயம் இல்லாத (பாரம்பரிய மற்ற) தளமாக “ரேஷா மண்டி” ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

"ரேஷா மண்டி" செயல்படும் முறை:

1. ரேஷா மண்டியின் தளம் (Platform) பட்டு உற்பத்தியின் முழு சுழற்சியையும் அறுவடை முதல் முடிக்கப்பட்ட ஜவுளிஜவுளிவரை குறிக்கிறது.

2. AI அடிப்படையிலான கண்காணிப்பு மூலம் பயிர்கள் ஆரோக்கியமாக இருப்பதை "ரேஷா மண்டி"  சேவைகள் உறுதிசெய்கின்றன.

3. இது பயிர்கள் செயலிழப்பை 80 சதவீதம் வரையில் குறைக்க உதவுகிறது.

4. விவசாயிகளுக்கு அதிக உற்பத்தித்திறன் மற்றும் இறுதியில் அதிக வருவாய் அளிக்கிறது.

5. ஒரு நிலையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் சந்தை மூலம் விவசாயி தொழில் நுட்பத்தின் உதவியுடன் பட்டு வேலைகளில் முழு சுழற்சியும் முடிக்க முடியும்.

6. தொடர்பு மற்றும் விழிப்பூட்டல்கள் (Communication and Alerts) உள்ளூர் மொழியிலேயே உள்ளன. இது விவசாயிகளின் செயல்பாட்டை  எளிதாக்குகிறது.

7. "ரேஷா மண்டி" பயன்பாட்டு சங்கிலி வெல்வேறு  பங்கு தாரர்களை இணைக்கிறது.

8. விவசாயிகளுக்கு வானிலை மற்றும் மண்ணின் தரம் குறித்து தகவல்களை கொடுப்பதுடன் கூட்டுப் புழுக்களின் (Cacoon) இலை மற்றும் கொள்முதல் தகவல்களும் அதற்கான சந்தை இணைப்புகள் குறித்தும் அவ்வப்போது தெரிவிக்கிறது.

9. சிறந்த நடைமுறைகள் பற்றிய தகவல்கள் மற்றும் இயந்திரக் கருவிகள் நெசவாளர்கள் வாங்குதல் தொடர்பான தகவல்களையும் அளிக்கின்றது.

தற்சமயம் "ரேஷா மண்டி" கர்நாடகா வில்மட்டும் 3000 க்கும் மேற்பட்ட பண்ணையாலர்களை இணைத்து தினமும் 10 மெட்ரிக்டன் கூட்டுப்புழுக்களை (Cocoon) ஒப்பந்தம் செய்கிறது. கூடிய விரைவில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு விரிவாக்கம் செய்யவிருப்பதாக ஸ்தாபர் மயாங்க் திவாரி கூறுகிறார். 

Address: S. No, 475/2, Sarjapura - Attibele Rd, Sarjapura, Bengaluru, Karnataka 562125
Phone: 073386 94594

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories