December 01, 2020

தாவர இலை "வேகன் கம்பெனி"

கம்பளி (Wool) பொதுவாக செம்மறி ஆடுகளின் ரோம இழைகளைக்கொண்டு நெய்யப்படும் ஆடைகள். ஆனால் முழுவதுமாக தாவர இழைகளைக் கொண்டு கம்பளி நெய்து சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டின் "ஆரோவில்" க்கு அருகிலுள்ள குயிலபாளயம் கிராமத்தைச் சேர்ந்த தொழில் முனைவர்
(Entrepreneur) 34 வயதான திரு. கவுரி ஷங்கர் (Mr. Gowri Shankar).



எவருடைய பராமரிப்பும் இன்றி அனாமதேயமாக எங்கும் விரவிக் கிடக்கும் எருக்கன் செடி (Calotropis) யிலிருந்து எடுக்கப்படும் இழைகளைக் கொண்டு கம்பளி தயாரிக்கும் முறையினை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார் திரு.கவுரி ஷங்கர் தன்னுடைய தாவரக் கம்பளி இழைகளை "ஃபேப் ராக்" (Fabrog) என்ற நிறுவனத்தின் (Company) மூலமாக 2015 ஆண்டு முதல் சந்தைப்படுத்தி உள்ளார்.

அபரிமிதமான பால்வடியும் களைகளாக (Milk Weed) கருதப்படும் எருக்கன் செடியிலிந்து அபரிமிதமாக வடியும் பாலைக்கொண்டு "அர்கா" (ARKA) என்ற திரவாரினை தயாரித்து கிருமிநாசினியா கவும் பயன்படுத்தப்படுகிறது "அர்கா" எந்த விதமான ரசாயனக் கலப்பும் இல்லாமல் வேப்ப எண்ணை, யூகலிப்டஸ் எண்ணை, (Eucalyptus), மற்றும் எலுமிச்சைப் புல் (Lemon Grass) கொண்டு தயாரிக்கப்படுகிறது.



எருக்கன் செடி இழைகள் 30 சதவீதம் மற்றும் 70 சதவீதம் பருத்தி இழைகள் கலந்து தயாரிக்கும் வேகன் உல் (Wega wool) செம்மறி ஆட்டின் ரோமத்தில் தயாரிக்கப் படும் கம்பளி ஆடைகள் போன்றே உள்ளது ஆச்சரியமான உண்மை. பாண்டிச்சேரியில் உள்ள 2000 சதுர அடி தொழிற்சாலையில் எருக்கன் செடி இழைகள் (Weganool) இயற்கைமுறைப்படி வண்ணம் சேர்க்கப்படுகிறது. சிவப்பு நிறத்திற்கு மாதுளைச் சாறும், மஞ்சள் நிறத்திற்கு கடுக்காய் சாறும் சேர்க்கப்படுகிறது. எந்த நிலையிலும் ரசாயனங்கள் சேர்க்கப் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஜீலியா கேடிஹா (Julia Gaydiha) குழந்தைகளுக்கான வீகன் உல் (WegaNool) ஆடைகளை "இன்ஃபண்டம் விக்டோரியா" (Infantum Victoria) என்ற பெயரில் சந்தைப்படுத்தி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இந்தியா மற்றும் பல வெளிநாடுகளிலிருந்து " வீகன் உல் உல்" (WegaNool) இழை ஆடைகளில் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தாவர இழை ஆடைகள் உற்பத்தி பல மடங்காக உயரும் என்பதில் ஐயமில்லை.

Contact: 9787123017

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 
Stories