May 29, 2021

தண்ணீர் தேவையை 30% குறைக்க உதவும் விவசாயிகளுக்கான அமுதம் (EF Polymers)

இஎஃப் பாலிமர் (EF Polymers) என்பது ராஜஸ்தானை தளமாகக் கொண்ட வேளாண் தொழில்நுட்ப தொடக்க நிறுவன மாகும். இது ஒரு புதுமையான விவசாயத்திற்கு பயன்படும் ஒரு பாலிமர் தயாரிப்பாகும்.

ராஜஸ்தானில் ஒரு சிறிய போரஜ் (Boraj) கிராமத்தைச் சேர்ந்த வேளாண் பொறியாளர் திரு.நாராயன்லால் குர்ஜார் (Mr. Narayan Lal Gurjar) மற்றும் மின் பொறியாளர் திரு. பூரன் சிங் ராஜ்புட் (Mr. Puran Singh Rajput) இவரும் இணைந்து ராஜஸ்தானில் குறைந்த தண்ணீரில் சிரமப்பட்டு விவசாயம் செய்யும் மக்களுக்காக "ஃ பாசல் அம்ரித்" என்ற புதுமையான பாலிமரை கண்டுபிடித்துள்ளனர்.இது பழச்சாறு கடைகளில் உருவாக்கப்படும் உயிர் கழிவுகளால் (Bio - Waste) ஆன ஆர்கானிக் சூர்பர் உரிஞ்சு தன்மை உடைய பாலிமர் ஆகும். 2018 - ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு தண்ணீர் சேமிக்க உதவும் வகையில் கல்லூரியில் நாராயண் தொடர்ந்த திட்டத்தில் இருந்து வெளிவந்த அக்ரி டெக் துவக்கம் பாலிமரை அவர்கள் நிறுவினர், பல சோதனைகளுக்குப் பிறகு அவை பழச்சாறு கடைகளில் இருந்து கிடைக்கும் உயிர் கழிவுகளால் ஆன ஆர்கானிக் சூப்பர் உறிஞ்சக்கூடிய பாலிமரான ஃபாசல் அம்ரித் தைக் கொண்டுவந்தன. இது மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் திறனை மேம்படுத்துவதோடு தேவையான நீர்ப்பாசன அளவையும் குறைக்கிறது மற்றும் உரத் தேவையும் குறைக்க உதவுகிறது.

இது கர்ம கழிவுகளால் (Organic Waste) ஆனதால் சிறந்த பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்க ஏராளமான நுண்ணூட்ட சத்துக்கள் இதில் உள்ளன தவிர இது இயற்கையானது. ரசாயனம் மற்றும் மாசு இல்லாதது. "ஃபாசல் அம்ரித்" பயன்பாட்டிற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு 100% மக்கும் தன்மை (Degradable) கொண்டது என்பதையும் கவனத்தில் கொள்வது சுவாரஸ்யமானது.திரு.நாராயன் மற்றும் திரு. பூரன்சிங் இருவரும் சிறுவயதிலேயே அவர்களின் விவசாய குடும்பங்கள் வயலில் வேலை செய்யும் போது தண்ணீர் பற்றாக்குறையுடன் போராடுவதைக் கண்டதே தற்சமயம் தொடக்கத்தை நிறுவுவதற்கான உத்வேகமாக அமைந்தது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தீர்வில் தொடர்ந்து பணியாற்றி தயாரிப்பை மேம்படுத்தி இறுதியில் 2018-ல்  உருவானதே "ஃபாசல் அம்ரித்" எனும் விவசாயிகளுக்கான அமுதம்.ஃபாசல் அமிர்தத்தை உருவாக்குவது எப்படி?

1. பழச்சாறு விற்பனையாளர்கள், உழவர் சந்தைகள், உணவகங்கள், பெரிய ஓட்டல்கள், மற்றும் பல்கலைக்கழகங்களில் உணவு கவுண்டர்களில் இருந்து மூலம் பொருட்களான பழதோல்கள், கழிவு காய்கறிகள் அனைத்தையும் சேகரித்தல்.

2. இந்த மூலப்பொருட்கள் சூரிய உலர்த்திகளில் உலர்த்தப்பட்டு பின்னர் தூளாக அரைக்கப்படுகிறது காய்கறிகளின் தூள் "பெக்டின்" மற்றும் "செல்லுலோசாக" பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் அவை பாலிமரை சேஷன் (Polymerization) - க்கான முக்கிய மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன.

3. பாலிமரை க்ஷேனுக்குப் பிறகு ஈ எஃப் பாலிமர் குழு கரிம கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் மைக்ரோ ஊட்டச்சத்துக்களை சேர்கிறது. இது பயிர்களின் தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்

ஃபாசல் அமிர்தம் செயல்படும் முறை:-

இது ஒரு ஹைட்ரஜல் (Hydrogel)  அல்லது பாலிமர் ஆனதால் தண்ணீர் அல்லது திரவத்துடன் தொடர்பு கொள்ளும்போது உறிஞ்சி வீக்கமடைந்து தண்ணீர் தக்க வைக்கிறது ஒரு ஏக்கர் நிலத்துக்கு மண்ணிலோ, விதைகளுடனோ, இயற்கை மற்றும் செயற்கை உரங்களுடனோ 5 கிலோ ஃபாசல் அமிர்தம் கலந்து தெளித்தால் தேவையான பலனை பெறமுடியும் சாதாரணமாக ஒரு விளைச்சலுக்கு 6 முறை நீர் பாய்ச்ச வேண்டும்மென்றால் ஃபாசல் அமிர்த மிட்ட மண்ணுக்கு 4 முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

இது விவசாயிகளுக்கு சுமார் 30 முதல் 40 % வரை தண்ணீரை சேமிக்க உதவுகிறது. உரங்களின் தேவையை 20% குறைக்கிறது, பயிர் விளைச்சலை 15% அதிகரிக்கிறது என்று நிறுவனத்தின் ஸ்தாபகர்களும் விவசாயிகளும் கூறுகின்றனர்.

ராஜஸ்தானை தளமாகக் கொண்ட "இ.எஃப் பாலிமர்" விவசாயத் தொடக்க நிறுவனத்திற்கு எதிர்காலம் பிரகாசமாக தெரிகிறது. ஜப்பானை தளமாக கொண்ட மூலதன முதலீட்டாளர்களிட மிருந்து 40 மில்லியன் யென் அதாவது சுமார் ரூ.2.7 கோடி அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் பன்னாட்டு முதலீடுகள் அதிகமாகும் என்று ஸ்தாபகர் திரு. நாராயன் கூறுகிறார்.

EF Polymer Private Limited:

support@efpolymer.com

+81-90-8408-1583 | +91-96-6409-9631

Innovation Square Incubator
Okinawa Institute of Science and Technology Graduate University
1919-1 Tancha, Onna-son, Kunigami-gun
Okinawa, Japan 904-0495

Website: www.efpolymer.com

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 
Stories