கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள ஆஷாம்ஸ் ரவி (Ashams Ravi) 27 வயதானவர்.ஒரு கட்டிட வடிவமைப்பாளர் (Architect).கட்டிட வடிவமைப்பு பணியை செய்து கொண்டிருக்கும் இவர் தனக்கென ஒரு வீட்டை கட்ட பசுமை வழியை தேர்வு செய்து அதனை 4 மாதத்தில் கட்டி முடித்துள்ளார்.
அவருடைய இந்த பசுமை வீட்டிற்கு 90 சதவீதம் இடிந்த பழைய கட்டிட பொருட்கள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட செங்கற்கள்,பழைய மது பாட்டில்கள், கதவுகள், மற்றும் ஜன்னல்கள் மட்டுமே.மீதமுள்ள 10 சதவீதம் மூங்கில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 2019 ல் கட்ட துவங்கிய வீட்டை ஆகஸ்ட் 2019-ல் முடித்துள்ளார்.தன்னுடைய புதிய வீட்டிற்கு "கெனான்" (Canaan) என்று பெயரிட்டுள்ளார் புனித விவிலியத்தின் (Bible) படி கெனான் என்றால் வாக்குதத்தம் செய்யப்பட்ட நிலம் (Promised Land) என்ற பொருள்.
13 சென்ட் (5663 ச.அடி) நிலத்தில் 2500 சதுர அடி பரப்பு கொண்ட பசுமை வீட்டினை அந்த நிலத்தில் இருந்து மரங்களை வெட்டாமல் அவற்றை உள்ளாக்கியே கட்டப்பட்டு இருப்பது சிறப்பு.
வீடு கட்ட பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள்:
1. இடிக்கப்பட்டுள்ள பழைய கட்டிடத்தின் செங்கல் மற்றும் கருங்கற்கள்.
2. உடைந்த தட்டை ஓடுகள் மற்றும் கூரை ஓடுகள்.
3. திருவாங்கூர் சமஸ்தான மாளிகையின் பழைய கதவுகள், ஜன்னல்கள்
4. கழிவு செய்யப்பட்ட பழைய சைக்கிளில் சக்கரங்கள்.
5. பழைய டெரக்கோட்டா தட்டை ஓடுகள் (Terra Cotta Tiles), பொம்மைகள்.
6. பொங்கல் பண்டிகையில் பயன்படுத்தப்பட்ட ரேக்ளா வண்டியின் பழைய சக்கரங்கள்.
7. கழிவு செய்யப்பட்ட பழைய ஜன்னல் கம்பிகள்.
8. பழைய மற்றும் சில புதிய சணல் பைகள்
9. பழைய பித்தளை சாமான்கள்
10. மூங்கில்கள்
11. களிமண் பூச்சுகள்
12. பழைய மது பாட்டில்கள்
13. மிகக் குறைந்த அளவிலான சிமெண்ட்
14. பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ள சுண்ணாம்பு மண் கலவை
15. வெட்டி வீசப்பட்ட தென்னை மரம் மற்றும் பனை மரப் பொருட்கள்
16. மாட்டுச் சாணம்
17. கூழாங்கற்கள், ஜல்லிகள் மற்றும் மணல்.
பயன்படுத்தப்பட்டுள்ள முறை:
- வீட்டின் அருகே 5 அடி ஆழத்திற்கு குழிதோண்டி கூழாங்கற்கள், ஜல்லிகள், உடைந்த செங்கற்கள் மற்றும் மணல்தொட்டி மழைநீர் சேகரிப்பு செய்யப்படுகிறது.
- பழைய மது பாட்டில்கள் பெருமளவில் விளக்குகளை அழகு படுத்தப்பட்டுள்ளது. (Lamp Shades)
- தென்னை, பனைமரங்கள் தூண்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
- வீட்டின் பக்கச் சுவர்கள் முழுவதும் பீர் பாட்டில்கள் விஸ்கி,பிராந்தி,ரம் பாட்டில்கள் மண் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளன.
- திருவாங்கூர் அரண்மனை கதவு முகப்புக்கதவாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
- ஜன்னல்கள் பழைய கம்பிகள் மற்றும் மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அழகு சேர்க்க சைக்கிள் சக்கரங்கள் சுற்றி வைக்கப்பட்டுள்ளன.
- சில பழைய குதிரை வண்டிச்சக்கரங்கள் ஜன்னல்களாகவே வைத்து அழகு செய்யப்பட்டுள்ளன.
- மாட்டுச்சாணம், மூங்கில் மற்றும் சணல் கொண்டு மேல்மாடி தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டிடக் கலைஞர் அஷாம்ஸ் ரவி 2017 - ல் நாகப்பட்டினத்தில் உள்ள பிரைம் கல்லூரியில் (Prime college of Architecture and planning) பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் திருவனந்தபுரத்திலுள்ள COST FORD ( The centre of science and technology for rural development) என்ற லாப நோக்கில்லா நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
இடிந்த கட்டிட பொருட்கள் சேர்ந்த குப்பையைக் (Rubbles) கொண்டு கட்டப்பட்டிருக்கும் இவரின் பசுமை புதுமை வீடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத இயற்கை சுற்றுச்சூழலின் நீட்சி (Natural extension of the environment) என்றால் அது மிகையல்ல!
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.