January 07, 2021

80 சதுர அடியில் 6000 செடிகள்! 6000 Plants in 80 Sq.Feet

சென்னை நகரத்தின் எழும்பூர் (Egmore) பகுதியில் உள்ள திரு.ராகுல் தோக்கா (Mr. Rahul Dhoka) 31, வயதான இளைஞர் தனது வீட்டு மாடியில் அழகான தோட்டத்தை அமைத்துள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டுள்ள விவசாய பின்புலமுள்ள முன்னோர்கள் பின்னர் வாகன வணிக பைனான்ஸ், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் 1980 களிலிருந்து இயங்கி வந்தவர்கள் தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றனர்.


சென்னை கல்லூரியில் உயிரியல் இயந்திரத் தொழில் நுட்பத்தில் (Industrial Bio - Technology) பட்டப்படிப்பை முடித்த திரு.ராகுல் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் (University of Warwick) முனைவர் பட்டத்தினை (PH.D) பெற்றுள்ளார். பல துறைகளில் சிறிது காலம் பணி புரிந்தபின் இந்தியா திரும்பி திரு.ராகுல் விவசாயத் துறையில் மனித குலத்திற்கு பயன்தரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற மனத்தாக்கத்தினால் "கிரீன் ரஷ் ஆர்கானிக்ஸ் (Green Rush Organics) என்ற நிறுவனத்தைத் துவக்கினார். நீர் விவசாயம் (Hydroponics Farms), அக்வா பார்ம்ஸ் கன்சல்டன்சி (Aqua Farms Consultancy) ஆகியவற்றையும் தற்போது 80 சதுர அடி இடத்தில் அடுக்கு விவசாய முறையில் (Vertical Farming) 6000 செடிகளை வளர்த்து சந்தைப் படுத்தி வருகிறார். இவை அனைத்தும் மண்ணில்லா விவசாயமான ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வளர்த்து வருகிறார்.



இவற்றில் வெளிநாட்டு இத்தாலியன் பாஸில் (Italian Basil) கேராம் (Carrom, அஜ்வான், மிண்ட் எனும் புதினா, ஸ்பினாச் (Spinach), லேட்யூஸ் (Lettuce) காலே (kale) மற்றும் பலவகையான மருத்துவ குணம் கொண்ட செடிகளும், கீரைகளும் அடங்கும். இவை அனைத்தும் பிளாஸ்டிக் குழாய்களில் (PVC Pipes) அக்வாபோனிக்ஸ் என்னும் மண்ணில்லா விவசாயம் மூலமாக வளர்க்கப்படுகிறது. தற்சமயம் 450 குடும்பங்களுக்கு மேல் வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்று கூறுகிறார் திரு.ராகுல்.

சிறப்புகள்:

- மண் தேவையில்லை (No Soil)

- குறைந்த அளவு தண்ணீர் தேவை

- குறைந்த இடத்தேவை (Limited Space)

- இரசாயணங்கள் இல்லை (No Chemical)

- தண்ணீர் மூலம் சத்துக்கள் (Nutrients Through water) அளிக்கப் படுகிறது.

- தேவைக்கு ஏற்ப அடுக்குகள் அமைத்துக் கொள்ளலாம்.

- 100 வகையான கீரைகள், காய்கறிகள், சுலபமாக வளர்க்க முடியும்

தற்சமயம் 4 அடுக்கு விவசாயம் முதல் 24, 48, 72, 90, 1000 செடிகள் வளர்க்கும் வகையில் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான நேர்முக பயிற்சிகளும், வழிகாட்டுதல்களும் செய்து கொடுக்க  ஏற்பாடுகள் உள்ளன என்று திரு. ராகுல் அவர்கள் கூறுகிறார்.

                                                            தொடர்புக்கு: திரு.ராகுல்

                                                         அக்வா பார்ம்ஸ் (Aqua Farms)

                                                                               8939549895

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories